அம்மா---உன்னை காணாமல்

உன்னை காணாமல் !!!!  உலகில் மிக அறிய பெருமைக்குரிய ஒரு பிறப்பு என்றாலே அது தாய்தான்! ஈடு செய்ய முடியாத ஒரு உறவு. என்னுயிர் தந்த என் அம்மாவிற்கு இந்த நினைவஞ்சலி.  23 ஆண்டுகள் சென்றுவிட்டது. நீ இல்லாமல் எது நின்றது ? எல்லாரும் நிறைவான வாழ்க்கையை தான் வாழ்கிறோம். குறை ஒன்றும் இல்லை. அப்பாவின் , உன் ஆசீர்வாதம்  நமஸ்கரித்து  எழும் போது, 'சமத்தா இரு ஜெயம்மா' என்று சொன்ன வார்த்தைகள் இன்னும் காதில் ஒலித்து கொண்டே தான் இருக்கிறது. இன்னும் சமத்தாகிவிட்டேனா என்று சொல்ல நீ இன்று இல்லை. கணபதி காலனி கால வாழ்க்கையில்,  நீ பாட்டு கிளாஸ் எடுக்கும் அந்த காட்சியும், உன் கிளாசில் இருக்கும் என் ஸ்நேகிதிகள், அவர்களுடன் நமது குடும்பத்திற்கு உருவான அழகான ஸ்நேகங்களும், இன்னும் எத்தனையோ நினைவுகள் மனதில் கரை புரண்டு ஓடுகிறது.  இன்று நாம் எல்லோரும் சொல்லும் 'மதர்'ஸ் டே' ! உன் போன்ற பெண்களுக்கு என்றும் 'மதர்'ஸ் டே 'தான். எங்கள் நால்வரின் இந்த பரிணாம வளர்ச்சிக்கு நீதான் காரணம் ஆயினும் அப்பா உனக்கு தந்த சுதந்திரம், உன் மேல் அவர் வைத்திருந்த trust மிக முக்கிய காரணமும் கூட தான்.  சம்பத்தில் இருந்து, மீரா வரை வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தது, எந்த மதத்தவரை சார்ந்தவராக இருந்தாலும் நன்றாக பழகுவது, வேலைக்கு போய் வந்தாலும், அத்தனை பூஜைகளையும் செய்தது, நாள்தோறும் தினப்படி ஸ்லோகம் சொல்லிக்கொண்டே சமையல் செய்தது முழு நீள காட்சிகள் கண் முன்னே தோன்றுகிறது. உட்காரவைத்து சொல்லிக் கொடுக்காமல் நாங்கள் உன்னிடம் கற்றது ஏராளம்.  அம்மா, அப்பா உங்களை இழந்தது உடலளவில் தான்.  கவிதை, பேச்சு எல்லாவற்றிலும் ஒரு சாதுரியம் இன்டெலிஜென்ஸ் !!! இருந்த குறைந்த புடவைகளையே மீண்டும் மீண்டும் உடுத்திக்கொண்டு  ஆஃபீஸிற்கு ரெடியாகிவிட்டு செல்லும் வேகம்.... அம்ம்மா என்னை இன்றும் வியக்க வைக்கிறாய். வளர்ந்து திருமணமாகி சென்ற பிறகு வேறுவிதமான கருத்து பரிமாற்றங்கள், எனக்கு துக்ளக் வாசிக்க பிடிக்கும் , அம்மாவிற்கு இன்ன பிற பத்திரிகைகள்தான் பிடிக்கும், சிவசங்கரியின்  ஒரு சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவதா உன்னுடைய favorite !!! இது பற்றி நாம் போனில் பேசுவோம் ஒரு 1/2 மணி நேரம், மறைந்த என் கணவர், போன் பில்லுக்கு பதிலா நான்  டிக்கெட் வாங்கித்தரேன், நேர போய் பேசிட்டு வா' என்று கிண்டல் செய்வார். இன்று வரை கூட வரும் உன் நினைவுகளில் உனது முகம் மட்டும் இல்ல உன் குரலும் தான். இந்த உலகத்தில் என்னை விட்டு இறந்து பிரிந்தவர், இருந்தே  மறந்தவர்கள் என்று நெருங்கிய சொந்தங்கள் பலர்  உண்டு. என்றும்  நான் மனதார சொல்வது இதுதான், நான் இழந்த ஒரு பொக்கிஷம் நீயும் அப்பாவும் தான். உங்கள் இழப்பை போல வேறெதுவும் என்னை அதிகமாக பாதிக்கவில்லை. இன்றும் உன் உயிர் பிரிந்த அந்த கணம் கண்ணில் நிழலாடுகிறது. எப்பேறு பெற்றிருந்தால் அந்த கணத்தில் நான் உங்கள் இருவருடன் இருந்திருப்பேன். இதை விட மிகப்பெரிய மிகப்பெரிய பகவானின் அருள் என்னவாக இருக்க முடியும்.? அம்மா என்னை பெற்றபோது நீ அடைந்த உடல் வலி, மன  சந்தோஷம் என்ன என்றது நான் எனது ஷ்ரவணை பெற்றபோது உணர்தேன். உன் மகளாக நான் பெருமையும் கர்வமும் அடைகிறேன். எத்தனை பிறவி எடுத்தாலும் நீதான் என் அம்மாவாக வேண்டும் என்று பகவானிடம் பிரார்த்திக்கிறேன், ஏன் தெரியுமா, இந்த பிறவியில் நாம்  விட்டதை பிடிக்கத்தான். இன்று தாயில்லாத பல குழந்தைகளுக்கு தாயாகி உதவி செய்ய மனம் விழைகிறது. தாயாக  உன்னை போலவும், தந்தையாக அப்பா போலவும், உடலாலும் பொருளாலும் உதவ முடிகிறது என்றால் அது உங்கள் இருவரின் ஆசிர்வாதத்தால் தான்.  இன்று போல் என்றும் என்னுடன் நிழலாக என் மனதில் நீயும்  அப்பாவும் என் கடைசி மூச்சை தாண்டி என்னுடன் வசிப்பீர்கள் என்று ஆழமாக நம்புகிறேன். என்றும் உங்கள் ஒரே மகள் என்ற பெருமையுடன், உங்கள் குழந்தை ஜெ....

Comments

  1. என்றும் நினைவில் நிறைந்தவர்கள் மனதிலிருந்து மறைவதில்லை.

    ReplyDelete
  2. சரியாக சொன்னீர்

    ReplyDelete
    Replies
    1. மிக நன்றாக எழுதி இருக்கிறீர்கள். என் உணர்வை ப்ரதிபலிக்கிறது இக்கட்டுரை - ரவி

      Delete

Post a Comment

leave your feedback please

Popular posts from this blog

வெகு நாட்களுக்குப் பிறகு

ஆஹா, இது மிக மிக அருமையான யோசனை.

அங்கும் இங்கும் -கல்யாணமே வைபோகமே!