பெற்றால் தான் பிள்ளையா -சிறுகதை-10

15/10/20

காலையில் இருந்து ஒரே பரபரப்பு . 7 கப் கேக் ஸ்வீட் செய்தாகிவிட்டது. டிரைவர் தனசேகர் கொண்டுவந்த மல்லிப்பூவை சஷ்டியுடன் சேர்ந்து நல்ல நெருக்கமாக தொடுத்து எடுத்துவைத்துவிட்டேன். சுவேதா  என்னுடைய பிளவுசை டைட்டாக பிடித்துவைத்தாள் . அந்த வெங்காய கலர் ஜெய்ப்பூர் காட்டன் சாரீ நிச்சயமாக அவளுக்கு நன்றாக இருக்கும் என்று ஒரு மெல்லிய சந்தோஷம் புன்னகையாக என் முகத்தில் தவழ்ந்தது. பிள்ளை வீட்டார் 3.30 மணிக்கு வந்துவிடுவார்கள். காபி பில்டர் போட்டுவிட்டு, கொஞ்சம் ஸ்னாக்ஸ் ஸ்விக்கியில் ஆர்டர் செய்து  விட்டேன். நடு நடுவே வீடு சமையல் வேறு. எல்லாவற்றையும் முடித்து நான் புடவை மாற்றிக்கொள்ள சென்றேன். ஜூஹி இன்னும் வரவில்லையே என்று மொபைலில் வாட்சப்பை (whatapp) அடிக்கடி பார்த்துக்கொண்டிருந்தார் இவர். எங்கள் இருவருக்கும் இன்று மிக முக்கியமான நாள். ஜூஹியை பெண் பார்க்க வருகிறார்கள். 
பிள்ளைகள் எல்லாரும் வெளிநாட்டில் வாசம். நங்கள் இருவரும் இங்கே இந்தியாவில். ஆதரவாக அன்புடன் பேச துணையாக பெண் குழந்தை !நினைவலைகள் பின்னோக்கி சென்றது.
 எப்படி ஜூஹி எங்கள் மகளானாள் !!!!!
அந்த காலை பொழுது இனிதே பிறந்தது. இவரும் நானும் அந்த 5 நட்சித்திர ஹோட்டலை நோக்கி கடற்கரையோரமாக நடந்து சென்றோம்!  இன்று நடக்கவிருக்கும் சந்திப்பு நாளை என்னவாக மாறும் என்ற எண்ணம் இல்லாமலே.!
இருவரும் சென்று உடையை மாற்றிக்கொண்டு நீச்சல் குளத்தின் அருகில் சென்று காத்திருந்தோம். எங்கள் உடற்பயிற்சி நீச்சல் குளத்தில் உள்ளே உள்ள நிற்கும் சைக்கிளில் சுழற்சி செய்வதுதான். இதை சொல்லிக்கொடுக்கும் டிரைனராகத்தான் இந்த ஜூஹியை சந்தித்தோம். மான் போன்ற கரிய விழிகள், அதில் ததும்பும் மாசற்ற குழந்தை மனம். எங்களை அந்த சைக்கிளில் ஏற சொல்லி பயிற்சியை ஆரம்பித்தாள். நாட்கள் நகர்ந்தன . இது மிக அழகான ஒரு உடற்பயிற்சி. வியர்த்து கொட்டாமல், அதே சமயம் நல்ல கலோரிஸ் செலவழிக்கும் ஒரு பயிற்சி. நாங்கள் உடற்பயிற்சியுடன் ஒரு உள்ளார்ந்த நட்புடன் இந்த ஜூஹியுடன் பழக ஆரம்பித்தோம்.இடையே இவரது பிறந்த நாள் வர வீட்டிற்கு டின்னருக்கு அழைத்தோம். பேச்சுவாக்கில் அவளுடைய குடும்பத்தை பற்றி பேச, தெரிந்த உண்மைகளில் என் மனது வேதனை பட்டது. அந்த கணத்திலே அவள் என் மகளாகி போனாள் . அதில் இருந்து, அடிக்கடி சந்தித்தோம். ஒரு வருடம் போல ஓடிவிட்டது . எனது வழக்கமான  ரமணாஸ்ரம பயணத்தின் போது  அவளை அழைத்துக்கொண்டு சென்றேன். என்னை அம்மா என்றும் இவரை அப்பா என்றும் அழைக்குமளவு உறவு வளர்ந்தது. விளையாட்டாக அவளிடம் எங்கள் சியாட்டில் நண்பன் கணேஷை அறிமுகம் செய்ய அவர்கள் உறவு மிக தீவிரம் ஆனது. 
