இதயத்தின் கிறுக்கல் 3
சும்மா !!!!! |
நின்று மேலே பார்த்தால், இந்த சியாட்டில் நகரத்தின் மேகங்கள் கூட அவசரமாக நகர்ந்து கொண்டு இருக்கின்றன !அந்த 17வது மாடி பால்கனியில் இருந்து கீழே வளைந்து செல்லும் முதல்அவென்யூவிலும் சரி, மேலே விரிந்து கிடக்கும் வானமும், சுற்றி கண்ணுக்கு எட்டிய தொலைவில் தெரியும் பரந்த இயற்கையும் சரி மிக உன்னதமான அமைதியையும் கவனித்து பார்க்க பார்க்க உற்சாகத்தையும் தருகிறது. மேகங்கள் மெதுவாக ஆனால் அவசரமாக காற்றடித்து போர்ட்லேண்ட் பக்கம் செல்லும் போது, மனதில் சின்ன எண்ணம், மேகம் போல காற்றடிக்கும் திசையில் நகர்ந்து செல்ல மனிதனால் முடியுமா? முடியுமாவா ?? அதை விட வேகமாக எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும் மனதின் ஓட்டத்தில் !!!
இறங்கி தெருவில் நடந்து செல்கிறேன், ஸ்னேஹமாக ஹாய் என்னும் சிலர், டௌன்டவுன் என்பதால் நிறைய டூரிஸ்ட்கள், வழக்கமாக நான் காய்கறி வாங்கும் கடையில் பணிபுரியும் நண்பர்கள், சினேகமாக சிரித்துக்கொண்டே,yo, whatsup '!'என்று தெருவோரத்தில் இசைக்கருவிகளை இசைக்கும் கலைஞர்கள், அது ஒரு கலகலப்பான உற்சாகமான காலை நேரம். இங்குள்ள மனிதர்கள் உண்மையில் நண்பர்களா என்று யோசிக்காமல் மேலோட்டமாக பார்த்தால் நல்ல மனிதர்கள், நிறைய புன்னகைக்கிறார்கள், .....இது கண்டிப்பாக வித்யாசமான அனுபம்தான், இந்தியாவில் பார்க்கும் போதே ஒரு சீரியஸ் லுக் தான்....
நீ வருவதையோ போவதையோ பற்றி கவலைப்படாமல் ' anything can help' என்று ஒரு கார்ட்போர்ட் அட்டையில் எழுதி பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருக்கும் சிலர். இவர்கள் மூன்றாவது அவென்யூவில் அதிகமாக இருக்கிறார்கள். இங்கு பார்க்கும்போது மனது இன்னும் கலங்குகிறது ,! இங்கு போதை மருந்துகள் சட்டபூர்வமாக கடைகளில் விற்கப்படுகிறது. இந்த 2 டிகிரி குளிரில் ஒரு டென்ட் போல உள்ள குடியிருப்பில் எப்படி இவர்கள் வாழ்கிறார்கள் என்று யோசித்துப் பார்த்தால், குளிர் , வெயில் எதுவும் அவர்களுக்கு உணர முடிந்தால் தானே பிரச்னை. ஏனென்றால் இவர்களில் 99% மேல் மேகத்துடன்தான் இல்லை இல்லை மேகத்தில்தான் வாழ்கிறார்கள், எப்போதும்!!
சீட்டிலே மேயர் தேர்தல் வருகிறது, இப்போதிருக்கும் மேயர் மிக நல்லவர், ஏனென்றால் அவர் அரசு மானியத்தை 'ஹோம் லெஸ்' எனப்படும் இவர்களுக்கு செலவிடவில்லையாம்... இது நக்கலாக இப்போது போட்டியிடும் வேட்பாளர்கள் சொல்கிறார்கள்.
