சிறுகதை-9 உண்மையில்?

சிறுகதை-9. உண்மையில்?

உண்மையில்?

இந்த மனிதனின் ரெஸ்ட்லெஸ் நடையை பார்த்துக்கொண்டிருந்த எனக்கு சிந்தனைகள் வெகுவாக சுழன்றுகொண்டிருந்தது. நல்ல உயரம், செக்க செவேல் என்ற நிறம், முகத்தின் பாதிக்குமேல் மழிக்கப்படாத தாடி, கூர்ந்த நாசி, நிச்சயம் நல்ல குடும்பத்தில் இருந்து வெளியில் வந்தவனோ அல்லது விரட்டப்படவோன தெரியவில்லை. முடியில் சடை போட்டிருந்தது. குளித்தே பல நாட்களாயிருக்கும் என்பதாய் அவனுடைய உடைகள் உணர்த்தியது. அவன் அருகில் ரெண்டு மூன்று புத்தகம், ஒரு பாக் பேக்காற்றை நோக்கி வலது கையையும் இடது கையையும் கோபத்துடன் kungfu பாணியில் குத்திக்கொண்டு கத்திக்கொண்டும் முன்னும் பின்னுமாக நடந்து கொண்டிருந்தான். அவன் ஒரு காலில்  ஹவாய் செருப்பும், மற்றொரு காலில் நல்ல லெதர் பாக் ஸ்ட்ராப்  செருப்பும் அணிந்துஇருந்தான்.இவனின் இந்த நிலைமைக்கு யார்  காரணம். அவன் யார் பெற்ற பிள்ளையோ? எனது தாயுள்ளம் நெகிழ்ந்தது. வாட்ச்மேன் மித்ராவை இன்டெர்காமில் அழைத்தேன், ' மேல வாப்பா கொஞ்சம் என்றேன்' வந்தவனிடம் ஒரு பாட்டில் தண்ணீரும், அலுமினியம் foilலில் 4 மிளகாய்ப்பொடிதடவிய இட்லியும் கொடுத்தேன். 'மித்ரா, இதை அந்த ஆளிடம் குடு' என்றேன்'. வினோதமாய் என்னை பார்த்துக்கொண்டு அவன் சென்றுவிட்டான். மித்ரா அந்த டிபனை நம்ம ஹீரோவிடம் கொடுக்கிறானா என்று, படுக்கை அறை பலகணிக்கு சென்று பார்த்தேன்அதை வாங்கியவன், தண்ணீரை அவசர அவசரமாக குடிப்பதையும் பார்த்தேன். என் கண்களில் வெப்பம்.!!!! ஏன் ஏன் என்று யோசிக்கிறேன். அவன் பயித்திமா, இல்ல நாம் , மீன் சொசைட்டி அவனை விலக்கியதால் இப்படி ஆகிவிட்டதா இவன் நிலை என்று அவனைவிட்டு எண்ணங்கள் விலகாமலே மற்ற பணிகளை தொடர்ந்தேன் .

யோசித்துப்  பார்க்கையில் ஒரு வகையில் நாம் எல்லாருமே பைத்தியங்கள்தான். பல வேறு மாதிரி, சுற்றம், மது, சிகரெட் , பெண்கள், சொத்துநகை , சாமியார், ஆஸ்ரமம், பாலிடிக்ஸ், சினிமா, ஊர் சுற்றல், பதவி, பக்தி, இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். இங்கு கீழே இருக்கும் மனிதனுக்கும் நமக்கும் என்ன வித்யாசம்?
ணமான அவனுக்கும் எனக்கும் இடையில் என்ன வித்யாசம் , அவன் கண்களில் தெரிவதில் ஒரு பற்று இல்லை, நாம் பற்றில்லாமல் பார்ப்பதில்லை. என் மக்கள், என் குடும்பம், அவர்களிலே சிலர் வேண்டும் சிலர் வேண்டாம் என்ற பாரபட்சம்.ஹ்ம்ம்ம்.சக மனிதனுக்கு வலி கொடுப்பதின் மூலம் மனிதன் செய்த தவறுகளில் இருந்து உண்மையில் கற்றுக்கொள்கிறானா? தெரியவில்லை

சில நேரங்களில் மனம், மனிதன் ஒரு சூழ்நிலைவாதி என்று சொல்கிறது. Sometimes mind says that MAN IS A SITUATIONIST…He remains good or bad as the need arises…Uhhhhhhhh!!!.... தேவை எழுந்தவுடன் அவர் நல்லவராகவோ அல்லது கெட்டவராகாவோ  இருக்கிறார். ..... 

