இதயத்தின் கிறுக்கல் 1 இன்றய எண்ணங்கள் நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்' இது பாட்டு இல்லைங்க ! நினைப்பு தான் ! பிழைப்பை கெடுக்கும் ! பணமில்லாததால் பணம் தேடுவதும், அன்பு இல்லாததால் அன்பை தேடுவதும் எப்போது பார்த்தாலும் எதையாவது தேடுவதும் தான் வாழ்வே என்ற உண்மையை மறக்கவோ மறுக்கவோ முடியாது. தேடுவது எப்போது நிற்கும். எண்ணங்கள் நிற்கும்போது! சுதந்திரம் அடையும் போது . எண்ணங்கள் எப்போது நிற்கும் ? இப்படித்தான் வாழவேண்டும் என்ற நிலையில் இருந்து விடுபட்டால் சுதந்திரமா? என்றால் கிடையாது. . ஆயிரம் ஆயிரம் மைல்களுக்கப்பால் சென்றால், உறவையும் சுற்றத்தையும் விட்டால், சுதந்திரம் இல்லை. நம்மில் இருக்கும் எண்ணங்கள் நம்மை விட்டு செல்லும்போதுதான் சுதந்திரம். இவ்வாறாக அர்த்தமற்ற வாழ்க்கைக்கு அர்த்தம் தேடுவதுதான் வாழ்க்கையோ ? நீ பாட்டுக்கு சொல்லிவிட்டாய் நான் யார் என்று கேள் என்று..... கேட்டு கேட்டு சலித்து போய் என்னை உன்னிடம் ஒப்படைத்து விட்டேன் என்றாலும் இன்னும் என் தேடல் நிற்கவில்லை என் ரமணா !!!!!! எங்கெங்கு காணினும் சக்தியடா என்றான் பாரதிதாசன் இன்று அவன் உயிருடன் இருந்தால் எங்கெங்கு காணின
Posts
- Get link
- Other Apps
By
CheersJayy
இதயத்தின் கிறுக்கல் 2 இன்று !!!! பழைய ஹிந்தி பாடல்கள்களுடன் நினைவுகளும் பின்னோக்கி செல்கிறது. புதன்கிழமைகளில் ரேடியோ சிலோனில் அமீன் சயானியுடன் பினாகா கீத்மாலா ! அம்மா அப்பா சாரதா பாட்டி அந்த ரேடியோவை சுற்றி.... புரிந்தும் புரியாமலும் பாலு, நான், பாப்பு ...... மீண்டும் சிலவருடங்களுக்கு பிறகு மஞ்சயே கீத் , ஜெய்மாலா , பூலே பிஸ்ரேகீத் என்று விவிதபாரதியில் ... இன்று அந்த நாட்கள் கடந்து கைபேசியில் எல்லாம்... ஆனால் அந்த சந்தோஷம் பறந்து விட்டது ...... தேடுதுவது அதைத்தானோ! சந்தோஷத்தையா ? இல்லை நம்முடன் இருந்த உறவுகளையா ? நின்று திரும்பி பார்க்கும் போது ஒரு பெரிய திரைப்படம் போல ஓடுகிறது நம் கடந்த கால வாழ்க்கை . உள்ளே நுழையும்போதே ஜெயம்மா என்று கூப்பிடும் GS, எப்போதும் பேசாமல் திடீரென்று ஜோக் அடிக்கும் அப்பா, சைக்கிளில் ஒரு கால் தரையில் ஒரு கால் வைத்துக்கொண்டு தலையை சாய்த்து பார்த்து 'மன்னி' என்று வாசலில் இருந்து கூப்பிடும் சம்பத், 'வாடா அம்மு' என்று உரிமையாக சம்பத்தை உள்ளே கூப்பிடும் அம்மா, மனசு கோணாமல் எல்லோருக்கும் சாதம் போடும் பெரிய மன்னி, 'ங்கேன்னு நோஞ்சானா இருக்கா
பெற்றால் தான் பிள்ளையா -சிறுகதை-10
- Get link
- Other Apps
By
CheersJayy
15/10/20 காலையில் இருந்து ஒரே பரபரப்பு . 7 கப் கேக் ஸ்வீட் செய்தாகிவிட்டது. டிரைவர் தனசேகர் கொண்டுவந்த மல்லிப்பூவை சஷ்டியுடன் சேர்ந்து நல்ல நெருக்கமாக தொடுத்து எடுத்துவைத்துவிட்டேன். சுவேதா என்னுடைய பிளவுசை டைட்டாக பிடித்துவைத்தாள் . அந்த வெங்காய கலர் ஜெய்ப்பூர் காட்டன் சாரீ நிச்சயமாக அவளுக்கு நன்றாக இருக்கும் என்று ஒரு மெல்லிய சந்தோஷம் புன்னகையாக என் முகத்தில் தவழ்ந்தது. பிள்ளை வீட்டார் 3.30 மணிக்கு வந்துவிடுவார்கள். காபி