என்ன என்ன மாற்றங்களோ !

 என்ன என்ன மாற்றங்களோ !

எதை எழுதுவது ?எதை விடுவது?

டெக்னாலஜியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அம்மியில் இருந்து அம்மா வரை எல்லாம் மாறிவிட்டன. இனி வரும் காலங்களில் இப்போதைய  போன்கள், ஜூம் மீட்டிங்குகள், சோசியல் மீடியா சமாச்சாரங்கள் எப்படி மாறும் என்று யோசித்தால்,
அப்பப்பபா தலை சுற்றுகிறது.
இதோ என் பார்வை :- ஆசிரியர் இல்லாத வகுப்பறைகள், விரல் முனையால் எழுதக்கூடிய கரும்பலகைகள்,(lazer touch screens )மருத்துவர் இல்லாத அறுவைசிகிச்சைகள், சர்வர் இல்லாத சிற்றுண்டி சாலைகள், ஸ்விட்ச் இல்லாத சென்சாரில் இயங்கும் மின்சார விளக்குகள் ஆகியவை வந்துவிட்டன.
சாலையெங்கும் தானியங்கி போலீஸ்காரர்கள், கணக்கு எழுதுபவர்கள்-அக்கவுண்டண்ட்கள் , admin டிபாட்மென்ட் , ஆடிட்டர்கள்,பேருந்துகள், ஆட்டோக்கள், விமானங்கள் மற்றும் எல்லை பாதுகாப்பு, technolgy everywhere  இன்னும் உயிருள்ள அப்பா அம்மாவை போன்றே பேசக்கூடிய ரோபோடிக் அம்மா அப்பா, வளர்ப்பு பிராணிகள் !
வீடு வாசல் எங்கெங்கு பார்ப்பினும் இயந்திர மயம் இல்லை இல்லை மாயம். 5 வயது குழந்தைக்கு வண்டி ஓட்ட லைசென்ஸ் ஏனென்றால் வண்டி ஆட்டோமேட்டிக் தானே. 
விதைக்கும் முன்னே விளைந்துவிடும் ஆச்சர்யம் கூட நடக்கலாம். laptop போல throat in அதாவது தொண்டையில் ஒரு சிப் பொறுத்திவிட்டால் போதும், அது மூளையில் இருந்து புரிந்துகொண்டு மொழி மாற்றத்துடன் தொண்டை மூலம் பேச்சு வடிவம் எடுக்குமோ என்னவோ?! 
விளையாட்டுத் துறையில் எல்லாமே ரோபோக்கள், R -20  கிரிக்கெட் matches, இப்போது வீடியோ கேம்ஸ் விளையாடுவது போல மைதானத்தில் இயந்திர மனிதர்கள் விளையடுவார்களோ என்னவோ?
குழந்தை பெற்றெடுப்பதில் இருந்து பியூனெரல் வரை எல்லாவற்றிலும் மாற்றங்கள் வரும் அது நிச்சயம், elitism நிச்சயம் வரும் தாறுமாறாக கிளாஸ் consciousness, ஏன் தெரியுமா, சீனாவில் தயாரிக்கும் ரோபோவிற்கும் ஆப்பிள் நிறுவன ரோபோவிற்கும் இருக்கும்  போட்டி, அதை உபயோகிக்கும் மக்களுக்குள் இயந்திர ஏற்றத்தாழ்வுகள்  வரும். 
காலத்தால் மாறாதது நேசித்தல், காதல், பாசம், பக்தி பரோபகாரம் இவை? இதிலும் மாற்றம் வருமா? வரலாம். 
பொறுத்திருந்து பாப்போம் என்று சொல்ல வயதில்லை எனக்கு. பார்க்காமல் போவதில் ஒரு சின்ன நிம்மதி கூட வருகிறதே அது ஏன் ? உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்.

Comments

Popular posts from this blog

இந்த சந்திப்பு.........

அங்கும் இங்கும் -கல்யாணமே வைபோகமே!

நாலு பேர்