சிறுகதை--6-எங்கே எனது ?



சிறுகதை--6  

எங்கே எனது ?????


எங்கே எனது ?????



மாடியில் நடைபயிற்சி செய்துகொண்டிருந்த ராஜிக்கு அந்த பரந்த மொட்டை மாடி மிக 
ஊக்கமூட்டுவதாக இருந்தது. வேலையில் இருந்து சுய ஓய்வு பெற்ற பின்தான் சில விஷயங்கள் கவனத்திற்கு வருகிறது என்று நினைத்தாள். இந்த மாடியை நாம் இத்தனை வருடங்களில் ரசித்தது கிடையாது, ஏன் 
நினைத்தது கூட கிடையாது, அதுவும் மூன்றாம் மாடியில் குடியிருந்து 
கொண்டே நாலாவதாக இருக்கும் இந்த பரந்த திறந்த வெளியான மாடியை சீண்டியது கூட கிடையாது. இப்போது இந்த காலை பொழுது மிக உற்சாகமூட்டுவதாக தோன்றியது. நான்காவது சுற்றை முடிக்கும்போது செல் போனில் மணியை பார்த்தாள்  6.45 

.... ஹ்ம்ம்ம் உலகம் முழுவதும் கொரோனாவில் (விடுப்பு) வீட்டில் இருந்து வேலை 
செய்(வதாக)தாலும், தன்  கணவன் கிளம்ப வேண்டும் என்றவாறு கீழே இறங்கினாள்.
சமையல் அறையில் நுழைந்தவள் தேஜஸ் எக்ஸ்பிரஸ் வேகத்தில், அன்றைய சமையலை மனதில் 
பட்டியல் போட்டு, காய்கறியை fridge இல் இருந்து எடுத்தாள், காபி பில்டர் போட்டுவிட்டு ,
 பாலை காஸில் ஸ்லோவாக வைத்துவிட்டு குளிக்க போனாள். மனம் முழுவதும் மாடியும், ராகமாக ரயில்கள் செல்லும் ஓசையும் நிழலாட, அதையும் மீறி, மஞ்ச மஞ்சேல் என்று காய்கறிகளுடன் எடுத்த எலுமிச்சையின் நினைவும் வர, இந்த எண்ணம் உதித்தது. 'ஹேய் , நான் கண்டிப்பா வடாம் இடப்போகிறேன் ' என்று உறக்கவே சொல்லிவிட்டு 
காலைகடன்களையும் முடித்து குளித்து மீண்டும் சமையல் அறையில் ! சமையலை செய்தவாறே கணவரிடம் சிலாகித்த்தாள் .. 'இந்த மொட்டை மாடி என்னை வடாம் இடேன் இடேங்கிறது, அதனால நான் நாளைக்கு வடாம் 
பண்ணலாம்ன்னு இருக்கேன்' என்றாள், ஆபீஸிற்கு கிளம்பும் அவசரத்தில் இருந்த அவன், 'இதையாவது உருப்படியா பண்ணு ' என்று நக்கலடித்தான், அவள் முகம் மாறியதை கண்டு,ஹேய் நீ ராக் ஸ்டார், பிச்சு ஒதறிடுவே', என்று லேசாக கன்னத்தை கிள்ளிவிட்டு கிளம்பிவிட்டான் கடமை வீரன்...

