பிறப்பு நாள் சான்றிதழ் !!!! -சிறு கதை 5

சிறு கதை 5 

பிறப்பு நாள் சான்றிதழ் !!!! 

சிம்பிளாக இருந்த நம் எல்லோரின் வாழ்வில்  விழயங்கள் மாறிவிட்டதுவிவரம் தெரியாத அப்பாமிக விவரமான அம்மாஅழகான மூன்று சகோதரர்கள் , அன்பான அத்தை , சித்தப்பாமாமாக்கள்,  சித்திகள் , தோழி/தோழர்கள் என்ற உறவுகள் என்று  சந்தோஷமான நாட்கள்!!!! மாறிவிட்டதோ என்னவோஅன்பு இருக்கிறது நேரம் இல்லையோ என்னவோ!
 52 ஆண்டுகளுக்கு முன் 
அந்த நாளைய நட்பு , நம்பிக்கையின் அடிப்படையில் தான் . 
என்னை பள்ளியில் சேர்க்க கிளம்பிய என் அப்பாவிடம் , பக்கத்துக்கு வீட்டு ரேணுகாவின் அப்பா எஞசாமி மாமா , நம்ம ரேணுவையும் சேர்த்துவிடுங்கள் என்று சொல்ல, கிளம்பினார் என் அப்பா , 
ஏதோ சென்று ஸ்கூலில் சேர்த்தோம் என்றுமூத்த மகனின் பிறந்த நாளில் இருந்து மாதமும் வருடமும் நினைவுக்கு வந்துஎன்னுடைய பிறந்த நாள் மட்டும் நினைவில் கொண்ட அப்பா தப்பான பிறந்த நாளை பதிவு செய்துமிக பெருமையாக என்னை ராஜலட்சமி மாண்டிச்செரி பள்ளளியில் சேர்த்துவிட்டு வீட்டிற்கு வந்தார்செருப்பை கழற்றியவரே,' ரேணுவையும் சேத்துட்டேன் ' என்றவாறு உள்ளே வந்தார்நானும் ரேணுவும் ரோட்டில் விளையாட போய்விட்டோம்.
வயது கூட ஆகாத எங்கள் இருவருக்கும் தெரியாது விதி செய்த சதி!!! 
2018 November 
என் பிள்ளை  அமேரிக்காவில் இருந்து வந்தான் . ' அம்மா முதலில் நீ ஒரு பர்த் செர்டிபிகட் வாங்க பார்நாளைக்கு US க்கு க்ரீன் கார்ட் வாங்கணும்ன்னா தேவையாய் இருக்கும்என்றான். "சரிபார்க்கிறேன்என்றேன்இணையதளம் இருக்கும் இந்நாளில் எல்லாம் சுலபமே என்று தப்பான நம்பிக்கையுடன் !!!!. கூகுளில் தேடினேன்இந்த சான்றிதழை பெற முயற்சிப்பது அமெரிக்காவில் க்ரீன் கார்டு வாங்குவதை விட கடினம் போல!! இருப்பதெல்லாம் இருக்கட்டும் , முயற்சிக்காமல் விடக்கூடாது என்று மனதில் தீர்மானித்து விட்டேன்.... 
அந்த வாரமே ஒரு டாக்ஸி எடுத்துக்கொண்டு நான் பிறந்த சிதம்பரத்தை நோக்கி பயணித்தேன்டிஸ்ட்ரிக்ட் கலெக்டர் அலுவலகத்துக்கு போன எனக்கு சரியான வரவேற்புஅசந்து போய் விட்டேன்என்னை அழைத்துக்கொண்டு போய் கெஸ்ட் லௌஞ்சில் அமரவைத்தார் அந்த பியூன்தண்ணீர் கொண்டு வந்தார்நான் தயங்கியவாறே அவரிடம்சார்நான்.... அவர் அவசரமாக "தெரியும் மேடம் நீங்க கடலூர் சப் ரெஜிஸ்ட்ரார் தானேகலெக்டர் சொன்னார் நீங்க வருவீங்கன்னு." !!!

ஹை நெக் பிளவுஸ்காட்டன் சாரீ அணிந்ததுஇரண்டாவதுதலை மீது சன் கிளாஸ்ஸஸ்கையில் ஒரு பைல் ! அவர் என்னை தவறாக புரிந்து கொண்டு விட்டார்உள்ளுக்குள் அடக்க முடியாத சிரிப்புடன்பொறுமையாக நான் வந்த விஷயத்தை விளக்கினேன்

இந்தியாவில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்ன என்றால் உதவும் மனப்பான்மைஅந்தபெரியவர்,சிரித்துக்கொண்டே சில விதிமுறைகளை விளக்கினார்எங்கே போக வேண்டும் , எந்த பார்ம் பூர்த்தி செய்ய வேண்டும்எந்த அறையில் உள்ள கவுண்டரில் பணம் கட்டுவது வரை உதவி செய்தார்அந்த சின்ன ஊரின் கலெக்டர் இன்னும் வரவில்லை.... அவர் மேலும் சொன்னார், 'நீங்கள் இதெல்லாம் முடித்துவிட்டு வந்து கலெக்டரை பார்த்துவிட்டு ஊருக்கு கிளம்புங்கள் 'என்றும் அட்வைஸ் செய்தார்நானும் ஒருஒரு வேலையாக அவர் கூறிய வண்ணம் செய்தேன்ஒரு கட்டத்தில்  இக்கட்டு வந்தது.

