இந்த சந்திப்பு.........

இந்த சந்திப்பு.........


சன்பிரான்சிஸ்கோ  விமான நிலையத்தில் அந்த புட் கோர்ட் வளாகத்தில் அமர்ந்து கொண்டு தனியாக தன்  மகளுடன் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார் இவர். ஒரு நிமிடம் தூக்கிவாரிப் போட்டது. 'ஓ மை காட் ! dr.கேத்தலீன்  கரிக்கோ. இவர் இன்று உலகம் முழுவதும் பேசப்படும் MRNA வாக்சினை கண்டுபிடித்த விஞ்ஞானிகளில் ஒருவர். இவர், இவருடைய நண்பர் dr.ட்ரு வைஸ்மன் இருவரும் கொரோனா தொற்றிலிருந்து உலக மக்களை  காப்பாற்றிய MRNA (messenger Ribonucleic acid- செய்தி பரிமாற்ற ரிபோநியூகிளிக் அமிலம்) கண்டுபிடித்தவர்கள். அவர்கள் இருவருடன் ஒரு 16 மணி நேர பயணம். நடு நடுவே புன்னகை பரிமாற்றம். இந்த இரண்டு பேர்கள் மட்டுமின்றி டாக்டர் பீட்டர் க்யூல்லிஸ்(இவர் வாக்சினை ரத்தத்தில் செலுத்தும் முறையை கண்டுபிடித்தவர்) அடங்கிய குழவிற்கு 'கிராண்ட் அவார்ட்' வின் பியூச்சர் அவார்ட்ஸ்(VINFUTURE AWARDS -VIN group of companies) வழங்கியது .இந்த விழா  ஹனோய் வியட்நாம் நகரத்தில் 19 ஜனவரி 2022 அன்று நிகழ்நதது. இவர்கள் கண்டுபிடிப்புக்கு உலகத்திலேயே  முதன் முறையாக  3 மில்லியன் அமெரிக்கா டாலர்கள் பரிசாக வழங்க பட்டது. 


MRNA கண்டுபிடிப்பு பற்றி ஒரு சிறிய குறிப்பு.

MRNA---எம்ஆர்என்ஏ தசை செல்களுக்குள் நுழைந்து, ஸ்பைக் புரதம் என்று அழைக்கப்படும் பாதிப்பில்லாத பகுதியை உற்பத்தி செய்ய செல்களின்

இயந்திரங்களுக்கு அறிவுறுத்தும். கோவிட்-19 ஐ ஏற்படுத்தும் வைரஸின் மேற்பரப்பில் ஸ்பைக் புரதம் காணப்படுகிறது. புரதத் துண்டு தயாரிக்கப் பட்ட பிறகு, நமது செல்கள் எம்ஆர்என்ஏவை உடைத்து அதை அகற்றும்.

அடுத்து, நமது செல்கள் அவற்றின் மேற்பரப்பில் ஸ்பைக் புரதத் துண்டைக் காட்டுகின்றன. நமது நோயெதிர்ப்பு அமைப்பு புரதம் அங்கு இல்லை என்பதை அங்கீகரிக்கிறது. இது நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்ய தூண்டுகிறது மற்றும் மற்ற நோயெதிர்ப்பு செல்களை செயல்படுத்தி அது தொற்று என்று நினைப்பதை எதிர்த்து போராடுகிறது. நீங்கள் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், உங்கள் உடல் தொற்றுநோயை எதிர்த்துப் போராட இதைத்தான் செய்யும். (நன்றி-'dr.கேத்தலீன்  கரிக்கோவின் குறிப்பேடு)

 


விழா நடந்த அன்று அவருடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது.

 இனி, 

dr.கேத்தலீன்  கரிக்கோ, அருகில் சென்று, 'உங்களை பார்க்கும்போது எனக்கு எண்ணற்ற அலையாக மக்கள் தான் தெரிகிறார்கள், மிக்க நன்றி என்றேன். அவர் சிரித்தவாறே, (அடிக்கடி சிரிக்கிறார் கண்களை சுருக்கி கொண்டு).'இது டீம் effort 'என்றார். இருவரும் ஒரே விமானத்தில் வியட்நாம் பயணித்து கொண்டிருக்கிறோம். மிக சந்தோஷமாக இருந்தது.