உற்சாகமாக அன்றிரவே வடாத்து மாவை கிளறி, பிளாஸ்டிக் ஷீட்டை சுத்தம் செய்து வைத்துவிட்டு, விடியற்காலை 5.30மணிக்கு அலாரம் வைத்துவிட்டு உறங்கச் சென்றாள் ராஜி. 
ஆஹா, விடியல் தான் என்ன அழகு, அலாரம் அடித்தவுடன் எழுந்து , முகம் கழுவி, வடாம் பிழிய எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு மாடிக்கு சென்றாள் , பின்னாலே அவள் கணவனும், சாமான்களை சுமந்து சென்றான். சுமார் 45 நிமிடவடாம் வைபவம் முடிந்து இருவரும் வீடு திரும்பினார்.
 ராஜி சொன்னாள்,'நம்ப ரெண்டுபேரும் தினமும் மாடில வாக்கிங் போலாமே' '....ம்ம்ம் போலாமே' என்றான் அவன் ஹிந்து பேப்பரில் இருந்து  கண் எடுக்காமலே!! மதியம் ஒரு மணிக்கு சென்று 
பார்த்தபோது வடாம் வத்தி திருப்பலாம் போல இருந்தது, சென்னையில் கொளுத்தும் வெயிலில் 
நாமே வத்திவிடுகிறோமே என்று நினைத்த ராஜி, ஒரு பெரிய பித்தளை தாம்பாளத்தில் அதை மாற்றி நாளை காயவைப்போம் என்று 
நினைத்தவாறே இட்ட வடாத்தை பிளாஸ்டிக் ஷீட்டுடன் எடுத்துக்கொண்டு கீழே வந்தாள். 
தன் அம்மாவிடம் போனில் விவரம் சொன்னாள், 
போட்டோ எடுத்து பேமிலி வாட்ஸாப்ப் குரூப்பிலும் பகிர்ந்து கொண்டாள். மறுநாள் சென்று (மிக)
பெரிய பித்தளை தாம்பாளத்தில் பாதி காய்ந்த வடாத்தை கொண்டு போய்  மாடியில் வைத்துவிட்டு, \இன்று சாயங்காலம் கண்டிப்பாக அவர் சாப்பிடும்போது பொரித்து போட வேண்டும் என்று குஷியாக நடந்தாள் . வழக்கம் போல நேரம் கடந்தது. மதியம் மூன்று மணிக்கு மாடிக்கு சென்று பார்த்தவளுக்கு அதிர்ச்சி , 
பித்தளை தாம்பாளத்துடன் அவளது கடுமையான உழைப்பும் காணாமல் போயிருந்தது.
அவள் மனம் உடைந்தது. மேலும், அடிக்கடி பால் பாக்கெட்டுகளும் காணாமல் போகும் சம்பவம்
நடக்கிறது என்பதால் சொசைட்டி மேனேஜரிடம் சென்று முறையிட்டாள், வீட்டிற்கு திரும்பிய கணவரிடம் குமுறினாள் . அதன் நடுவில், சம்பந்தமே இல்லாமல் இன்னொரு மாமா ராஜியின் கணவரிடம் வந்து எங்களை தப்ப நினைக்காதீங்க நாங்கள் ஒன்றும் செய்யவில்லை என்று மன்னிப்பு கேட்டுவிட்டு போனார்? சிரிப்பதா!!! இல்லை என் அப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்கிறாரா 
என்று புரியவில்லை..... இரண்டு நாட்களுக்கு வீட்டில், அம்மாவுடன், 
மன்னியுடன் வேடிக்கையும் வேதனையுமாக வடாம் வம்பு நடந்தது! .கணவன் வேறு ‘எங்கே எனது வடாம், மாடியில் காய்ந்த வடாம்’
என்று 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்'படத்தில் வரும்   எங்கே எனது கவிதை'பாடலின் மெட்டில் அடிக்கடி விசில் அடித்து ராஜியை வெறுப்பேற்றினான். நாட்கள் கடந்தன. ராஜி மனதில்அந்த வடாம் திருடனா? திருடி?யை பிடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு உறுதியாய் இருந்தாள்.
2 மாதங்களுக்கு பிறகுமீண்டும் வடாம் இடும் படலம், இந்த முறை,பிளாஸ்டிக் சீட், ராஜியின் பார்வையில்.அவளது சமையல் அறையில் இருந்து தெரியும் வெண்டிலேட்டர் ஜன்னல் அருகில்.... 
வழக்கம் போல் சமையல், கீழ் அப்பார்ட்மெண்டில் இருக்கும் மாமியாரை விசிட் செய்து 
வேலைகளை முடித்த ராஜி, மஹாபாரதம் பார்க்க அமர்ந்தாள். சரசர என்ற சத்தம் கேட்டது. உடனே சென்று சமையல் அறையில் மேல பார்த்தால், ஒரு பெண்ணின் கை நகருவது தெரிந்தது.... சிறுத்தை துரத்தும் மானாய் மாடிக்கு ஓடினாள்.அதற்குள் அந்த பெண் பிளாஸ்டிக் ஷீட்டை வடாத்துடன் 
மடித்து எடுத்துக்கொண்டு   வேகமாக அடுத்த ப்ளாக்கின் படிகளில் இறங்கி விட்டாள் . ராஜி விடவில்லை, பின்னால் சென்று பார்த்தால், அந்த பெண் வேறு யாரோ அல்ல, 
இந்த அபார்ட்மெண்ட் காம்ப்ளெக்சின் அதிகுடிவாசிகள். 
பிளாட் வாங்கிய நாளில் இருந்து அங்கே வசிக்கும் ராஜியின் மாமனாரின் நண்பரின் மனைவி.! ஒரு கேவலமான ஆச்சரியம், மகன் அமெரிக்காவில், கணவரோ கடவுளரை வேரோடு பிடுங்கும் பக்தி 