அவ்வப்போது இந்தியாவின் பாலங்களுக்கு அடியில் வாழ்பவர்களை பார்க்கும்போது அடிவயிற்றை கலக்கும், 'தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையேல் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்' என்று சொன்ன மீசைக்காரனை நினைத்துக்கொள்வேன் ! அவன் பார்த்த பார்வைதான் ! பசியும், வறுமையும், படிப்பறிவின்மையும் , ஸ்டேட்டஸ் வித்தியாசங்களும் இவற்றை பார்க்கும்போது, all pervading all loving என்று சொல்லப்படும் அந்த உமையவளை, சக்தியை உரக்க அழைத்து கேட்கவேண்டும் போல இருக்கிறது, இந்த பாரபட்சம் ஏன்? ஒரு வேளை சாப்பாடு, ஒரு மேற்கூரையும் கூட இல்லாத தவிப்பு ஏன்.
எவ்வளவு தூரம் சென்றாலும் எந்த நாடு சென்றாலும் அனைவரும் மக்களே தோலை உரித்தால் சுஜாதா எழுதுவது போல ரத்தம் ஒரே நிறம் தான் !!!! அதிலும், எங்கும் வறுமை ஒன்றே. உயர்ந்த வாழ்க்கை வாழ்ந்து,அங்கிருந்து வீழ்ந்து, மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே சென்று கொண்டிருக்கும் என்னிடம், அந்த ஆண்டவன் வரம் கேட்டால் ஒரு மந்திரக்கோல் கேட்பேன், அதை தட்டிய மாத்திரத்தில், உலகெங்கிலும் உள்ள ஏழ்மை, வறுமை, அறிவின்மை, கண நேரத்தில் மறைய வேண்டும் , இத்துடன், ஆதரவற்ற அனாதைகளுக்கு அன்பு செலுத்தும் நல்ல மனங்களும், தன்னிடம் இருப்பதை பகிர்ந்து கொள்ளும் ஸ்வபாவம் உடையவர்களும் இன்னும் நிறைய மனிதர்கள் உருவாக வேண்டும், இன்னும் மேலே போனால், அந்த நிலையே இல்லாத உலகம் உருவாக வேண்டும்
மந்திரக்கோல் மனதில் தான் உள்ளது,
நாம் நினைத்தால் கையளவு மாற்றம், ஏன், விரலளவு மாற்றமாவது செய்ய முடியும்? முடியும் என்று வாழ்ந்து காட்டியவர் பலர்.எனது ஹீரோ என் அப்பா தான். அவர் பாதையில் செல்ல முயன்றாலும் முடியுமா? என்று தெரியவில்லை. இப்படி கேள்வி கேட்டுக்கொண்டு இருக்கும் மனதிற்கு ஒரு சின்ன வழி கண்டுவிட்டேன். இந்தியாவில் செய்யும் அதே செயல், சாப்பிட செல்லும் ரெஸ்டாரண்டில் ஒரு டிஷ் அதிகமாக ஆர்டர் செய்து அதை, நடை பாதையில் இருக்கும் முதியவருக்கோ இல்லை உடல் ஊனமுற்றவர்க்கோ கொடுப்பது என்று, செய்தும் வருகிறேன். இன்று என்னால் முடிகிறது செய்கிறேன்.
இன்று நாள் இனிய நாளாக
என்றும் அன்புடன்
ஜெ ...
அருமை.வீட்டில் ஆரம்பித்த இயற்கையின் லயிப்பு பின் தத்துவார்த்த சிந்தனை.புலம் பெயர்ந்த மக்களிடத்தே உள்ள நட்பு பாரட்டால்(?)
ReplyDeleteஎன்னதான் வளர்ந்த நாடானாலும் போதையினால் சீரழியும் சமூகத்தின் ஒரு பிரிவினர் அவர்களின் தெருவோர வாழ்க்கை(?) வளர்ந்த நாடானாலும் வளரும் நாடானாலும் இது போன்ற மக்களின் ஒன்றே என்று சொல்வதாகட்டும் அதன் அரசியல் நடக்கும் விதமாகட்டும்...
இவ்வளவு விஷயங்களை வெகு இலகுவாக பேச்சு தமிழில்(Tanglish) எழுதியதற்கு பாராட்டுகள்
Yess jayanthi மனசு ரொம்ப வலிக்கும் இவர்களைப் பார்க்கும் பொழுது
ReplyDelete