இந்த பெண்மணியை பற்றி இணையதளங்களிலும் , காணொளிகளிலும்  நிறைய விஷயங்கள் கொட்டி கிடக்கிறது. படிப்பதற்கு, பார்ப்பதற்கு  தான்  நேரம் இல்லை.. இந்த 1 மணி நேர உரையாடலில் நான் கண்டது அவருடைய மறுபக்கம். ஆம்.மிக எளிமையான ஸ்நேகமான ஒரு பெண்மணியின் வழிப்பயண நட்பை போன்ற உணர்வு. வெகு நாட்கள் பழகிய உணர்வு. உலகத்தில் அனைவரும் கொரோனா இம்சையால் தொல்லை பட்டுக்கொண்டு, விடியல்  வருமா வராதா ? என்ற கேள்விகளை மனதில் வைத்துக் குழப்பிக்  கொண்டிருக்கும் போது, அமைதியாக தனது நண்பர் டாக்டர் ட்ரு வைஸ்மன் அவர்களுடன் சேர்ந்து தொடர் ஆராய்ச்சிகளை ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருக்கையில் , ஜன்னல் வழியே வெளியே பார்த்துக் கொண்டு இருந்தவர், ட்ரு வை திரும்பி நோக்கி சொன்னார்,' 'நாம் இந்த MRNA வாக்சினை உபயோக படுத்தும் நேரம் வந்துவிட்டது என்று கிளம்பினர் இருவரும், மீதி கதை உங்களுக்கே தெரியும்,  தங்கள் படைப்பை உலக மக்களுக்கு உரித்தாக்கினார்கள். இன்று கோடானு கோடி மக்களை காப்பாற்றிய MRNA வாக்சின் இவர்களுடைய கிட்டத்தட்ட 20 ஆண்டு ஆண்டு கால உழைப்பு. 

இவர்களிடம் கேள்வி கேட்கும் அளவுக்கு எனக்கு விஞ்ஞானம் தெரியாது, ஆனாலும் ஒரு பாமர மனிதனின் மனதில் எழும் சாதாரண இரண்டு கேள்விகளுக்கு Dr.கரிக்கோ சொன்ன பதில் இங்கு பகிர்ந்து இருக்கிறேன். 

என்னுடைய முதல் கேள்வி,  இந்த கொரோனா வைரஸ்சின் எதிர்காலம் என்ன, இன்னும் எவ்வளவு மாறுபாடுகள் நேரக்கூடும் என்பது பற்றிய ஆராய்ச்சிகள் நடக்கின்றனவா?

'என்னிடம் அதற்கு பதில் சொல்ல crystal ball இல்லை' என்று சிரித்துக்கொண்டே கூறிய டர்.கரிக்கோ தொடர்ந்து, 'mutation பற்றி திட்டவட்டமாக கூறுவது இப்போது சிரமம்.. ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. , 'ஆனால், 'Pan கொரோனா ' வாக்சின், என்ற ஒரு புதிய வாக்சினை கண்டுபிடிக்க மிக மும்முரமாக  ஆராய்ச்சிகள் நடந்து கொண்டு இருக்கிறது. டாக்டர் ட்ருவும், அமெரிக்க ராணுவ ஆராய்ச்சி நிலையமும்   சேர்ந்து முயன்று கொண்டு இருக்கிறார்கள். இது தான் எதிர்காலத்தில் மிக நல்ல பலன் தரப்போகிறது.  'Pan கொரோனா வாக்சின் நடைமுறைக்கு வரும்போது, இந்த ஒரு தடுப்பூசி மட்டுமே  மீதமுள்ள தொற்றுக்கள,  infuenza போன்ற தொற்றுக்கும், இன்னும் பல விதமான நோய் கிருமிகளுக்கும் கிருமிநாசினியாக அமையும்.'என்று சொன்னார் .

இரண்டாவது கேள்வி, இப்போது நாம் எடுத்துக்கொண்ட தடுப்பூசியின் காக்கும் தன்மை, அதன் பலன் நமது உடலில் இன்னும் எத்தனை நாட்கள், மாதங்கள்,அல்லது வருடங்கள் செல்லுபடியாகும் என்று சொல்ல முடியுமா?

