Posts

Showing posts from June, 2020

Randomly writing random thoughts --- Simply Be

People come and people go ! life goes on !. Que sara sara!! Whatever will be will be!! que sara sara..... Once best friends become strangers.Strangers become best friends. Living at the edge is the most interesting and risky. If one chooses being in the comfort zone is the best for self, it is the option taken, every little thing in life is an opportunity chosen by the self and nothing is from outside and nobody's wise guidance is taken cent percent. Free will and intuitive guidance play a huge role in decision making I guess. Thinking and thought process and the eventuality of actions are random but infinitely connected. what is the reason and non reason but why reasons at all in the first place. Lot of gaps everywhere.  What is the need to be harmonious or bickering always. The moment harmony is needed compromising happens. coming to compromising is it true or is it complementing? True are the words of wisdom 'acceptance and tolerance' is only a hair line dif

இங்கே என் எண்ணங்கள்!

சுகமா ?சோகமா? பிரிவுகள்  ஒவ்வொரு காலகட்டத்திலும் வித விதமான அனுபவங்களைத் தரும் போல ! சில சமயங்களில் பிரிவுகள் சுகமே.வெகுவான பல சமயங்களில் பிரிவுகள்  சோகம்தான்.  இறந்த போது சுகம் சோகம் இரண்டுமே!! கான்சரில் வேதனைப்பட்ட அம்மா இறந்தபோது ஒரு கணம் மனம்  வெகுவாக லேசாகிப் போனது சுகமா?சகோதரர்களுடன் இடுகாட்டிற்குச் சென்று அவள் மீது  கொள்ளி வைத்த  தருணத்தில் இனிமேல் அம்மாவைப் பார்க்க முடியாது என்ற உள்ளுணர்வு  மடை திறந்த வெள்ளமாகக் கண்களில் கண்ணீர் !இது சோகம் போலும் . தினமும் அம்மாவிற்குக் காரியம் -அண்ணா  சம்பிரதாயம் தவறாமல் செய்யும் நாட்களில் அந்தி சாயும் நேரத்தில் கொட்டிவாக்கம் மொட்டை மாடியில் அண்ணார்ந்து வானத்தைப்  பார்த்து வாய்விட்டு அழது  'அம்மா இந்த மேகங்களுக்கு இடையில் ஒரு நொடி உன் தெற்றுப்பல் தெரிய ஒரு சின்னச் சிரிப்பை உதிர்த்துவிட்டுப் போவாயா?'என்று பிதற்றிய போது சோகம்.  அந்தி சாய்ந்து இருள் சூழ துவங்கும் நேரத்தில் ஒரே ஒரு நக்ஷத்திரம் மட்டும் தோன்றும்போது 'நீதான் என் அம்மாவோ ?என்று ஆச்சரியப்பட இது சுகமோ!!!என்னைப் பெண்ணாய் இங்குத் தந்து சீராட்டி, பாலூட்டி, என் கழிவு துடைத்து,

உறவும் பிரிவும் !!!!!

உறவும் பிரிவும்  பகல்  வருவதால்தான் தான் இரவு முடிகிறது. விளக்கு வைத்தால் இருள் விலகுகிறது ......ஹ்ம்ம்ம் உறவுகள் இருப்பதால்தான் பிரிவுகள் வருகிறது..... பிரிவில்தான் உறவின் அருமை தெரியும் போல. 2005 ல்  ஸ்கூல்   போக   வேண்டும்   என்ற   எண்ணம்   மனதுக்குள்   அடிக்கடி   தோன்றியது .   ( 2006 ல்  Talentia  என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக ஒரு அவதாரம் ).   என்னிடம் வேலை செய்த பிரிசில்லாவோடு பள்ளி சென்றேன். வகுப்பு ஆசிரியைகளில் ஒருவரான பிலோமினா மிஸ் மரணம் பற்றி கேட்டவுடன் ரோஜா கலர் சீருடை அணிந்த ஜெயந்தியின் மனம் நொந்தது. கண்டிப்பாக அவர் சவப்பெட்டியில் கூட அதேபோல் தலையில் காதோரத்தில் ஒற்றை ரோஜாவுடன் அழகாக பின் செய்த புடவையுடன்  , சிக் என்ற ரவிக்கை ,  மேட்ச்சாக போட்டுக்கொண்ட அழகாக இருந்திருப்பார் என்று ஒரு கணம் தோன்றியது. டீச்சரை நேசிக்காத ஸ்டுடென்ட்ஸ் கிடையாது.அது ஒருவிதமான காதல் , பக்தி.   முதற்காதல்  பள்ளியில் அநேகம் பேர்களுக்கு அவர்கள் டீச்சருடன் ​தா​ ன் , ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சரி. மிஸ்.ஆக்னஸ் குள்ளமான ​, ​ கல்யாணம் செய்து கொள்ளாத ஆனால் கன்னியாஸ்திரி ஆகாத  ' கருப்பு