நான் பிறந்த ஊரில்நான் அங்குதான் பிறந்தேன் என்று  எனக்கு சாட்சி சொல்ல யாரும் இல்லைஊரை விட்டு குடி பெயர்ந்து வயிற்றுப்பிழைப்பு என்று எல்லாரும் வரு வேறு ஊர்களுக்கு சென்றுவிடுவதால் 
இப்படியெல்லாம் பிரச்னை வரும் என்று நினைக்கவில்லையேஎல்லா வேலையையும் முடித்து மீண்டும் சப்-கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தேன்.

 இப்போது கலெக்டர் வந்திருந்தார்நம்ம பியூன் என்னை அழைத்துக்கொண்டு உள்ளே போனார்

இது ஒரு மிக இனிய சந்திப்பு
என் தலைமகனை விட இளம்பிராயமான கலெக்டர்வயது ஒரு 30 தன் இருக்கும்முன்பே விவரங்களை இந்த பியூன் சொல்லி இருந்ததால் அவர் நேரடியாக விஷயத்துக்கு வந்தார்.'''' சாட்சி இல்லாமல் ஒன்று செய்ய முடியாதே... யாரவது உங்க அங்கிள் இல்லை தாத்தாவின் நண்பர்கள்யாரவது" என்று அவர் கேட்டுக்கொண்டே போகநான் "யாரும் இல்லை சார்" என்று மறுத்துக்கொண்டே போக , இதென்ன திடீர் எண்ணம்."" சார்சார் நம்ம ரெண்டு பேருக்கும் தெரிஞ்ச ஒருத்தர் இந்த ஊரில்தான் இருக்கார்கேட்டு பாக்கலாம்னாநான் கேட்டுட்டேன் அவருதான் உங்க கிட்ட அனுப்பிச்சார்நீங்க நெனைச்சா நடந்துடும்ன்னு அனுப்பிச்சாரோ என்னவோ?" என்றேன் நான். "mutual  தெரிஞ்சவரா , எனக்கும் அவரை தெரியுமா ? ஹ்ம்ம்ம் யாராயிருக்கும் ?'' என்று யோசிக்க துவங்கினர்ஒரு 5 நிமிட யோசனைக்கு பிறகுஎன்னை பாரர்த்து  யாரரம்மா அவர்நான் சிரித்துக்கொண்டே,' நடராஜா  தான் சார் என்றேன் .....' வாட் இது அவர், 'லார்ட் நடராஜா சார் ' ! அவர் வாய்விட்டு  சிரித்தார்.'நீங்க ரொம்ப ஸ்மார்ட் லேடி! ' என்றவாறு அந்த பாரத்தில் ஏதோ எழுதி கையெழுத்து போட்டுவிட்டு அந்த பியூனை கூப்பிட்டு சில ஆணைகளை  கொடுத்தார்என்னை நோக்கி சற்றே சிரித்தவாறு,' 'மேடம் இது அவ்ளோ ஈஸி  இல்லநீங்க மறுபடியும் அட் லீஸ்ட் 2 முறையாவது வர வந்திருக்கும்குட் லக் ' என்றார்அவர் சாதாரணமாக சொல்லிவிட்டார் 2 தடவை என்றுகிட்டத்தட்ட 6 முறை சென்று ஒரு சுபயோக சுபதினத்தில் நான் மீண்டும் பிறந்தேன் என்னால் அண்ணனை விட 6 நாட்கள் மூத்தவளாகமிஷன் அகாம்ப்ளிஷ்ட் !!!!!

மீண்டும் கதையின் முதல் பாராவிற்கு செல்வோம்.
துபாயில் இருந்து வந்த ரேணுவிடம் இந்த தேதி மாற்ற விஷயத்தை பகிற,  அவள் சிரித்துக்கொண்டேஉங்க அப்பா உனக்கு மட்டுமில்ல எனக்கும் 2 வருட சர்விசை குறைத்து விட்டார் என்றாள்... இருவரும் சிறிது நேரம் இடைவெளி விடாமல் சிரித்தோம்என்  தோழி 58 வருடங்களாக இதே விதமான அனுபவத்துடன்!!!!!அப்பா எல்லோரையும் தன் குழந்தைகளாகவே பார்ப்பார்ஆனால்  இந்த அளவிற்கு என்று அன்றுதான் புரிந்தது.
என் அப்பாவின் அறியாமையை விடரேணுவின் அப்பாவின் நட்பின் நம்பிக்கையை பார்க்கும் போதுஎங்கள் இருவருக்கும்  போனது இரண்டு வருடமாயினும்போய்விட்டது அது போன்ற நட்புகளும் தான் என்ற புரிதலில்  மனசு லேசாக வலித்தது.

Comments

Popular posts from this blog

இந்த சந்திப்பு.........

அங்கும் இங்கும் -கல்யாணமே வைபோகமே!

வெகு நாட்களுக்குப் பிறகு