Posts

அங்கும் இங்கும் -கல்யாணமே வைபோகமே!

அங்கும் இங்கும் -கல்யாணமே வைபோகமே!  இடம் சென்னை-தமிழ்நாடு-இந்தியா  மயிலாப்பூர் தெற்கு மாடவீதியில் வெள்ளீஸ்வரர் கோயில் வாசலில் இருக்கும் பூக்காரி செங்கமலம், சாமிநாதனை பார்த்து சிரித்தவாறே 'என்ன அய்யா கல்யாணமா ?'என்றாள்.'அமாம்.பத்திரிகை வந்தவுடன் தரேன், கண்டிப்பா வந்துடு. கல்யாணம் முடியறவரைக்கும் கூட ரெண்டு முழம் பூ குடுத்துடு' என்றவாறே பூவை வாங்கிக்கொண்டு நகர்ந்தார். கோயில் வாசலில் வெளியே வந்து கொண்டிருந்த குருக்களும் 'கல்யாணமா? கேள்விப்பட்டேன், சந்தோஷம் மாமா'! என்றார். 'ஆமாம்' வாங்கோ, கண்டிப்பா' என்றார் ஸ்னேஹமாக சிரித்துக்கொண்டே. வீட்டிற்கு வந்தவுடன், தன்னுடைய நோட்டுப்புத்தகத்தில் கல்யாண அழைப்பிதங்கள் பக்கத்தை திறந்து, பூக்காரி செங்கமலம் , கோயில் விஸ்வநாத குருக்கள் என்று எழுதிக்கொண்டார். உள்ளிருந்து தண்ணீர் கொண்டுவந்த மனைவியிடம் 'லட்சுமி, இதுவரைக்கும் 321பேர் ஆயிடுது, உனக்கு தெரிஞ்சவா யாராவது இருந்த இந்த பக்கத்தில எழுதிடு, யாரும் விட்டு போய்ட கூடாது கேட்டியா,' என்றார். லக்ஷ்மியும் 'நீங்க சொல்றது ரொம்ப வாஸ்தவம், இருந்திருந்து முதல் கல்யாணம...

நாலு பேர் 

நாலு பேர்  வெகு நாட்களாக ஒரு கேள்வி ! எவ்வளவு நாட்களாக என்று கேட்கிறீர்களா? சிறு வயதிலிருந்தே ! இந்த நாலு பேர் யார்? எப்ப பாத்தாலும் நாலு பேர் என்ன சொல்லுவா, நாலு பேர் பாத்தா என்ன ஆகும், நாலு பேர் எப்படியெல்லாம் பேசுவா ? இன்னிக்கு நான் பார்க்க ஆசைப்படறேன் அந்த நாலு பேர் யாரு? சின்ன வயதில் போட்ட விதை ஒரு தன்னம்பிக்கையுடன் எதையும் சாதிக்க, தன்னிச்சையாக ஒரு முடிவெடுக்க இல்லை நம் மனதில் பட்டதை சொல்லவும் தயக்கம், பயம், குழப்பம், கோழைத்தனம், திரைமறைவுக்கு பின்னால் ஒரு நடத்தை, முன்னே ஒரு நடத்தை.... இன்னும் என்ன என்னவோ சொல்லிக்கொண்டு போகலாம்.எங்கோ கண்ணுக்கு தெரியாத நாலு பேருக்கு பயப்படும் மனிதர்கள், தனிமையில் கொலை கூட செய்ய தயங்க மாட்டார்கள். ஏன் இந்த நாலு பேர் நம் வாழ்வை சிதைக்க அனுமதிக்க வேண்டும்.திரைமறைவிற்கு பின்னல்...hypocracy ! நல்ல பெரிய பொசிஷனில் வேலை பார்ப்பவர்கள், சமுதாயத்தின் மேல் மட்டத்தில் மிக மதிக்கப்பட்டவர்கள் , பக்திமான்கள், நல்ல குடும்பத்தை சேர்ந்த நல்லவர்  என்று மதிக்கப்படுகிறவர்கள், பதிவிரதையாக நடை உடை பாவனைகள் கொண்ட பெண்கள், நான் குறிப்பிட்டிருக்கும் இந்த உதாரணங்களில் பெரும...

