இதெல்லாம் ஆராயக்கூடாது அனுபவிக்கனும்'-கிறுக்கல் 4
இதெல்லாம் ஆராயக்கூடாது அனுபவிக்கனும்'
எழுத உட்கார்வதற்கு முன் யோசித்து பார்த்தால் எழுத வருவதில்லை. எந்த
நிமிடம் நம்மிடம் பேனாவோ , லேப்டாப்போ இல்லையோ அப்போது அப்படி ஒரு
கற்பனை ஓட்டம். என்ன வென்று கேட்டகிரிர்களா?, இன்று நான் பூஸ்டர் டோஸ்
இன்ஜெக்ஷன் போட சென்றிருந்தேன். 10.30 மணி காலை , இந்தியாவில் மணி 12, என்
பிறந்தநாள் தொடங்கிவிட்டது. என் இனிய ஸ்நேகிதி கிருஷ்ணா பாண்டிச்சேரியில்
இருந்து தொலை பேசியில் கூப்பிட்டாள். ! நினைவுறுத்தினாள் இன்று என் பிறந்த நாள்
என்று!!!
நம் பிறந்தநாளை நம்மை விட நாம் விரும்பும் 4 பேர் நினைவுறுத்தும் போது
வரும் சந்தோஷம் தனி தான் !
மீண்டும் பூஸ்டர் ஊசிக்கு வருவோம்.
பூனைக் கண்கள், சுமாரான உயரம் , blonde லுக்ஸ் இருந்த இந்த பெண், எந்த
நாட்டவராக இருப்பாள் என்று யோசித்தேன் (வேண்டாத வேலை தான்)
இப்போதெல்லாம் இப்படி யோசித்து ஒருவரை பார்ப்பது வழக்கமாகிவிட்டது. ஏன்?
இந்த அமெரிக்காவின் குடிமக்கள், உலகம் முழுவதிலும் வந்து சேர்ந்தவர்கள்
தானே, இவர்களின் பூர்வீகம் வெவ்வேறு உலக நாடுகள் தானே. இவள் கொஞ்சம்
ஜெர்மனியரை போலவும், சற்று மேல் நோக்கி பார்த்த மூக்கை
பார்க்கையில் பிரெஞ்சுக்காரி போலவும் இருக்கிறாள். நான் படு கேஷுவலாக அவளிடம், '
'Morning! how's it going?Covid booster dose appointment at 10.30 '
அவள் 'yes may I have your insurance , Vaccination card and state id ' என்றாள்
. நான் அவளை பார்த்து 'any chance you have French origin?' என கேட்க
அவள் 'awe that 's cute yes i am' என்றாள்.
அதன் பிறகு என்னுடைய cards திருப்பி என்னிடம் நீட்டியவாறு, இந்திய பெயர்கள்
மிக நீளமானவை என்று சின்ன புன்னகையுடன் சொன்னாள் , நானும் விடாமல், 'ஆமாம்,
எங்கள் நாட்டில் பெயரில் மிக பெருமை கொள்வோம்' என்றவாறே, ' அசப்பில் உங்கள்
புன்னகை ஜெர்மானியரை போல உள்ளது'(ஜெர்மானியர்களுக்கு அதிகம் சிரிக்க
தெரியாது என்பது வேறு உண்மை) அவள் உடனே பெரிதாக சிரித்தவாறு, 'hey , you are
too cool' என்றாள், ஒரு காண நேர இடைவெளிக்கு பிறகு 'that's right ! I am half
French and half German ' என்றாள் . நான் அவளது id card ல் அவள் பெயரை படித்து,
'hey Julia , i am right, may be a coffee sometime to celebrate this, I
live in first avenue' என்றேன் கண்ணை சிமிட்டியவாறே , லேசாக தோளை
குலுக்கியவாறே 'sure, why not? 'என்றாள், தொடங்கியது ஒரு புது நட்பு!
இந்த சின்ன உரையாடலை ஏன் எழுதுகிறேன் என்றால், இங்கு ஏற்பட்ட நமக்குள் இருக்கும்
தேசப்பற்றை பற்றி நமது சுய சேடிஸ்பேக்ஷன். இங்கு விளைந்த மூன்று சின்ன
சந்தோஷங்கள்,
1) அவளுக்கு ஏக சந்தோஷம் நான் அவள் பூர்விகத்தை கண்டுபிடித்துவிட்டேன்
என்று, 2) எனக்குள் பெரிய புளகாங்கிதம் நான் அவள் பூர்விகத்தை
கண்டுபிடித்துவிட்டேன் என்று, இவை இரண்டிற்கும் அப்பாற்பட்ட ஒரு சின்ன
நட்பு தோன்றிய அந்த கணம் .
தேசம் விட்டு தேசம் சென்றாலும், எங்காவது ஒரு இந்தியரை
(சியாட்டிலிலோ ஆஸ்டினிலோ போர்ட்லாண்டிலோ , சான் பிரான்சிஸ்கோவிலோ
இப்போது வெள்ளையர்களை காண்பதுதான் அரிது) பார்த்தால் மனதில் ஒரு குட்டி
joyful அதிர்வு ! வருவது ஏன்? நம்மவர்கள் என்ற உணர்வுதானோ! அதே போல மற்ற நாட்டவர்
நம் நாட்டை பற்றி கேட்டாலோ சொன்னாலோ வரும் உற்சாகத்திற்கு என்ன
பொருள்.
'இதெல்லாம் ஆராயக்கூடாது அனுபவிக்கனும்'
It's always wonderful to meet and speak with a person with different race and culture and explore about them! USA is a beautiful place where this can happen very easily! Glad you put your experience in words!
ReplyDeleteI feel like எவ்வளவு வாழ்க்கையை ரசித்திருந்தால் இவ்வளவு அழகாக எழுத முடியும்?
ReplyDeleteWhat a perspective about life! I am becoming a great admirer of your writing and your way of looking at life!
மிக அருமையான, மழைச்சாரல் ஒத்த பதிவுகள் . தொடர் கதை எழுதலமே?
ReplyDelete