படைத்தவர்! ராஜி  நேராகவே 'மாமி, என்னோட பழய வடாம்,தாம்பாளம் திருப்பி கொடுங்க, சீசீ நான் 
நினைக்கவே இல்ல! உங்களுக்கு வேணும்னா நான் வடாம் இட்டே கொடுத்திருப்பேன், இப்போ 
புரியறது எப்படி எல்லார் வீட்லயும் பால் திருட்டு போறது, ! வாட்ச்மேன், இஸ்திரி போடறவன், அவன் இவன் திருடி இருப்பான்னு பாத்தா நீங்களா? போயும் போயும் அல்பத்தனமா இருக்கே!' என்று கோவமாக பேசிவிட்டு வீட்டிற்கு திரும்பினாள். 5 நிமிடத்தில் தாம்பாளம், புதிய வடாம் இரண்டையும் கொண்டு வந்து வாசலில் வைத்துவிட்டு போய்விட்டாள் அந்த VK  (வடாம் கள்ளி)வித்தார கள்ளி. 'இந்த குடும்பத்தை சேர்ந்த இந்த மாமியா ' என்று மாய்ந்து போனாள் ராஜி. 
அவள் கணவன் சிரித்துக்கொண்டே,’ எண்ணையை வாணலியில் விட்டுவிட்டு wifeஐ மாடிக்கு 
அனுப்புவாரோ?' என்று கிண்டல் செய்தான்.மூச்சு பேச்சின்றி அடங்கிக்கிடந்து பி பிளாக்.. ...சில நேரங்களில் மனிதர்களை புரிவதே இல்லை. என்ன இல்லை இவர்கள் வாழ்க்கையில் இப்படி ஒரு அல்ப காரியம் செய்ய துணிகிறார்கள்? என்ன என்னவோ 
கேள்விகள் ராஜியின் மனதில் தோன்றியது, இந்த பெண்ணை போன்ற பலருக்கும் வாழ்க்கையில் 
ஒரு த்ரில்லோ இல்லை சர்ப்ரைஸோ இல்லை.வண்டிமாடுபோல தடம் மாறாத வாழ்க்கை , வெகு தொலைவிற்கு சென்று விட்ட குழந்தைகள், தங்களுக்கும் , பிள்ளைகளுக்கும் வாழ்க்கையில்  உள்ள விபரீத வித்யாசங்கள், சொல்ல முடியாமல் மெல்ல முடியாமல் உள்ள சூழ்நிலைகள், எதுவாயினும் சரி, அவளை குற்றம் சொல்லி பயன் இல்லை, ஏனென்றால், இவள் ஒரு திருட்டு குற்றவாளி 
என்றால் நாம் வேறுவிதமான குற்றவாளிகள், சூழ்நிலைகளின் கைதிகள்.என்று நினைத்து 
பெருமூச்சு விட்டாள். எழுந்து  சமையல் அறைக்கு சென்று, ஒரு பிளாஸ்டிக் பையில் கொஞ்சம் 
வடாம், அன்று செய்த ஸ்வீட் கொஞ்சம், எடுத்துக்கொண்டு போய் அந்த மாமியிடம்  கொடுத்து 
விட்டு, ' இங்க பாருங்கோ,  உங்களுக்கு என்ன வேணுமோ என்கிட்டே கேளுங்கோ, 
இப்படி கொஞ்சம் மாடிக்கு வாங்கோ, நம்ம ரெண்டு பரும் வாக்கிங் போலாம், 
எனக்கு உங்களோட தனிமை புரியறது. சின்ன லெவல் தப்பு, நாள் பட பட பெரிய லெவல் 
போய்டும்,
டிபிரெஷன்அப்படி இப்படின்னு ஆரம்பிக்கும். லெட்ஸ் பி பிரெண்ட்ஸ் ' என்றாள் ராஜி. மாமி வயதில் பெரியவள், ராஜியின் கையை பற்றிக்கொண்டு கதறி விட்டார். 
அடைத்து வைத்திருந்த அவரது குற்ற உணர்ச்சியோ, கணவர் இருந்தும், இல்லாத மாதிரி ஒரு 
தனிமையின் கொடுமையோ எதுவோ அது உடைந்து கண்ணில் நீராக பெருகியது. நாத்தழு தழுக்க ஏதோ பேச வந்த மாமி , தடுமாறி 'தேங்க்ஸ் தேங்க்ஸ்' என்றாள் .ராஜியின் மனம் லேசானது, ஏன் என்று அவளுக்கு புரியவில்லை. 'போயிட்டுவரேன் மாமி' என்று திரும்பினாள்.அடுத்தவரின் மனநிலையில் நம்மை வைத்துப் பார்க்கும்போது நிறைய விஷயங்கள் புரிகிறது, அதுதான் தன் மனமாற்றத்திற்கும் காரணம் என்று தோன்றியது. எங்கே எனது கவிதை எங்கோ பாடியது! ராஜியின் 
மனதில் இடைவிடாத எண்ணங்கள்,'இன்றிலிருந்து நானும் உள்நோக்கி பயணித்து என் கவிதையை 
கண்டுபிடிப்பேன். அவர் வரும்போது உற்சாகமாக பேசி இந்த உறவையே நட்பாக மாற்றுவேன், அப்படி செய்தால்தான் 
முதுமையின் தனிமை என்னை பாதிக்காது' என்று தீர்மானித்தாள். 
நம்மில் மாற்றங்கள் வர மற்றவர்களின் அனுபவங்கள் தேவை இல்லை, நம்முடைய சுய சிந்தனைதான் தேவை என்று உணர்ந்தாள். 
கெட்டதிலும் ஒரு நல்லது நிகழ்ந்தது என்று ராஜிக்கு தோன்றியது ! 

Cheers,
Jayy

' There will be times in life when impossibility is felt, but there are dreams and dreams allow us possibility'-Jeffrey David Lang.







  

Comments

Popular posts from this blog

இந்த சந்திப்பு.........

அங்கும் இங்கும் -கல்யாணமே வைபோகமே!

வெகு நாட்களுக்குப் பிறகு