 அம்மா---உன்னை காணாமல்

உன்னை காணாமல் !!!!  உலகில் மிக அறிய பெருமைக்குரிய ஒரு பிறப்பு என்றாலே அது தாய்தான்! ஈடு செய்ய முடியாத ஒரு உறவு. என்னுயிர் தந்த என் அம்மாவிற்கு இந்த நினைவஞ்சலி.  23 ஆண்டுகள் சென்றுவிட்டது. நீ இல்லாமல் எது நின்றது ? எல்லாரும் நிறைவான வாழ்க்கையை தான் வாழ்கிறோம். குறை ஒன்றும் இல்லை. அப்பாவின் , உன் ஆசீர்வாதம்  நமஸ்கரித்து  எழும் போது, 'சமத்தா இரு ஜெயம்மா' என்று சொன்ன வார்த்தைகள் இன்னும் காதில் ஒலித்து கொண்டே தான் இருக்கிறது. இன்னும் சமத்தாகிவிட்டேனா என்று சொல்ல நீ இன்று இல்லை. கணபதி காலனி கால வாழ்க்கையில்,  நீ பாட்டு கிளாஸ் எடுக்கும் அந்த காட்சியும், உன் கிளாசில் இருக்கும் என் ஸ்நேகிதிகள், அவர்களுடன் நமது குடும்பத்திற்கு உருவான அழகான ஸ்நேகங்களும், இன்னும் எத்தனையோ நினைவுகள் மனதில் கரை புரண்டு ஓடுகிறது.  இன்று நாம் எல்லோரும் சொல்லும் 'மதர்'ஸ் டே' ! உன் போன்ற பெண்களுக்கு என்றும் 'மதர்'ஸ் டே 'தான். எங்கள் நால்வரின் இந்த பரிணாம வளர்ச்சிக்கு நீதான் காரணம் ஆயினும் அப்பா உனக்கு தந்த சுதந்திரம், உன் மேல் அவர் வைத்திருந்த trust மிக முக்கிய காரணமும் கூட தான்.  சம்ப...

என்ன வித்தியாசம்

அந்த ஞாயிறு இரவு 2 மணிக்கு சியாட்டிலில் வீடு வந்து சேர்ந்தோம். சிறந்த சந்தோஷமான 15 நாட்கள் உயிரினும் மேலான உறவு என் தம்பி கண்ணன், அன்பு தோழி ஜெயஸ்ரீ , அண்ணன் ரமேஷ்,அன்பான விஜி மன்னியுடன் ஒரு வாரம், நம் குழந்தைகள் என்று நான் நினைக்கும் ஆனந்தனின் மகன், மகள், அவர்களின் அன்பு காதலர்கள் என்று எங்கெங்கும் அன்புடன் சிரிப்புடன் வளைய வந்த நான் மிகவும் உயரத்தில் பறந்தேனோ என்னவோ? வந்தவுடன் இவர் களைப்புடன் , தொண்டை வலியும் ஜூரமும் இருந்ததால் கோவிட் டெஸ்ட் செய்து அதில் நிரூபணமும் ஆகிவிட்டது. தரையில் இறங்கி மனது சம நிலைக்கு வந்தது.... Checks அண்ட் balance இதுதானோ? நிற்க எழுத நினைத்தது இதை அல்ல . ஆஸ்டினில் கண்ணனின் நாடகம் 'பாட்டி ஆனாலும் பார்ட்டி' விழுந்து விழுந்து சிரித்தோம். அந்த அரங்கத்தில் இருந்த 200 பேருக்கும் அந்த இரண்டு மணி நேரம் சொந்த பிரச்சினைகள் மறந்த ஒரு மகிழ்ச்சியான அனுபவம் . எல்லோரும் வந்து கண்ணனிடம் வாழ்த்திவிட்டு செல்லும்போது நானே அவனை பெற்றது போல பூரிப்பு. மெக்ஸிகோவில் playa del carmen என்ற நகரம் Cancun என்ற நகரத்தின் அருகாமையில் உள்ளது. இங்கு குடும்பமாக நாங்கள் ஊர் சுற்றி ...

சில்வியா-

சில்வியா சில்வியா! இந்த பெயரை கேட்கும்போது என்ன தோன்றுகிறது? இளமை துள்ளலுடன்,சிரிக்கும் கண்களை கொண்ட ஒரு அழகிய இளம் பெண் என்ற எண்ணம் தோன்றுகிறதல்லவா? இங்குநான் எழுதும் இந்த சிறு குறிப்பு சில்வியாவை பற்றித்தான் தினம் நீச்சல் குளத்திற்கு நீந்த போகும் நான், அங்கு தண்ணிரில் உடற்பயிச்சி வகுப்பும் சேர்ந்தேன். இங்குதான்இவளை சந்தித்தேன். தண்ணீரில் இறங்கி மெதுவாக warm up செய்து விட்டு, ஸ்னேஹமாக ஒரு புன்சிரிப்பு ! மெல்ல ஒரு புன்னகை பரிமாற்றம்.  பிறகு நல்ல கணீரென்ற குரலில்,'so நீஎந்த நாட்டிலிருந்து வருகிறாய்.? இந்தியாவாகத்தான் இருக்கும், ஏனென்றால் உன்முகத்தின் மினுமினுப்பே சொல்கிறது. உங்கள் தோல் எப்படி இந்த தரம் மிகுந்த அமைப்பைகொண்டிருக்கிறது' என்றாள் கண்களால் சிரித்துக்கொண்டே. நானும், 'வெயில்,சீதோஷண நிலை, எங்கள் உணவு பழக்கம், இறை நம்பிக்கை எல்லாம் காரணமாக இருக்கலாம்'என்று எனக்கு தெரிந்ததை சொல்லி வைத்தேன். ஆனால் உள்ளுக்குள் மிக்க சந்தோஷம் ஒருவெள்ளைக்காரி நமது தோல் பற்றி இவ்வளவு சிலாகிக்கிறார் என்று பெருமை! ( பிரிட்டிஷ்ஆதிக்க அடிமைத்தனம் இன்னும் விலகவில்லையோ?) உடற்பயிற்சியும் செய...