பில்டர் போட்டுவிட்டு, கொஞ்சம் ஸ்னாக்ஸ் ஸ்விக்கியில் ஆர்டர் செய்து விட்டேன். நடு நடுவே வீடு சமையல் வேறு. எல்லாவற்றையும் முடித்து நான் புடவை மாற்றிக்கொள்ள சென்றேன். ஜூஹி இன்னும் வரவில்லையே என்று மொபைலில் வாட்சப்பை (whatapp) அடிக்கடி பார்த்துக்கொண்டிருந்தார் இவர். எங்கள் இருவருக்கும் இன்று மிக முக்கியமான நாள். ஜூஹியை பெண் பார்க்க வருகிறார்கள். பிள்ளைகள் எல்லாரும் வெளிநாட்டில் வாசம். நங்கள் இருவரும் இங்கே இந்தியாவில். ஆதரவாக அன்புடன் பேச துணையாக பெண் குழந்தை !நினைவலைகள் பின்னோக்கி சென்றது. எப்படி ஜூஹி எங்கள் மகளானாள் !!!!! அந்த காலை பொழுது இனிதே பிறந்தது. இவரும் நான
Ram’s Window of ….. !!!!
- Get link
- Other Apps
By
CheersJayy
Ram’s Window of ….. That is a wide window, opens wider! Ram is waiting!! He religiously waits at this time of the day and day after day, even the Sun may rise late but from Monday to Friday, Ram never delays being there, not a day!!!! But for the vacation times. Ram sits on his chair near the window, watching the bus stop across the road, waiting for the crowd that goes by the 9 am bus! This bus rides through couple of women's and men’s colleges. college time... all young adults, full of vibrant energy, few girls who knew that they really look good, highlight their special features, do you wonder what, that is highlighting the special feature.... hmmmm well, a girl with big and wide eyes, would have used all the range of eye products, where as a girl with long hair will straight away tie you down with her crowning glory... What boys do? They are no less than girls!!!!Few smarties ignore girls as if they don't exist!!!- this is the main point of attraction for girls and t
சிறுகதை-9 உண்மையில்?
- Get link
- Other Apps
By
CheersJayy
சிறுகதை -9. உண்மையில் ? உண்மையில் ? இந்த மனிதனின் ரெஸ்ட்லெஸ் நடையை பார்த்துக்கொண்டிருந்த எனக்கு சிந்தனைகள் வெகுவாக சுழன்றுகொண்டிருந்தது . நல்ல உயரம் , செக்க செவேல் என்ற நிறம் , முகத்தின் பாதிக்குமேல் மழிக்கப்படாத தாடி , கூர்ந்த நாசி , நிச்சயம் நல்ல குடும்பத்தில் இருந்து வெளியில் வந்தவனோ அல்லது விரட்டப்படவோன தெரியவில்லை . முடியில் சடை போட்டிருந்தது . குளித்தே பல நாட்களாயிருக்கும் என்பதாய் அவனுடைய உடைகள் உணர்த்தியது . அவன் அருகில் ரெண்டு மூன்று புத்தகம் , ஒரு பாக் பேக் . காற்றை நோக்கி வலது கையையும் இடது கையையும் கோபத்துடன் kungfu பாணியில் குத்திக்கொண்டு கத்திக்கொண்டும் முன்னும் பின்னுமாக நடந்து கொண்டிருந்தான் . அவன் ஒரு காலில் ஹவாய் செருப்பும் , மற்றொரு காலில் நல்ல லெதர் பாக் ஸ்ட்ராப் செருப்பும் அணிந்துஇருந்தான் . இவனின் இந்த நிலைமைக்கு யார் காரணம் . அவன் யார் பெற்ற பிள்ளையோ ? எனது தாயுள்ளம் நெகிழ்ந்தது . வாட்ச்மேன் மித்ராவை இன்டெர்காமில் அழைத்தேன் , ' மேல வாப்பா கொஞ்சம் எ