என்ன வித்தியாசம்

அந்த ஞாயிறு இரவு 2 மணிக்கு சியாட்டிலில் வீடு வந்து சேர்ந்தோம். சிறந்த சந்தோஷமான 15 நாட்கள் உயிரினும் மேலான உறவு என் தம்பி கண்ணன், அன்பு தோழி ஜெயஸ்ரீ , அண்ணன் ரமேஷ்,அன்பான விஜி மன்னியுடன் ஒரு வாரம், நம் குழந்தைகள் என்று நான் நினைக்கும் ஆனந்தனின் மகன், மகள், அவர்களின் அன்பு காதலர்கள் என்று எங்கெங்கும் அன்புடன் சிரிப்புடன் வளைய வந்த நான் மிகவும் உயரத்தில் பறந்தேனோ என்னவோ? வந்தவுடன் இவர் களைப்புடன் , தொண்டை வலியும் ஜூரமும் இருந்ததால் கோவிட் டெஸ்ட் செய்து அதில் நிரூபணமும் ஆகிவிட்டது. தரையில் இறங்கி மனது சம நிலைக்கு வந்தது.... Checks அண்ட் balance இதுதானோ? நிற்க எழுத நினைத்தது இதை அல்ல . ஆஸ்டினில் கண்ணனின் நாடகம் 'பாட்டி ஆனாலும் பார்ட்டி' விழுந்து விழுந்து சிரித்தோம். அந்த அரங்கத்தில் இருந்த 200 பேருக்கும் அந்த இரண்டு மணி நேரம் சொந்த பிரச்சினைகள் மறந்த ஒரு மகிழ்ச்சியான அனுபவம் . எல்லோரும் வந்து கண்ணனிடம் வாழ்த்திவிட்டு செல்லும்போது நானே அவனை பெற்றது போல பூரிப்பு. மெக்ஸிகோவில் playa del carmen என்ற நகரம் Cancun என்ற நகரத்தின் அருகாமையில் உள்ளது. இங்கு குடும்பமாக நாங்கள் ஊர் சுற்றி பார்த்துவிட்டு,சுவை மிகுந்த மெக்ஸிகன் உணவை ரசித்து சாப்பிட்டு, ஒரு நல்ல ஷோவிற்கு சென்றோம். இது வேகாஸ் நகரத்தில் நடக்கும் ஷோவை விட அருமையாக இருந்தது. சுமார் 3000 பேர் கண்டு களித்தனர். இங்குதான் மனதின் எண்ண ஓட்டத்தை நான் எழுத நினைத்தேன். ஆஸ்டினில் இருந்த 200 பேர்கள், இங்கு இருந்த 3000 பேர்கள், அவர்களின் சந்தோஷம், மெய்மறந்து அவர்கள் அதில் பரிபூர்ணமாக கலந்தது (total immersion) இதற்கும், கோயிலில் பக்தியில் திளைத்து, கண்ணை மூடிக்கொண்டு தன்னை மறந்து நிற்பதற்கும், வேலை நாக்கில் பொருத்திக்கொண்டு முருகனை நினைத்து, வலியில் சந்தோஷிப்பதற்கும், பஜனைகளில் உணர்ச்சி பூர்வமாக கலந்து பாடுபவர்களின் மெய் மறந்த நிலைக்கும், தனியாகவோ, கும்பலாகவோ உலகை கடந்த ஒரு நிலை செல்பவர்களுக்கும் என்ன வித்தியாசம் ? ரசனை, மெய்மறத்தல் அது தெய்வீக நிகச்சிகளில் நல்லது என்றும் மற்ற நிகழ்ச்சிகளில் நல்லதல்ல என்று யோசிப்பது,வளர்ந்த முறை, சூழல், வளர்க்கப்படும் விதம் இவை எல்லாம் மீறி எனது perception கண்ணோட்டம் தான் காரணம்! judgmental behaviour ! உடலெங்கும் பச்சை குத்தியவர்கள், தலைமுடியை வித்தியாசமாக நிறம் போட்டு கொண்டவர்கள் இன்னும் பலவகையான மக்களை பார்த்தால் மேம்போக்காக அவர்கள் தவறானவர்கள் ( பயத்தால்) வரும் அனுமானம் மிக தவறென்று உலகம் பார்த்தால்தான் புரியும். இதே மக்கள், இளையவர்களோ இல்லை வயது முதிர்ந்தவர்களோ சரி, எங்கும் வேலை செய்கிறார்கள் கூச்சமின்றி, அது பாரில் ட்ரிங்க்ஸ் மிக்ஸிங் , அல்லது கடைகளில், அல்லது ரோடு சுத்தம் செய்வது, uber taxi ஓட்டுவது இன்னும் பிறவற்றை பார்க்கும் போது நான் இன்னும் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. நடை, உடை, பாவனை, கலாச்சாரம், பண்பாடு, சமூக நீதி என்று குழுப்பும் எண்ணங்கள் தூய்மை படுகிறது. எல்லாவற்றிற்கும் மீறிய 'வாசுதேவ குடும்பகம்' எல்லாரும் கடவுளின் குழந்தைகளே என்று தோன்றுகிறது. After all, ரத்தம் ஒரே நிறம். எழுத நினைத்தேன் ,எழுதினேன் பகிர நினைத்தேன் பகிர்ந்தேன் அன்புடன் ஜெ.....

Comments

Popular posts from this blog

இந்த சந்திப்பு.........

அங்கும் இங்கும் -கல்யாணமே வைபோகமே!

நாலு பேர்