இதெல்லாம் ஆராயக்கூடாது அனுபவிக்கனும்'​-​கிறுக்கல் 4​

  இதெல்லாம் ஆராயக்கூடாது அனுபவிக்கனும்'​ எழுத உட்கார்வதற்கு முன் யோசித்து பார்த்தால்  எழுத வருவதில்லை. எந்த நிமிடம் நம்மிடம் பேனாவோ , லேப்டாப்போ இல்லையோ அப்போது அப்படி ஒரு கற்பனை ஓட்டம். என்ன வென்று கேட்டகிரிர்களா?, இன்று நான் பூஸ்டர் டோஸ் இன்ஜெக்ஷன் போட சென்றிருந்தேன். 10.30 மணி காலை , இந்தியாவில் மணி 12, என் பிறந்தநாள் தொடங்கிவிட்டது. என் இனிய ஸ்நேகிதி கிருஷ்ணா பாண்டிச்சேரியில் இருந்து தொலை பேசியில் கூப்பிட்டாள். ! நினைவுறுத்தினாள் இன்று என் பிறந்த நாள் என்று!!! நம் பிறந்தநாளை நம்மை விட நாம் விரும்பும் 4 பேர் நினைவுறுத்தும் போது வரும்   சந்தோஷம் தனி தான் ! மீண்டும் பூஸ்டர் ஊசிக்கு வருவோம்.  பூனைக் கண்கள், சுமாரான உயரம் , blonde லுக்ஸ் இருந்த இந்த பெண், எந்த நாட்டவராக இருப்பாள் என்று யோசித்தேன் (வேண்டாத வேலை தான்) இப்போதெல்லாம் இப்படி யோசித்து ஒருவரை பார்ப்பது வழக்கமாகிவிட்டது.  ஏன்? இந்த அமெரிக்காவின் குடிமக்கள், உலகம் முழுவதிலும்...

இதயத்தின் கிறுக்கல் 3

  சும்மா !!!!! நின்று மேலே பார்த்தால், இந்த சியாட்டில் நகரத்தின் மேகங்கள் கூட அவசரமாக நகர்ந்து கொண்டு இருக்கின்றன !அந்த 17வது மாடி பால்கனியில் இருந்து கீழே வளைந்து செல்லும் முதல் அவென்யூவிலும்  சரி, மேலே விரிந்து  கிடக்கும் வானமும், சுற்றி கண்ணுக்கு எட்டிய தொலைவில் தெரியும் பரந்த   இயற்கையும் சரி மிக உன்னதமான அமைதியையும் கவனித்து பார்க்க பார்க்க உற்சாகத்தையும் தருகிறது. மேகங்கள் மெதுவாக ஆனால் அவசரமாக காற்றடித்து போர்ட்லேண்ட் பக்கம் செல்லும் போது, மனதில் சின்ன எண்ணம், மேகம் போல காற்றடிக்கும்  திசையில் நகர்ந்து செல்ல மனிதனால் முடியுமா? முடியுமாவா ?? அதை விட வேகமாக எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும் மனதின் ஓட்டத்தில் !!!  இறங்கி தெருவில் நடந்து செல்கிறேன், ஸ்னேஹமாக ஹாய் என்னும் சிலர், டௌன்டவுன் என்பதால் நிறைய டூரிஸ்ட்கள், வழக்கமாக நான் காய்கறி வாங்கும் கடையில் பணிபுரியும் நண்பர்கள், சினேகமாக சிரித்துக்கொண்டே,yo, whatsup '!'என்று தெருவோரத்தில் இசைக்கருவிகளை இசைக்கும் கலைஞர்கள், அது ஒரு கலகலப்பான உற்சாகமான காலை நேரம். இங்குள்ள மனிதர்கள் உண்மையில்...