ஆஹா, இது மிக மிக அருமையான யோசனை.
டெல்லியில் இருந்து அண்ணாவும் கிளம்பிவிட்டான். அமெரிக்காவில் இருந்து அக்காவும் புறப்பட்டுவிட்டாள். அப்பாவுக்கு ஒரு நாள் முன்பு மிகவும் உடம்பு நலமில்லாமல் போக, டாக்டர் வந்து பார்த்துவிட்டு சொந்தக்காரங்களுக்கு சொல்லிவிடுங்கள் என்று சொல்லிவிட்டு போனார். அப்பாவிற்கு எப்படி இருந்தாலும் 94 வயதாகி விட்டது, முடிய போகிற வாழ்க்கைதானே என்று எல்லோரும் அலட்சியமாக இருக்கும் பொழுது, அவர் சுறுசுறுப்பாக தனது வேலையை பார்த்துக் கொண்டு காலையில் எழுந்து, குளித்து, பூஜை முடித்து, தன் வேலையை பார்த்துக் கொண்டு தேமென்று இருப்பார். சாயங்கால வேலைகளை பளிச்சென்று நெற்றியில் விபூதி பட்டையாக இட்டுக் கொண்டு அந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்து தொலைக்காட்சியில் இருக்கும் சீரியல்களை ஆறு மணிக்கு ஆரம்பித்து படுக்கச் செல்லும் வரை பார்ப்பார். இதற்கு நடுவில் ஏழே கால் மணிக்கு சென்று உணவு அருந்தி விட்டு வந்து விடுவார். இந்த டிவி சீரியல் பார்க்கும் பொழுது தான் அவருடைய கான்சென்ட்ரேஷன் எவ்வளவு என்று சொல்ல முடியாது. யார் வந்தாலும் தெரியாது, யார் போனாலும் தெரியாது. அணுகுண்டு விழுந்தால் கூட தெரியாது என்று சொல்லலாம். மதிய வேளைகளில் வரும...