Posts

Showing posts from October, 2023

ஒரு திரைக்கதை ஒரு குறும்படம் ​- தேவை---ஒரு துணை

  தேவை -ஒரு துணை  சென்ற நாட்கள் , கடந்த நினைவுகள்  இருப்பது நிகழ்காலம் -தனிமை வேண்டாமே .பழைய நினைவுகளில் மூழ்கும் போது அதை வெளிப்படுத்த ஒரு துணை தேவை என்றால் தேவைதான்  11 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சந்திப்பில் உருவான அழகான இந்த உறவு. Montage  அனந்தன் படித்தால், கம்ப்யூட்டரில் வேலை செய்தல், செல் போனில் பேசுதல்  Jayy சமயல் அறையில் , இல்லை எனில் ஜன்னல் ஓரத்தில் படித்தால், podcast கேட்டல்,  laptopil  வேலை  ஒரே ஒரு சீன் தான்  Jayy:-ஹேய்  இன்னிக்கு 67 டிகிரி தான் வாக்கிங் போலாமா? ஆனந்த்:- ஓகே பட்டு(அவர் அப்படித்தானே  அழைக்கிறார்) ஜஸ்ட் 5 minitues. Montage   அப்பறம் என்ன இந்த Seattleஇன் கடற்கரை ஓரமாக பேசிக்கொண்டே நடந்து வருவதற்கும் பசி எடுப்பதற்கும் சீராக இருக்க ஒரு மெக்ஸிகன் உணவகத்தில் நுழைந்தனர் இருவரும். Jayy  in pensive  mood  ஆனந்த் என்ன நினைப்பாரோ தெரியவில்லை நான் நினைப்பது நிஜம்:) இது நிஜமா? அடிக்கடி இந்த கேள்வி எழும்.  ஒரு காபி குடிக்க , இந்த இயற்கையை ரசிக்க துணை வேண்டுமா என்றால் வேண்டும்தான். இயற்கை நமக்கு கற்பிக்கும் பாடம் இணை ந்து வாழ்வதுதானே.    Cut – dining Table சுடச் சுட காபி 

என்ன என்ன மாற்றங்களோ !

 என்ன என்ன மாற்றங்களோ ! எதை எழுதுவது ?எதை விடுவது? டெக்னாலஜியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அம்மியில் இருந்து அம்மா வரை எல்லாம் மாறிவிட்டன. இனி வரும் காலங்களில் இப்போதைய  போன்கள், ஜூம் மீட்டிங்குகள், சோசியல் மீடியா சமாச்சாரங்கள் எப்படி மாறும் என்று யோசித்தால், அப்பப்பபா தலை சுற்றுகிறது. இதோ என் பார்வை :- ஆசிரியர் இல்லாத வகுப்பறைகள், விரல் முனையால் எழுதக்கூடிய கரும்பலகைகள்,(lazer touch screens )மருத்துவர் இல்லாத அறுவைசிகிச்சைகள், சர்வர் இல்லாத சிற்றுண்டி சாலைகள், ஸ்விட்ச் இல்லாத சென்சாரில் இயங்கும் மின்சார விளக்குகள் ஆகியவை வந்துவிட்டன. சாலையெங்கும் தானியங்கி போலீஸ்காரர்கள், கணக்கு எழுதுபவர்கள்-அக்கவுண்டண்ட்கள் , admin டிபாட்மென்ட் , ஆடிட்டர்கள்,பேருந்துகள், ஆட்டோக்கள், விமானங்கள் மற்றும் எல்லை பாதுகாப்பு, technolgy everywhere  இன்னும் உயிருள்ள அப்பா அம்மாவை போன்றே பேசக்கூடிய ரோபோடிக் அம்மா அப்பா, வளர்ப்பு பிராணிகள் ! வீடு வாசல் எங்கெங்கு பார்ப்பினும் இயந்திர மயம் இல்லை இல்லை மாயம். 5 வயது குழந்தைக்கு வண்டி ஓட்ட லைசென்ஸ் ஏனென்றால் வண்டி ஆட்டோமேட்டிக் தானே.  விதைக்கும் முன்னே விளைந்துவிடும்

இந்த சந்திப்பு.........

இந்த சந்திப்பு......... சன்பிரான்சிஸ்கோ  விமான நிலையத்தில் அந்த புட் கோர்ட் வளாகத்தில் அமர்ந்து கொண்டு தனியாக தன்  மகளுடன் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார் இவர். ஒரு நிமிடம் தூக்கிவாரிப் போட்டது. 'ஓ மை காட் ! dr.கேத்தலீன்  கரிக்கோ. இவர் இன்று உலகம் முழுவதும் பேசப்படும் MRNA வாக்சினை கண்டுபிடித்த விஞ்ஞானிகளில் ஒருவர். இவர், இவருடைய நண்பர் dr.ட்ரு வைஸ்மன் இருவரும் கொரோனா தொற்றிலிருந்து உலக மக்களை  காப்பாற்றிய MRNA (messenger Ribonucleic acid- செய்தி பரிமாற்ற ரிபோநியூகிளிக் அமிலம்) கண்டுபிடித்தவர்கள். அவர்கள் இருவருடன் ஒரு 16 மணி நேர பயணம். நடு நடுவே புன்னகை பரிமாற்றம். இந்த இரண்டு பேர்கள் மட்டுமின்றி டாக்டர் பீட்டர் க்யூல்லிஸ்(இவர் வாக்சினை ரத்தத்தில் செலுத்தும் முறையை கண்டுபிடித்தவர்) அடங்கிய குழவிற்கு 'கிராண்ட் அவார்ட்' வின் பியூச்சர் அவார்ட்ஸ்(VINFUTURE AWARDS -VIN group of companies) வழங்கியது .இந்த விழா  ஹனோய் வியட்நாம் நகரத்தில் 19 ஜனவரி 2022 அன்று நிகழ்நதது. இவர்கள் கண்டுபிடிப்புக்கு உலகத்திலேயே  முதன் முறையாக  3 மில்லியன் அமெரிக்கா டாலர்கள் பரிசாக வழங்க பட்டது.  M