இலக்கு தெரியாமலே---சிறு கதை -3

மூன்றாவது கதை 

இலக்கு தெரியாமலே
சியாட்டில் நகரத்தின் அழகில் மயங்கி, யூனிவர்சிட்டி , படிப்பு,, மகன், மருமகள், பேத்தி , ஆனந்த் (மிக நல்ல நண்பர்) என்று வாழ்க்கை நிம்மதியாக ஓடிக்கொண்டிருந்தது . மெல்ல க்ளைமேட் மாறி குளிர் ஆரம்பித்ததுஎல்.ஷங்கரின வயலின் இசையில் மெல்ல சிணுங்கியது என் மொபைல்ஆனந்த் சான் ஹுஸேயில் இருந்து, ஆச்சர்யமாக இந்த நேரத்தில், பரபரவென்று கல்லூரி கிளம்பும் நேரத்தில, ஹ்ம்ம் என்னவோ ஏதோவென்று நினைத்து,'ஹாய் , ஆனந்த் குட் மோர்னிங், சொல்லுங்கோ" என்றேன்.  'அம்மா சியாட்டில் வரா இன்னிக்கு சாயங்காலம், வின்டர் இங்கதான் இருப்பா, philadelphia ரொம்ப குளிர்.... மார்ச் மாசம் வரைக்கும் இருப்பா? உனக்கு ஒண்ணும் ஆட்சேபேனை இல்லையே?' என்றார். எனக்கு சந்தோசமாகவும் பயமாகவும் இருந்தது.'of  course , no issues , மாறாக எனக்கு ரொம்ப சந்தோஷம் , ஏன்னா எனக்கும் ஒரு கம்பெனி வீட்ல 'என்றேன் நான்.ஆயிற்று, வந்தார் மாமி, மாமிக்கும் சேர்த்து சமயல் செய்து விட்டு, காபி போட்டு கப்பில் வைத்துவிட்டு நானும் வழக்கம் போல் கல்லூரி சென்று கொண்டு இருந்தேன். மாமி சாப்பிட்டுவிட்டு,மதிய வேளைகளல் காப்பியை மைக்ரோ வேவில் சுட வைத்து குடித்துக் கொள்வார்.அன்று  நான் வந்தவுடன் மாமி  'வாக்கிங் போகலாமா? என்றார். ஒரு 30 நிமிடம் சியாட்டில் யூனியன் தெருவில் இருந்து  பைக் தெரு வரை நடந்து வந்தார். மெதுவாக என் கையை பிடித்துக்கொண்டு ஒரு பெஞ்சில் உட்கார்ந்துகொண்டு, என்னை பார்த்து, "அமாம்,நீ படிப்பை முடிச்சுட்டு என்ன பண்ண போற, இங்க இருப்பியா இந்தியா போய்டுவியா ?'.நான் என்ன பதில் சொல்வது. பதில் தெரியாத பல கேள்விகளில் ஒன்று  இந்த கேள்வி. பதில் தெரியாத  கேள்விகள்தான் நிறைந்ததுதான் வாழ்க்கை என்று நான் எப்போதும் நினைப்பேன். இந்த கேள்வியும் அப்படி ஒன்றுதான்.' ஏன் மாமி, எதுக்கு கேக்கிறேள் ?' என்றேன் நான்  "உனக்கிட்ட சொல்லாம என்னஎனக்கு இந்தியா போய்தான் சாகனும், நீ போறன்னா நானும் உன்கூட வரேன்என்னை இழுத்து போட்டுடறயா ? "..... எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல், தனது கருத்தை என்றும் வெளிப்படுத்தாமல், தன் வாழ்வில் நடந்த எல்லா விழயங்களையும் மனதில் போட்டுகொண்டு, வெளி நாடு சென்ற குழந்தைகள், அவர்களின் பன்னாட்டு மனைவிகள், அவர்களின் அசைவ உணவு, பழக்க வழக்கங்கள், ஆனந்தின் விவாகரத்து, ஒரு இருதய அறுவை சிகிச்சை, வேறு நாட்டுவாசம் , பயணம் என்று எல்லாவற்றையும் பார்த்த மாமிக்கு, முதன்முதலில் தனக்கென்று