சில்வியா-

சில்வியா சில்வியா! இந்த பெயரை கேட்கும்போது என்ன தோன்றுகிறது? இளமை துள்ளலுடன்,சிரிக்கும் கண்களை கொண்ட ஒரு அழகிய இளம் பெண் என்ற எண்ணம் தோன்றுகிறதல்லவா? இங்குநான் எழுதும் இந்த சிறு குறிப்பு சில்வியாவை பற்றித்தான் தினம் நீச்சல் குளத்திற்கு நீந்த போகும் நான், அங்கு தண்ணிரில் உடற்பயிச்சி வகுப்பும் சேர்ந்தேன். இங்குதான்இவளை சந்தித்தேன். தண்ணீரில் இறங்கி மெதுவாக warm up செய்து விட்டு, ஸ்னேஹமாக ஒரு புன்சிரிப்பு ! மெல்ல ஒரு புன்னகை பரிமாற்றம்.  பிறகு நல்ல கணீரென்ற குரலில்,'so நீஎந்த நாட்டிலிருந்து வருகிறாய்.? இந்தியாவாகத்தான் இருக்கும், ஏனென்றால் உன்முகத்தின் மினுமினுப்பே சொல்கிறது. உங்கள் தோல் எப்படி இந்த தரம் மிகுந்த அமைப்பைகொண்டிருக்கிறது' என்றாள் கண்களால் சிரித்துக்கொண்டே. நானும், 'வெயில்,சீதோஷண நிலை, எங்கள் உணவு பழக்கம், இறை நம்பிக்கை எல்லாம் காரணமாக இருக்கலாம்'என்று எனக்கு தெரிந்ததை சொல்லி வைத்தேன். ஆனால் உள்ளுக்குள் மிக்க சந்தோஷம் ஒருவெள்ளைக்காரி நமது தோல் பற்றி இவ்வளவு சிலாகிக்கிறார் என்று பெருமை! ( பிரிட்டிஷ்ஆதிக்க அடிமைத்தனம் இன்னும் விலகவில்லையோ?) உடற்பயிற்சியும் செய்து கொண்டே என்னுடன் பேசியவாறே தன்னை பற்றி கூறினாள். கேட்க கேட்க மிக வியப்பாக இருந்தது. இந்தியா ,சிரியா , அரபு நாடுகளில் பயணித்து சிசிலியில் சந்தித்த ஒருவருடன் 5ஆண்டுகாலம் வாழ்ந்து பின்னர் மணம் முடித்து இருக்கிறாள். ஒரு பெண் குழந்தை !. என்னைபற்றிய விவரங்களை கேட்க நானும் பகிர்ந்து கொண்டேன். அவளிடம் சொன்னேன் 'உன் வயதுபெண்கள் எங்கள் ஊரில் எப்படி இருப்பார்கள் தெரியுமா 'என்று விவரித்தேன். புருவத்தை உயர்த்தி 'அப்படியா அப்படியா என்று ஆச்சரியத்தில் உறைந்து  போனாள்.  என்ன சொல்வது,20 களில் திருமணம், 30களில் குழந்தைகள், குடும்பம், 40லிருந்து 60 வரை குடும்ப சுமைஎன்று இருந்துவிட்டு, கணவருடனோ இல்லையே விதவையாகவோ , பிள்ளைகளுடனோ, இல்லை தனியாகவோஇருக்கும் பெரும்பாலான பெண்கள், தனக்கென்று ஒன்றும் செய்து கொள்வது இல்லை, இப்போதுஇந்தியா முழுவதுமே பரவிவிட்ட மேல்நாட்டு கலாச்சாரமும், வாழ்க்கை நடைமுறையும், இதுபோன்ற வயதான பெண்களுக்கு ஒரு விதமான மன அழுத்தத்தையும் அதன் விளைவுகள் உடல்நலக்குறைவு சர்க்கரை வியாதி, பிளட் பிரஷர் கான்செர் போன்ற பல நோய்களும் பாதிக்கஏதுவாகிறது. இது அப்பட்டமான உண்மை. யாராலும் மறுக்க முடியாது, இதை