சிறுகதை-8-பார்கவி '
சிறுகதை -8 பார்கவி ' பீமண்ண முதலி வீதி என்ற ஞாபகம் . 1960 இல் இருந்து 80 வரையில் அடிக்கடி சென்று வந்த ஒரு அழகான வீடு , வீடு என்பதைவிட விசாலமான பங்களா . அந்த வீட்டின் காம்பௌண்டு சுவற்றில் இருந்து , கேட் வரை ஒரு அழகு . கேட்டை திறந்து உள்ளே சிறிது நடந்து வீட்டின் வாயிற்படியில் ஏறியவுடன் ஒரு அரை வட்ட தாழ்வாரம் போன்ற ஒரு பலகணி . அதில் பிரம்பு நாற்காலிகள் , பெரும்பாலும் அங்கேதான் கண்ணாமணி மாமா அமர்ந்து பேப்பர் படித்து கொண்டிருப்பார் . அதை தாண்டி உள்ளே சென்றால் , மிக பெரிய ஒரு ஹால் , சுமார் 30 பேர் ஒரே முறையில் அமர்ந்து சாப்பிட முடியும் . அதை தாண்டி ஒரு விசாலமான சமயல் அறை . ஹாலின் முன்புறத்தில் இரண்டு அறைகள் . சமயல் அறையை தாண்டி பின்புறம் கொல்லைப்புறம் , சுற்றிலும் மரங்கள் , விளையாட நிறைய இடம் , முன்புறம் நித்யமல்லி கொடி பூத்து குலுங்கிவண்ணம் இருக்கும் . உள்ளே நுழயும்போதே நல்ல நறுமணம் வீசும் . சுசி மாமியும் விஜயம் மாமியும் , தலை நிறைய அந்த பூக்களை அழக...