சிறுகதை-8-பார்கவி '
சிறுகதை-8
பார்கவி '
பீமண்ண முதலி வீதி என்ற ஞாபகம். 1960இல் இருந்து 80 வரையில் அடிக்கடி சென்று வந்த ஒரு அழகான வீடு, வீடு என்பதைவிட விசாலமான பங்களா . அந்த வீட்டின் காம்பௌண்டு சுவற்றில் இருந்து, கேட் வரை ஒரு அழகு. கேட்டை திறந்து உள்ளே சிறிது நடந்து வீட்டின் வாயிற்படியில் ஏறியவுடன் ஒரு அரை வட்ட தாழ்வாரம் போன்ற ஒரு பலகணி . அதில் பிரம்பு நாற்காலிகள், பெரும்பாலும் அங்கேதான் கண்ணாமணி மாமா அமர்ந்து பேப்பர் படித்து கொண்டிருப்பார் . அதை தாண்டி உள்ளே சென்றால், மிக பெரிய ஒரு ஹால், சுமார் 30 பேர் ஒரே முறையில் அமர்ந்து சாப்பிட முடியும். அதை தாண்டி ஒரு விசாலமான சமயல் அறை . ஹாலின் முன்புறத்தில் இரண்டு அறைகள். சமயல் அறையை தாண்டி பின்புறம் கொல்லைப்புறம் , சுற்றிலும் மரங்கள், விளையாட நிறைய இடம், முன்புறம் நித்யமல்லி கொடி பூத்து குலுங்கிவண்ணம் இருக்கும்.உள்ளே நுழயும்போதே நல்ல நறுமணம் வீசும். சுசி மாமியும் விஜயம் மாமியும் , தலை நிறைய அந்த பூக்களை அழகாக தொடுத்து தலையில் வைத்துக்கொண்டு MFAC வருவார்கள். பாட்டி, ராஜகோபால் மாமாவின் அம்மா எப்பொழுதும் அன்போடு வரவேற்பார், அழகான சுசி மாமி, மிக அமைதியானவர், அதிகம் பேசி நான் பார்த்ததில்லை, அழகான சற்றே பருமனான செக்கச்செவேல் என்றிருக்கும் சுதா அக்கா, கச்சலாக ஒடிந்து விழுவது போல சேகர், சற்றே சுருளான தலைமுடியுடன், லைட் பிரவுன் கண்களுடன், கலவென்று பேசும் விஜயம், அவ்வப்போது cryptic கமெண்ட் அடிக்கும் ராஜகோபால் மாமா.
அந்த வீடு எனனக்கு அந்த சின்ன வயதில் அப்படி பிடிக்கும். பெரும்பாலும் அப்பா அம்மாவுடன் நான்தான் போவேன். அப்பா சபா விழயமாகவோ, ஆள்வார்ப்பெட் KBS மாமா வீட்டுக்கு போகும்போதோ சைக்கிளில் என்னை டபுள்ஸ் அடித்து கொண்டு செல்வார்.
என் அம்மா, அந்த வீட்டில் பிறக்காத ஒரு பெண் போல உரிமையுடன் நடந்துகொள்வாள், அவர்களும் அதே மாதிரி மரியாதையுடன் நடத்துவார்கள், சுமங்கலி பிரார்த்தனை, கன்யா பொண்டுகள், நவராத்ரி இப்படி எல்லாவற்றிலும் நானும் அம்மாவும் கண்டிப்பாக ஒரு அங்கமாக, நான் காலேஜ் செல்லும் வரையில் , அதற்கு பின் அம்மா கடைசி வரை,..
அந்த பார்கவியுன் அழகும் கம்பிரமும் வராது. Flagship ஹவுஸ் அது ... நீண்ட நாட்களுக்கு பிறகு, பல வருடங்கள் சென்று நான் மாமாவை பார்க்க சென்றிருந்தேன், பார்கவி மாறியிருந்தாள் அபார்ட்மெண்டாக, ஆட்டோவில் இருந்து இறங்கிய நான் மனதினுள் ஒரு முறை பழைய பார்கவியை பார்த்தேன். மேல் ஏறி ராஜகோபால் மாமாவின் வீட்டிற்க்கு சென்றேன். படுத்த படுக்கையில் அவர். பிடித்துக்கொண்டு கழிவறை செல்ல, கை பிடித்துக்கொள்ள வசதிகள் பல செய்திருந்தார் சேகர். அவரை பார்த்தவுடன், நெஞ்சுக்குள் விம்மி கதறிவிட்டேன் . ஆஜானுபாகுவாக handsome ஆ இருந்த நம்ம ராஜகோபால் மாமாவா இப்படி என்றும், நல்ல வேளை என் அம்மா,அப்பா போய்விட்டார்கள் என்றும் இன்னும் என்ன என்னவோ எண்ணங்கள். மாமா போய்விட்டார் என்ற தகவல் தெரிந்தபோது ஒரு கணம் மீண்டும் பார்கவியில் மாமா, மாமி என் சிறுபிராயம் எல்லாம் சினிமா போல தோன்றி மறைந்தது.
இது போன்ற நட்புகள் இந்த நாளில் உண்டா என்று வியக்க தோன்றுகிறது.அப்பாவிற்கும் மாமாவிற்கு அப்படி ஒரு தோழமை. ஒரு பாகுபாடு கிடையாது. ஒரு அஜெண்டா கிடையாது. இருவருக்கும் financial ஸ்டேட்டஸ் மலைக்கும் மடுவிருக்கும் இருக்கும் வித்யாசம் ஆனால், எங்களுக்கு அந்த உணர்வே இருந்தது கிடையாது. சந்தோஷமாக ஒன்றும் எதிர்பாராத நட்பு, அப்பா, ராஜகோபால் மாமா, mrk மாமா, சம்பத், அம்மா, சுசி மாமி, விஜயம் மாமி, இன்னும் பலர்!!! என் 59 வயது வாழ்க்கையின் மிக முக்கியமான பலர் சென்றுவிட்டனர். இப்போதெல்லாம் காலையில் எழுந்திருக்கும் போது ரமணருக்கு நன்றியுடன், இன்னும் எத்தனை நாள்? என்ற கேள்வியும் கேட்கிறேன். நினைவுகள் மட்டும் இல்லாவிட்டால் வெறுமை இன்னும் வேதனையே.சேகரின் இனிய மனைவி தீபா, அவர்கள் பிள்ளைகள் நல்வாழ்வு பெறுக, எல்லாம் வல்ல ரமணரிடம் நான் வேண்டுகிறேன். 'பார்கவி ' பார்த்துக்கொள்வாள் என்று மனது சொல்கிறது. ஏனென்றால் அந்த வீட்டில் அப்படி ஒரு அன்பு, பாசம் நிறைந்த மக்கள் வாழ்ந்திருக்கின்றனர் .
Comments
Post a Comment
leave your feedback please