Posts

Showing posts from July, 2020

சிறுகதை-9 உண்மையில்?

சிறுகதை -9.  உண்மையில் ? உண்மையில் ? இந்த மனிதனின்   ரெஸ்ட்லெஸ் நடையை   பார்த்துக்கொண்டிருந்த எனக்கு   சிந்தனைகள் வெகுவாக சுழன்றுகொண்டிருந்தது . நல்ல உயரம் , செக்க   செவேல்   என்ற நிறம் , முகத்தின்   பாதிக்குமேல் மழிக்கப்படாத தாடி , கூர்ந்த நாசி , நிச்சயம் நல்ல குடும்பத்தில் இருந்து வெளியில் வந்தவனோ அல்லது விரட்டப்படவோன தெரியவில்லை . முடியில்   சடை போட்டிருந்தது . குளித்தே   பல நாட்களாயிருக்கும் என்பதாய் அவனுடைய உடைகள்   உணர்த்தியது . அவன் அருகில் ரெண்டு மூன்று புத்தகம் , ஒரு பாக்   பேக் .  காற்றை நோக்கி வலது   கையையும்   இடது கையையும்   கோபத்துடன் kungfu பாணியில்   குத்திக்கொண்டு கத்திக்கொண்டும் முன்னும் பின்னுமாக   நடந்து கொண்டிருந்தான் . அவன் ஒரு காலில்    ஹவாய்   செருப்பும் , மற்றொரு காலில் நல்ல லெதர்   பாக் ஸ்ட்ராப்   செருப்பும் அணிந்துஇருந்தான் . இவனின் இந்த நிலைமைக்கு   யார்   காரணம் . அவன்   யார் பெற்ற பிள்ளையோ ? எனது தாயுள்ளம்   நெகிழ்ந்தது . வாட்ச்மேன்   மித்ராவை   இன்டெர்காமில் அழைத்தேன் , ' மேல வாப்பா கொஞ்சம் எ