வாஷிங்டன்னில் கரை சேர்ந்தது!!!!!!!
தடமின்றி செல்லும் வாழ்வில் தடம் படைக்க நினைப்போர் பலர்.
புயல் வந்து தடம் அழிந்து சோகத்தில் அலைவோர் சிலர்.
ஒன்றும் நினையாமல் வாழ்வென்னும் நதியில் துடுப்பில்லா ஓடம் போல, என் ஓடம் காற்றடித்து சென்று வாஷிங்டன்னில் கரை சேர்ந்தது.
ஓடக்காரிக்கு முதுகலை பட்டதாரி பட்டம், தானே வந்து ஓடத்தில் அமரும் கடல்நீர் பறவை போல மென்மையாக வந்து மடியில் விழுந்தது...
ஓடம் கரையில் இருந்து மீண்டும் நகருமா ?
மீண்டும் ஒரு இலக்கு உருவாகுமா ?
மீண்டும் ஒரு நாற்சந்தியில் நிற்கும் உணர்வு,
நண்பர்களும் சுற்றமும் போற்றக்கூடிய இத்தருணத்தில் மனதில் ஒரு நெருடல், கணவர் மறைந்தா கை கூட வேண்டும் ??
கடல் கடந்து வந்தாலும், ஆயிரம் புது உறவுகள் ஆனாலும் மனதில் இந்த நெருடல் மண்ணாய் போகிறவரையில் போகாதோ !!!!!
ரமணர்தான் சொல்லவேண்டும்...
அன்புடன்
ஜெ...
Comments
Post a Comment
leave your feedback please