சீ யூ டூமாரோ !!!--சிறு கதை -2

 இரண்டாம் கதை 
ஸீ யூ டுமாரோ 

வழக்கம் போல தினம் காலை எழுந்துதவறாமல் செய்யும் பழக்கமான காரியங்கள்,
M.S  சுப்பலக்ஷ்மியின் சுப்ரபாதத்தில் ஆரம்பித்துக் குறை ஒன்றும் இல்லை வரை அலைப்பேசியில் 
ஒலித்துக் கொண்டிருக்ககூடவேஎண்ண  ஓட்டங்களை நிறுத்திஅப்போதைய வேலைகளில், த்யான நிலையில் வீடு வேலைகள் செய்து கொண்டிருந்தேன்அன்றைய சமையல்நடுவில்அமெரிக்காவில் 
இருந்து கண்ணனின் அழைப்புஅலைப்பேசியைத் தோளில்  வைத்துக்கொண்டு அவனுடன் 
பேசிக்கொண்டே தாளித்துக் கொட்டி ரசத்தை மூடி வைத்து விட்டுபிரெஞ்சு வகுப்புசமஸ்க்ரித வகுப்புஆங்கில வகுப்பு என்று நாள் கடக்கிறது இந்த லாக்டவுன் .

ஆயினும் மனதின் ஒரு மூலையில்கடமைகளை முடித்துவிட்டேன்இன்னும் எத்தனை நாள் எதற்காக இந்த வாழ்க்கை என்று கேள்வி சின்னத்திரி போல இம்சிக்காமல் கேள்வி கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

மணி 12.30, மதிய உணவிற்காக மாமி வந்து விட்டார்அவரின் வயது 94 நடக்கிறதுசரியாய் நேரம் 
தவறாமை அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்றுநேரம்சுத்தம்அளவான உணவு என்று பல 
விதிமுறைகளை கடைப்பிடிப்பதால்தான், நோய் நொடி இல்லாமல் சாயங்காலம் தினமும் நடை பயிற்சிக்குச் செல்லும் அளவு ஆரோக்கியமாக இருக்கிறார்.என் எண்ண ஓட்டத்திற்கு இடையில் இதென்ன 
மாமி இடைச்செருகல் என்று கேட்கிறீர்களாஎதைப் பற்றிய சிந்தனை இல்லாமல் வாழும் மாமி ஒரு 
inspiration!

 நாள் முழுவதும் வேலை முடித்துபடுக்கப் போகும் முன் ரமணரிடம் , இப்போதே நான் தயார்கொண்டு செல் என்று மனதார வேண்டிக்கொண்டு படுக்கைக்குச் சென்றேன்மெலிதாக ராஜாவின் இசையைத் தவழ விட்டவாறேவிட்டதை நோக்கி இன்று கடைசி நாளாக இருந்தால் மிக்க மகிழ்ச்சி என்ற 
எண்ணத்துடன் தலையணையைத் தொட்டது என் தலை
டொக் டொக் என்ற சத்தம்படுக்கை அறை வாசலில் மாமி,' குட் நைட்ஸீ யூ டூமாரோ !'புரட்டிப் 
போட்டது என்னை!59 வயதில் வாழ்க்கையில் உற்சாகம் இல்லாத நான்எழுந்து உட்கார்ந்து நினைத்துப் பார்த்தேன், 30 வயதில் ,5 குழந்தைகளுடன் விதவையாகி தனக்கென்று ஒரு உறவும் இல்லாமல்நாட்களை 
எண்ணிக் கொண்டிருக்க வேண்டிய வயதில்ஸீ யூ டூமாரோ வா !!!!!உண்மையில் எனக்குத்தான் 94 ஆகிவிட்டது போலும்மீண்டும் தூங்க முயற்சிக்கும் போது 
நாளை என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டே ..........ஸ்ஸ்ஸ்ஸ் !!!!

Comments

Popular posts from this blog

இந்த சந்திப்பு.........

அங்கும் இங்கும் -கல்யாணமே வைபோகமே!

வெகு நாட்களுக்குப் பிறகு