என்னன்னவோ எண்ணங்கள். எல்லாவற்றையும் தள்ளிவிட்டுஇன்று ஏன் இந்த எண்ணங்கள், எதற்காக அடிமைதனம்சுதந்திரம் பற்றி யோசிக்கிறேன். மனம் இந்த கேள்வியை அடிக்கடி கேட்கும். இதை படிப்பவர்களின் யாராவது பதில் தெரிந்தால் சொல்லுங்களேன். ' நாம் உண்மையில்  சுதந்திரமானவர்கள் தானா ? இல்லை ஏதாவது ஒரு வகையில் எதற்காகவாவது அடிமைப்பட்டிருக்கிமோ?, தனிமையும், இந்த நிலையில் அதாவது லாக்டவுன் நிலையில், ஏதோ ஒரு தேடல் !!!!.... ' ஹ்ம்ம்ம் 

நேராக கடல் அலையை பார்க்கிறேன். அமைதி என்னை ஆட்கொள்கிறது.காமிங் எபெக்ட். unbelivable !!! ஓம் ஓம் என்று நில்லாமல் ஆர்பரித்துக்கொண்டிருக்கும் கடலின் ரீங்காரம் ஒரு meditative effect ! எதுவும் ஈடு செய்ய முடியாத அழகு, இயற்கையின் மிக அழகான வாழ்க்கை தத்துவம், கண நேர வாழ்க்கை என்று ஓயாமல் சொல்லும் அலைகள். such timeless action . இயற்கை மில்லியன் வழிகளில் மில்லியன் இடங்களில் உலகத்தின் எல்லா பக்கங்களிலும் ஒரே மாதிரியான உண்மையை உணர்த்துகிறது, பூகம்பத்தில் ஆரம்பித்து வைரஸ் வரை. அதற்கு தெரிவதில்லை நிறம், மதம், ஜாதி, ஏழை,பணக்காரன் என்கிற வித்யாசங்கள்.. 
probably இவற்றின் அடிப்படை தத்துவமான underlying uniformity and  விவரிக்க முடியாத உண்மைThe eye to see the underlying uniformity and oneness of nature in its entire spread is what we yearn for I guess…

நீங்களே புரிந்துகொள்ளுங்கள் இல்லை உணர்ந்து கொள்ளுங்கள்.

சுதந்திரம் என்பது மிக பெரிய வார்த்தைஎன்னை பொறுத்தவரை சுதந்திரம் என்பது  போராடுவதோ இல்லை  submit அவதோ இல்லை, அதன் முழுமைத்தவத்தை உணர்வதேby SEEING nature in its entirety…Then nature frees you!  Till then the false faces of ‘I am a so and  so ”, I am a learned man, I love my family, I am Rich, I am this and I  am that will have to cease to exist…

But when nature is understood and seen somehow all these fake ness fade away in to some strange “oneness” which calls invitingly in to its dimensionless body for a merger. We drop all of what we are yet we gain an awareness of all we are in that state maybe…maybe we become everything and hence become nothing too  (ரமணாஸ்ரமத்தில் நான் உணரும் அந்த nothingness and every thingness  )  when we see and merge with nature...

எங்கிருந்தாலும், எந்த நாட்டில் இருந்தாலும் , 'சுதந்திரம் சுலபமில்லை என் நிழல் என்னுடன் உள்ள வரை. வெகு சிலரே இந்த வாழ்வில்  அந்த நிலையை அடைகின்றனர். only a few earn it in a lifetime…..... இப்போது நான் ரணத்தில் இருக்கிறேன்...... வைரஸின் ஆளுமையில் ஏற்படுத்தப்போகும் இந்த விரிசலில்...  எகானமி , காமர்ஸ் இண்டஸ்ட்ரி இதெல்லாம் இல்லை!!! இங்கிருக்குமிவனை போல அலையப்போகும் நம் மனிதர்களை நினைக்கையில் !!!!! நான் ஒன்றும் ஞானி இல்லையே ! உண்மையில் இங்கே கீழே இருக்கும் இவன் எனக்கு ஞானியாக தெரிகிறான்.....தேடுங்கள் கிடைத்தால் எனக்கும் விளக்குங்கள்

x



Comments

  1. மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள் அம்மா.
    சுய அலசல் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete

Post a Comment

leave your feedback please

Popular posts from this blog

வெகு நாட்களுக்குப் பிறகு

ஆஹா, இது மிக மிக அருமையான யோசனை.

அங்கும் இங்கும் -கல்யாணமே வைபோகமே!