இதயத்தின் கிறுக்கல் 1
இன்றய எண்ணங்கள்
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்'
இது பாட்டு இல்லைங்க !
நினைப்பு தான் ! பிழைப்பை கெடுக்கும் !
பணமில்லாததால் பணம் தேடுவதும்,
அன்பு இல்லாததால் அன்பை தேடுவதும்
எப்போது பார்த்தாலும் எதையாவது தேடுவதும் தான் வாழ்வே என்ற உண்மையை மறக்கவோ மறுக்கவோ முடியாது.
தேடுவது எப்போது நிற்கும். எண்ணங்கள் நிற்கும்போது! சுதந்திரம் அடையும் போது .
எண்ணங்கள் எப்போது நிற்கும் ?
இப்படித்தான் வாழவேண்டும் என்ற நிலையில் இருந்து விடுபட்டால் சுதந்திரமா? என்றால் கிடையாது.
. ஆயிரம் ஆயிரம் மைல்களுக்கப்பால் சென்றால், உறவையும் சுற்றத்தையும் விட்டால், சுதந்திரம் இல்லை.
நம்மில் இருக்கும் எண்ணங்கள் நம்மை விட்டு செல்லும்போதுதான் சுதந்திரம்.
இவ்வாறாக அர்த்தமற்ற வாழ்க்கைக்கு அர்த்தம் தேடுவதுதான் வாழ்க்கையோ ?
நீ பாட்டுக்கு சொல்லிவிட்டாய் நான் யார் என்று கேள் என்று..... கேட்டு கேட்டு சலித்து போய் என்னை உன்னிடம் ஒப்படைத்து விட்டேன் என்றாலும் இன்னும் என் தேடல் நிற்கவில்லை என் ரமணா !!!!!!
எங்கெங்கு காணினும் சக்தியடா என்றான் பாரதிதாசன்
இன்று அவன் உயிருடன் இருந்தால் எங்கெங்கு காணினும் கணினி என்பானோ ? ஒரு நிமிடம் நினைத்து பார்க்கிறேன் 1 மீசைக்காரன் முண்டாசு கவி இந்த கைபேசியுடனும் கணினியுடனும் என்ன வேதனை பட்டிருப்பான். அவன் நின்னை சரண் அடைந்தேன் கண்ணம்மா என்று தட்டச்சில் பதிவு செய்வதற்கு முன் பத்து வித்தியாசமான பரிந்துரைகள் வந்திருக்கும். நொந்து போயிருப்பான் பாரதி. நல்ல வேளை இன்று அவன் நம்முடன் இல்லை. ஒரு காந்தியோ ரமணரோ அவ்வளவு ஏன் என் அம்மாவோ அப்பாவோ இப்போது இல்லாதது ஒரு வகையில் நிம்மதியானதே. நாம் அவர்களை சந்திக்கும் கொஞ்ச நேரமும் கூட whatsapp இ மெய்ல்களையும் பார்த்துக்கொண்டு , போரததற்கு போட்டோ எடுத்துக்கொண்டும் அவர்கள் உயிரை வாங்கிவிடுவோம் என்று தெரிஞ்ந்துதான் அவசரமாக சென்று விட்டார்களோ. இப்போதெல்லாம் zoom இல் funeral கூட நடந்துவிடுகிறதே. நல்ல வேளை, அவர்கள் இறந்து பிழைத்த விட்டார்கள்.
இன்றிலிருந்து தினம் ஒரு மின்னஞ்சல் என்றும் அன்புடன்
ஜெ ......
Nice fluid writing style. Keep it up.
ReplyDelete"இறந்து பிழைத்து விட்டார்கள்" - அருமையனா வரிகள்
அம்மா..உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக ஆழமாகவும் , அர்த்தம் உள்ளதாகவும்
ReplyDeleteஇருக்கிறது . I love your casual and humorous writing style. Enjoyed reading your posts .