கேட்ட சில்வியா 'ஏன், கணவன் இல்லாமலோ, பிள்ளைகள் இல்லாமலோ இருந்தாலும் கூட பெண்கள் உடற்பயிற்சி,நடை பயிற்சி போன்றவற்றை செய்து கொண்டு ஆரோக்கியமாக வாழலாமே' என்றாள் சொல்லுவது அவளுக்கு சுலபம்தானே ! நமது நாட்டின் நிலைமை, வீட்டின் நிலைமைநமக்குத்தானே  தெரியும். நான் சொன்னேன் 'நமது கலாச்சாரத்தில் ஒரு தனி மனித சந்தோஷம்,ஆரோக்கியம் எல்லாவற்றயும் மீறி தியாக உணர்வுதான் அதிகம், அதிலும் குறிப்பாக பெண்கள்பிறக்கும்போதே தாய் என்ற லேபிளுடன் தான் பிறக்கிறார்கள் போல. அதனால்தான் தனக்கென்றவாழ்க்கையை யோசிப்பதில்லை போல என்று நான் நினைக்கிறேன் ' ஒரு கண இடைவெளிக்கு பிறகுநான் தொடர்ந்தேன், 'என்னை பற்றி அப்படி கூற முடியாது, நான் சிறு வயதில் இருந்த ேசுதந்திரமாக வளர்க்கப்பட்ட பெண், அதனால் தான் இன்று நான் இங்கு வாழ்கிறேன்'என்றேன். சில்வியா ,'உன் வாழ்வில் எதுவும் தப்பே இல்லை, நீயும் உனது கணவரும் சந்தோஷமாக வாழுங்கள், இந்த நாடு உன்னை வரவேற்க்கிறது! மீண்டும்  நாளை வகுப்பில்சந்திப்போம் பை ' என்றவாறு படியேறி பெண்கள் உடை மாற்றும் அறைக்கு சென்றாள். இன்னும்என்னுடைய வியப்பு அடங்கவில்லை. இவ்வளவு அழகான பெண் அவள் கணவர் இறந்த பின்  தனியாக வாழ்கிறாள். தானே வண்டி ஓட்டிக்கொண்டு ஜிம், காய்கறி வாங்குவது, நீச்சல்,உடற்பயிற்சி.... ஹ்ம்ம்ம் நானும் சென்றேன் உடை மாற்ற, அறையில் இருந்து வெளிப்பட்ட அவள், 'ஹே உன்னிடம் சொல்ல மறந்துவிட்டேன் ஏப்ரல் 26ஆம் தேதி என் பிறந்த நாள் ,நீயும் உன் கணவரும் கண்டிப்பாக என் வீட்டுக்கு வரவேண்டும் 'என்றால் கண்சிமிட்டியவாறு, என்னை லேசாக தழுவி, 'உன்னை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்'என்று கையசைத்து விடை பெற்றாள் . நானும் 'சேம் ஹியர் 'என்றேன். என் வியப்பிற்குகாரணம் சில்வியா என்கிற இந்த பெண் 91 வயதை கடந்து 92 வயதிற்குள் செல்லுகிறாள். வாழ்ந்தால் அவளை போல வாழ வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டேன்நான். நம் வாழ்க்கை நம் கையில்! அன்புடன் ஜெ..

Comments

  1. You nicely captured the experience and learning. Keep writing and learning.

    ReplyDelete
  2. சுஜாதா twist in the end

    ReplyDelete

Post a Comment

leave your feedback please

Popular posts from this blog

இந்த சந்திப்பு.........

அங்கும் இங்கும் -கல்யாணமே வைபோகமே!

 அம்மா---உன்னை காணாமல்