இதெல்லாம் ஆராயக்கூடாது அனுபவிக்கனும்'-கிறுக்கல் 4
இதெல்லாம் ஆராயக்கூடாது அனுபவிக்கனும்' எழுத உட்கார்வதற்கு முன் யோசித்து பார்த்தால் எழுத வருவதில்லை. எந்த நிமிடம் நம்மிடம் பேனாவோ , லேப்டாப்போ இல்லையோ அப்போது அப்படி ஒரு கற்பனை ஓட்டம். என்ன வென்று கேட்டகிரிர்களா?, இன்று நான் பூஸ்டர் டோஸ் இன்ஜெக்ஷன் போட சென்றிருந்தேன். 10.30 மணி காலை , இந்தியாவில் மணி 12, என் பிறந்தநாள் தொடங்கிவிட்டது. என் இனிய ஸ்நேகிதி கிருஷ்ணா பாண்டிச்சேரியில் இருந்து தொலை பேசியில் கூப்பிட்டாள். ! நினைவுறுத்தினாள் இன்று என் பிறந்த நாள் என்று!!! நம் பிறந்தநாளை நம்மை விட நாம் விரும்பும் 4 பேர் நினைவுறுத்தும் போது வரும் சந்தோஷம் தனி தான் ! மீண்டும் பூஸ்டர் ஊசிக்கு வருவோம். பூனைக் கண்கள், சுமாரான உயரம் , blonde லுக்ஸ் இருந்த இந்த பெண், எந்த நாட்டவராக இருப்பாள் என்று யோசித்தேன் (வேண்டாத வேலை தான்) இப்போதெல்லாம் இப்படி யோசித்து ஒருவரை பார்ப்பது வழக்கமாகிவிட்டது. ஏன்? இந்த அமெரிக்காவின் குடிமக்கள், உலகம் முழுவதிலும்...