ஒரு திரைக்கதை ஒரு குறும்படம் ​- தேவை---ஒரு துணை

 தேவை -ஒரு துணை 

சென்ற நாட்கள் , கடந்த நினைவுகள் 

இருப்பது நிகழ்காலம் -தனிமை வேண்டாமே .பழைய நினைவுகளில் மூழ்கும் போது அதை வெளிப்படுத்த ஒரு துணை தேவை என்றால் தேவைதான் 

11 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சந்திப்பில் உருவான அழகான இந்த உறவு.


Montage 

அனந்தன் படித்தல், கம்ப்யூட்டரில் வேலை செய்தல், செல் போனில் பேசுதல் 


Jayy சமயல் அறையில் , இல்லை எனில் ஜன்னல் ஓரத்தில் படித்தால், podcast கேட்டல்,  laptopil வேலை 


ஒரே ஒரு சீன் தான் 


Jayy:-ஹேய்  இன்னிக்கு 67 டிகிரி தான் வாக்கிங் போலாமா?

ஆனந்த்:- ஓகே பட்டு(அவர் அப்படித்தானே  அழைக்கிறார்) ஜஸ்ட் 5 minitues.


Montage  

அப்பறம் என்ன இந்த Seattleஇன் கடற்கரை ஓரமாக பேசிக்கொண்டே நடந்து வருவதற்கும் பசி எடுப்பதற்கும் சீராக இருக்க ஒரு மெக்ஸிகன் உணவகத்தில் நுழைந்தனர் இருவரும்.

Jayy  in pensive  mood 

ஆனந்த் என்ன நினைப்பாரோ தெரியவில்லை நான் நினைப்பது நிஜம்:) இது நிஜமா? அடிக்கடி இந்த கேள்வி எழும்.


 ஒரு காபி குடிக்க , இந்த இயற்கையை ரசிக்க துணை வேண்டுமா என்றால் வேண்டும்தான். இயற்கை நமக்கு கற்பிக்கும் பாடம் இணைந்து வாழ்வதுதானே. 

 

Cut – dining Table

சுடச் சுட காபி 

ஆனந்த்:- பட்டு உன் காபி ரெடி ! பில்டர் காபி எனக்கும், மெஷினில் காபி அவருக்குமாக (என்னோட காபி டம்ளர் டபராவில், அவரது கப்பில் )


கவனிக்க வேண்டியது என்னவெனில் சமையல் வேலைக்காகவோ இல்லை வீடு பார்த்துக்கொள்ளவோ கடமை சார்ந்த உறவு இல்லை இது.


Jayy :- கடவுளே உனக்கு நன்றி, நான் இனி கவலை படப்போவதில்லை. ஏன் எனில் இறக்கும்போது நான் தனியாக இல்லை. எனக்கென்று ஒருவர் இருக்கிறார். இந்த இறங்குமுக வாழ்க்கையில் ஒரு விளக்கு வெளிச்சம் போல , காய்ந்த மரங்களுக்கு மழை போல அன்பை கொட்டிக்கொண்டு, கடமையினால் ஏற்பட்ட பந்தங்களை தாண்டி அன்பினால் மட்டுமே ஏற்பட்டிற்க்கும் இந்த உறவை என்னவென்று சொல்வார்கள்? நட்பா, காதலா, பாசமா ??

(குணா  பட வசன பாணியில்) அதையும் தாண்டி புனிதமானது !


வாய்ஸ் ஓவர் !

மக்களே ஏன் தயங்குகிறீர்கள் சீனியர் சிடிஸின் வயதில் இருக்கும் ஆணோ பெண்ணோ தயங்காதீர்கள், வாழ்க்கை கடந்துவிடும், விரக்தியான நாட்களில் தனிமை உங்களை பார்த்து கேட்க்கும் ஏன் என்று? 

புரிந்து கொள்ளுங்கள்! அன்பை தருவதற்கும் பெறுவதற்கும் வயதோ பாலின வேறுபாடோ தேவை இல்லை.

வேற்று பாலினிதுடன் உறவு கொண்டால் அது உடல் ரீதியான உறவு மட்டுமே  என்ற குறுகிய கண்ணோட்டத்தில் இருந்து விடுபட்டு, பறந்து விரிந்து இருக்கும் இந்த உலகத்தை புதிய கண்ணோட்டத்தில் பாருங்கள். வயது ஒரு வரம்பு இல்லை.


Udal mattume uravalla. Mandhaan uravu. 

Get the courage to live your life to the fullest, 

Montage :- long shots of Anandan and Jayy fading into distance holding hands.

 

Comments

Popular posts from this blog

வெகு நாட்களுக்குப் பிறகு

ஆஹா, இது மிக மிக அருமையான யோசனை.

அங்கும் இங்கும் -கல்யாணமே வைபோகமே!