கேட்டது இந்த கேள்விதான். வழக்கம் போல, சிரித்துக்கொண்டே, 'மாமி, நான் உங்களை இழுத்துபோடுறனோ இல்ல நீங்க என்னை இழுத்து போடறேளா, நான் உங்களை கட்டாயம் பாத்துக்கிறேன் மாமி, இருட்டறது வாங்கோ போகலாம்' என்றவாறே எழுந்தேன். இது பற்றி அனந்திடம் சொல்ல வேண்டும் என்று நினைத்துக்கொண்டு வீட்டை நோக்கி நடை தொடர்ந்தது.. வழி முழுவதும், ' நீ எது நான் எது, ஏனிந்த சொந்தம், பூர்வஜென்ம பந்தம்' என்று கண்ணதாசனின் வரிகள் எதிரொலித்துக் கொண்டிருந்தது., மாமியின் இந்த சொந்தமும் இதுதானோ!!!வீட்டிற்கு வந்து, டின்னர் முடிந்து படிக்க உட்கார்ந்தேன், மனகுதிரை பின்னோக்கி சென்றது, புற்றுநோயால் தவித்த அம்மாவின் குரல்,' ஜெயம்மா நீ இருந்தாதான் எனக்கு சௌகர்யமா இருக்கும், ப்ளீஸ் என்னோட இருக்கியா?, இன்னும் கொஞ்ச நாள்தான் , நான் போய்டுவேன் இல்ல !' (இன்றும் அந்த நடுங்கும் குரல் காதில் ஒலிக்கிறது)மனதில் வந்த கட்டுப்படுத்தமுடியாத உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக்கொண்டு, நான் "அம்மா. வித்யா, சுமதி, பாலு பாப்பு எல்லாரும் இருக்காளே அம்மா. அங்க ஷ்ரவண் , அஸ்வின், GS எல்லாரும் மேனேஜ்  பண்ண முடியுமா தெரியலையே , இப்போதான் பம்பாய் வந்துருக்கோம் , குழந்தைகள் இன்னும் செட்டில் ஆகலை வேற, பாக்கிறேன்மா" என்று சொல்லிவிட்டு, அன்றிரவு GS'யிடம் பேசினேன்."இப்போ வெகேஷன் தான , ரெண்டு பேரும் மேனேஜ் பண்ணிப்பாங்க ' என்றார் GS . மூன்று மாதங்கள் அம்மாவுடன் கடைசியில் அவள் தனது இறுதிப்பயணத்தை முடித்து சிதையில் வைக்கும் வரை மேலும் அண்ணாவுடன் 13 நாட்கள் காரியம் முடிக்கும் வரை தங்கி பம்பாய் திரும்பினேன். ஹம்ம்ம்ம்ம்ம் பெரு மூச்சு தான் மிச்சம். அம்மாவும் சென்று, Gsம்  அப்பாவும், ஆறுமுகமும் என்று சென்றுவிட்டனர். அர்த்தமில்லாத வாழ்க்கையில் இந்த சம்பவங்கள் அர்த்தம் தருகிறதோ !!! நினைவுகளிலிருந்து மீண்ட நான் தீர்மானித்து விட்டேன். எனது வாழ்க்கையின் மித்த நாட்கள் இந்த மாமியை பார்த்துக்கொள்ளவேண்டும் ! அமெரிக்கா என்ன பெரிய விஷயமா, படிக்க முடிந்தது, பட்டம் வாங்கினேன், அதைவிட மிக அரிய  சந்தர்ப்பம் இந்த மாமியை சந்தோஷமாக பார்த்துக்கொள்வதுதான்.சின்ன வயதில் இருந்து அடுத்தவர்களின் சந்தோஷத்தில் என் சந்தோஷத்தை பார்ப்பதால்தான் இந்த முடிவு சுலபமாக எடுக்க முடிந்தது.மீண்டும் புறப்பட்டேன் இலக்கு தெரியாமலே...

Comments

Popular posts from this blog

இந்த சந்திப்பு.........

அங்கும் இங்கும் -கல்யாணமே வைபோகமே!

வெகு நாட்களுக்குப் பிறகு