நிஜமாகவே என்னை அவள் அன்னையாக பாவிக்க, நான் அவளை மகளாக நினைக்க  தொடங்கிய நான் கணேஷுடைய தாய் தந்தையை தொடர்பு கொண்டு பேசினேன். அவர்கள் வர சம்மதித்தனர். இவர் ஜூஹி புடவைதான் கட்டவேண்டுமென்று சொல்ல, அப்பாவும் மகளுமாக என் புடவைகளை தேடி அழகான புடவையை தேர்ந்தெடுத்தாள். இப்போது நம் வீட்டில் இன்று அவளை பெண் பார்க்க வருகின்றனர். ஜூஹியை புடவையை கட்ட சொல்லி அவளுக்கு பூ வைத்து அலங்காரம் பண்ணும்போது, எங்கள் இருவரின் குரலும் தழதழத்தது. அம்மா இருந்தும் இல்லாமல்  இருக்கும் ஒரு நிலை, குழந்தைகள் இருந்தும்  உடன் இப்போது இல்லாத ஒரு நிலை அங்கு சங்கமம் ஆகியதோ?  இருவரும் கட்டி அணைத்துக்கொண்டு  ஒரு நிமிடம் நின்றோம். கண்களில் வெப்பம். 
கணேஷின் வீட்டினர் வந்து அவளை பார்த்து மிகுந்த சந்தோஷத்துடன் விடைபெற்று சென்றனர். ஜூஹியால் இந்த விஷயத்தை ஒப்புக்கொள்ள முடியாமல் ஒரு ...excitement .. மீண்டும் மீண்டும் எங்களை கட்டிக்கொண்டு தேங்க்ஸ் தேங்க்ஸ் என்று தேம்பினாள். ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு! உடலின் ரத்தநாளங்களில் வீணை வாசித்தது.
மனதளவில் நான் உணர்தேன், பெற்றால் தான் பிள்ளையாக வேண்டும் என்று இல்லை. அதே சமயம் அவள் சொன்னாள் வயிற்றில் பிறந்தால்தான்  அம்மாவாக வேண்டும் என்று இல்லை என்று. அங்கு ஒரு சொந்தம் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் !!!!!! 
யார்  பெற்ற பெண்ணோ இன்று என்னை மீண்டும் அன்னையாகக்கியது. அந்நிய மனிதர்களை நாம் அப்படியே ஏற்றுக்கொள்ளும்போது நாம் அங்கு இருப்பதில்லை, இறைவனும் இறையான்மையும் தான் இங்கு இருக்கிறது. அன்பும் பாசமும் சூலுற்ற மேகம் பிரசவிக்கும் மழைத்துளி மாதிரி,  மென்மையான தூறல் மாதிரி!!!!   பெய்யும் இடத்தில உயிர் பெறும் புல் போல,!!!!!! மனசார அன்பு வைத்தால் உடலும் மனமும் நிறைய அமைதியும் திருப்தியும் ! உணர்ந்தால் தான் உண்மை !!!! ஆராய்வதைவிட அனுபவித்தல் நலம். 
என்னை சுற்றி எங்கிலும் இதை நான் முழுமையாய் உணர்கிறேன். 
வயதானவர்களை பெற்றோர்களாகவும், சின்ன வயதினரை குழந்தைகளாகவும் நேசிப்பதில் கிடைப்பது உறவுகள் மட்டும் இல்லை, மனித நேயம் இறக்கவில்லை என்ற உறுதியான எண்ணமும்தான்.
அன்புடன் 
ஜெ ........

' There will be times in life when impossibility is felt, but there are dreams and dreams allow us possibility'-Jeffrey David Lang.


Comments

  1. நெகிழ்ச்சி தரக்கூடிய பதிவு... அருமை!

    ReplyDelete
  2. பகிர்ந்த கதை மிக மிக அருமை . வார்த்தைகள் அனைத்தும் காட்சிகளாய் கண்முன்னே நின்று மனதை நெகிழ வைத்தது . கதையில் வரும் கதாபாத்திரங்களின் உண்மையான அன்பு , மனித நேயம் இவ்வுலகில் இன்னும் இருக்கிறது என்பதை நிரூபிக்கிறது .

    ReplyDelete
  3. very nice!! i could feel the emotions

    ReplyDelete

Post a Comment

leave your feedback please

Popular posts from this blog

இந்த சந்திப்பு.........

அங்கும் இங்கும் -கல்யாணமே வைபோகமே!

 அம்மா---உன்னை காணாமல்