வாஷிங்டன்னில் கரை சேர்ந்தது!!!!!!!

தடமின்றி செல்லும் வாழ்வில் தடம் படைக்க நினைப்போர் பலர்.   புயல் வந்து தடம் அழிந்து சோகத்தில் அலைவோர்    சிலர். ஒன்றும் நினையாமல் வாழ்வென்னும் நதியில் துடுப்பில்லா ஓடம் போல , என் ஓடம்   காற்றடித்து சென்று வாஷிங்டன்னில் கரை சேர்ந்தது. ஓடக்காரிக்கு முதுகலை பட்டதாரி பட்டம் , தானே வந்து ஓடத்தில் அமரும் கடல்நீர் பறவை போல மென்மையாக வந்து மடியில் விழுந்தது... ஓடம்   கரையில்    இருந்து மீண்டும் நகருமா ? மீண்டும் ஒரு இலக்கு உருவாகுமா ? மீண்டும் ஒரு நாற்சந்தியில் நிற்கும் உணர்வு ,  நண்பர்களும் சுற்றமும் போற்றக்கூடிய இத்தருணத்தில் மனதில் ஒரு நெருடல் , கணவர் மறைந்தா கை கூட வேண்டும் ??  கடல் கடந்து வந்தாலும் , ஆயிரம் புது உறவுகள் ஆனாலும் மனதில் இந்த நெருடல் மண்ணாய் போகிறவரையில் போகாதோ !!!!! ரமணர்தான் சொல்லவேண்டும்... அன்புடன்   ஜெ...

சிறு கதை -1

முதல் கதை . அகப்பட்டவள் நானல்லவோ   இப்போதுதான் போல இருந்தது 10 ஆண்டுகள் கடந்துவிட்டது கணவர் மறைந்து  . மகன்கள் இருவரும் மாற்றி மாற்றி நீ என்ன செய்ய போகிறாய் என்று துளைத்து எடுத்தார்கள் . பெரியவவன் சொன்னான் , ' அம்மா நீ அமெரிக்கா வருவதுதான் best solution . France முடியாது உன்னால , ஏன்னா பாஷை புரியாது . சின்னவனும் அதை ஆமோதித்தான் , ' சரி , அமெரிக்கா போவது மட்டும் easy இல்லையே . 6 மாசத்துல திரும்பி வரணும் . travel ரொம்ப bore . '  இது நான் .'F1  விசா best ஐடியா ' இது பெரியவன் . ' பேசாம நீ அங்க வந்து படி அம்மா , ஒரு அட்மிஷன் வாங்கிண்டு ' ரொம்ப சுலபமா சொல்லிட்டேன் , ஆனால் நீ GRE அண்ட் ToEfl clear பண்ணணுமே , ??? என்னுள் ஒரு இனம் புரியாத thrilling feeling. காலேஜ் , friends and fun  அதுவும் அமெரிக்கால !! ஏன் பண்ணக்கூடாது ? உடனே மகனிடம் , சரி da, நான் try pannaren , Scholarship கிடைச்சா வரேன்னு கெத்தா சொல்லிட்டேன் . ரெண்டு மூணு நாள் ஒரே இன்டர்நெட்ல தேடல் பக்கத்தில் இருக்கும்  GRE &am