இதற்கும் தலையயை அசைத்தவாறே சிரித்துக்கொண்டே'  NO !! crystal ball  again ' தொடர்ந்து மேலும், 'என் போன்ற விஞ்ஞானிகளுக்கு அதற்கு பதில் இப்போது சொல்வது கடினம், ஏற்கனவே தகவல் சேகரிப்பு செய்ய ஆரம்பித்து இருக்கிறோம், இப்போது இருந்து இன்னும் ஒரு வருட காலத்திற்குள் தடுப்பூசி போட்டுக்கொண்ட   எத்தனை பேருக்கு மீண்டும் இந்த தொற்று ஏற்படுகிறது என்று பார்த்து அவர்களது தனித்தன்மையான உடல் உபாதைகளையும் கருத்தில் மேற்கொண்டு ஆராய்ச்சிகள் தொடருவோம்' என்றார். மேலும், இன்னும் இரண்டு மாதங்களில் வைரஸின் பரவும் தன்மை எப்படி இருக்கும் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் ஏன் என்றால் தனி மனித ஆரோக்கியத்தின் நிலைதான் mutation மாறுபட செய்கிறது.' சிறிது நேரம் யோசித்தார் , ' WE will do  our  best continiously , '. என்றார். 'உங்கள் எதிர்கால ஆராய்ச்சி எதைப் பற்றியதாக  இருக்கும்?' என்று கேட்டேன் ,அவர் 'இருதய நோய், TB, மலேரியா எல்லாவற்றிற்கும் பொதுவான ஒரு வாக்சின் என் கனவு என்றார்.'உங்கள் கனவு மெய்ப்பட என் பிரார்த்தனைகள் ' என்றேன்.

மிக எதார்த்தமாக தான் தழுவிய சிகரங்களை பற்றி துளியும் கர்வப்படாமல், அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த பெரும்பாலோர் செல்பி எடுக்க முகம் சுளிக்காமல் சளைக்காமல் நின்று எடுத்துகொண்டார்.  கற்றவர்களும் மேன் மக்களும் என்றும் பணிவுடன் தான் நடக்கிறார்கள் என்பது நான் அனுபவித்த உண்மை.

நிகழ்ச்சி முடிந்து, டின்னர் சாப்பிடும் போது என்னுடைய எதிர்த்த பக்கம் அமர்திருந்தார், படு கேஸூவலாக 'நீ எப்படி இன்னும் மூன்று வாரம் வியட்நாமில் சமாளிப்பாய்' , என்று மிக ஞாபகமாக நான் ஏரோபிளானில் பணிப்பெண்ணிடம் என்னுடைய வெஜிடேரியன் உணவு ஆர்டர் செய்த போது கவனித்திருக்கிறார். நான் நெகிழ்ந்து விட்டேன். 'இப்படித்தான்' என்றேன்.

உணவு முடிந்த பிறகு நான் தயக்கத்துடன் ஒரு செல்ஃபீ கேட்டேன், உற்சாகமாக தன் பெண் சூசனையும் அழைத்து  என்னுடன் ஒரு செல்பி எடுத்துக் கொண்டார். . நான் சொன்னேன் நமது சந்திப்பை நான் ஒரு blog ஆக எழுதுவேன், உங்களுக்கு ஆட்ஷேபனை இல்லை என்றால்?? என்றேன் தயங்கியவாறே. 'sure  sure!' don't forget to share''  பிறகு தன் கைபேசி நம்பர் என்னுடன் பகிர்ந்தார், மீண்டும் சின்ன புன்சிரிப்புடன்,லேசாக தழுவி 'குட் லக்' என்று கையை அசைத்து அவரது நண்பர்கள் நின்றிருந்த திசையை நோக்கி சென்றார். 

நான் நிலைக்கு வர சில நிமிடங்கள் பிடித்தது. சாதிப்பது பெரிதில்லை, சாதித்தாலும் இவர்  போல வாழ்வது எளிது என்று சொல்லாமல் சொல்லிவிட்டு சென்றார் போல் இருந்தது.பல முறை நான் மிக பெரிய செலிபிரிட்டிஸ் செல்லும்  பிசினஸ் கிளாசில் பயணித்திருக்கிறேன். இவர் போல ஒருவரை நான் கண்டதில்லை. கடவுள் இவருக்கும் இவரது குழுவிற்கும் பக்க பலமாக இருந்து மனித குலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த இவர்கள் செய்யும் ஆராய்ச்சிகளில் வெற்றி கிடைக்க அருள் பாலிப்பார் என்று பரிபூரணமாக நம்புகிறேன்.  .சாதனை பெண்மணி டாக்டர்.dr.கேத்தலீன்  கரிக்கோ, துரித நடையில் சென்று அவரது காரில் ஏறும் வரை அங்கே இருந்த எனர்ஜி மிக வித்யாசமாக இருந்ததை உணர்ந்தேன். .  



Comments

Popular posts from this blog

வெகு நாட்களுக்குப் பிறகு

ஆஹா, இது மிக மிக அருமையான யோசனை.

அங்கும் இங்கும் -கல்யாணமே வைபோகமே!