சிறுகதை-7 சரணாகதி !!!! அப்பாவின் wisdom !!!

சிறுகதை-7

சரணாகதி !!!! அப்பாவின் wisdom !!! 

அப்பா மெலிந்த தேகம், வெண்மையான நிறம், சுமாரான உயரம் , கருகருவென்ற தலை முடி, அவரின் மனதை போலவே வெள்ளை வேஷ்டி, வெள்ளை ஷர்ட் , இரண்டும் கதரில்தான் வெகுநாட்கள் வரையில். வாட்ச் கட்ட மாட்டார், வெகுநாட்கள் செருப்பும் போடாமலிருந்தார். என் முதல் சம்பளத்தில் நான் அவருக்கு வாங்கிய பரிசு ஒரு ஜோடி லெதர் செருப்பு ) என் அப்பா எனக்கு ஒரு ரோல் மாடல். கையில் இருக்கிறதோ இல்லையோ கொடுக்க வேண்டும், யாரென்று பார்க்காமலே கொடுக்கும் மனது, என்று சொல்லாமல் நடந்து காட்டியவர்.விஷயத்திற்கு வருவோம், நான் 3ஆவது வகுப்பு,பாலு 5ஆவது, பாப்பு (அப்போதெல்லாம் அவன் பாப்பு தான், இன்றும் எனக்கு அவன் பாப்புதான்), கண்ணன் ,இன்னும் சிறியவர்கள் 'மயிலாப்பூர்  முண்டக்கண்ணி அம்மன் கோயில் ஒட்டிய ஓட்டு வீடு, 30/ முண்டகண்ணியம்மன்  கோயில் ஸ்ட்ரீட் என்ற விலாசத்தில் குடியிருந்தோம்..சம்பவம் நடந்த அன்று நாங்கள் அனைவரும் வெவ்வேறு பள்ளிகளில் இருந்தோம். அன்று அந்த பிரசித்தி பெற்ற அம்மன் கோயிலின் கூரை நெருப்பு பற்றிக்கொண்டுவிட்டது. இதையடுத்து பள்ளியை மூடி எங்களை வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள். அம்மா , அப்பா ஆபீஸ் போயிருந்தார்கள்மீரா, அந்தக்காலத்தில் நம் வீட்டில் ஆல் இன் ஆல் அழகு ராணி.அவள் எங்களை எல்லாம் அழை(இழுத்து)துக்கொண்டு மாதவ பெருமாள் கோயில் தெருவில் இருந்த ராமசாமி சித்தப்பா வீட்டிற்கு போய்வவிட்டாள்.மாலையில் களேபரம் அடங்கியபிறகு வீட்டிற்கு திரும்பினோம்.   அம்மா ஆஃபிஸில் இருந்து வந்துவிட்டாள் ... வழக்கம் போல் அப்பா வரவில்லை.அப்பா ஆஃபிஸில் இருந்து நேராக MFAC(மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப், இங்கு  இவர் கிளப் துவங்கியதில் இருந்து பொருளாளர் , 'சங்கு' என்ற செல்லப்பெயர் )  அன்றய அலுவலல்களை முடித்து சுமார் 9 மணியளவில் லொட லொட என்று சைக்கிளை உள்ளே ரேழியில் வைத்து ஸ்டாண்ட்  போட்டு விட்டு, முற்றத்தில் கால் அலம்ப சென்றவாறே 'மைலி (அம்மாவின் பெயர் மைதிலி, அப்படி கூப்பிட்டு ஒரு நாள் நாங்கள் கேட்டதில்லை) தட்டு போடுஎன்றார். அப்பாவின் தட்டு ஓவல் வடிவத்தில் இருக்கும். அவர் உட்கார்ந்து சாப்பிடும் போது  நானும் பக்கத்தில் உட்கார்ந்து கொள்வேன். அப்பா வந்து சாப்பிட்டுவிட்டு தூங்க போகும் வரை பின்னாலேயே சுற்றி சுற்றி வருவது எனக்கு பிடித்த விஷயம். அம்மா அவரிடம், ' பாவம் குழந்தேள் , பயந்து போய்ட்டா, நீங்களாவது சீக்கிரமா வந்து இருக்கலாமோன்னோ ?' என்று கடிந்து கொண்டாள் . சாப்பிட்டு விட்டு தட்டை அலம்பியவாறே அம்மாவிடம், "எல்லாத்தையும் முண்டக்கண்ணி அம்மன் பாத்துப்பா என்று அடிக்கடி சொல்ற, இதையும் அவ பாத்துண்ட்டா "என்றார். அதே பக்க தாவரத்தில் நின்றிருந்த நான் யோசித்தேன். அப்பாவின் பதிலில்தான் எத்தனை உண்மை. எவ்வளவு அசால்ட்டாக உண்மையை சொல்லிவிட்டார்.. இன்று திரும்பி பார்க்கையில், சரணாகதி, சரணாகதி என்று வெறும் லிப் சர்விஸ் தான்.ஒரு கஷ்டம் என்று வந்துவிட்டால் , 'நான் என்ன பண்ண போகிறேன்' என்று நினைக்கிறோமோ தவிர பகவான் பாத்துப்பார் ,என்று விடுவதில்லையே.ஆனால் அன்று படிப்பிலிருந்து இன்று வரை விட்டுவிட்டேன் பகவானிடம்....... அதுதான் சதுரங்க காய் போல நகர்ந்து கொண்டிருக்கிறதோ  என் வாழ்க்கை.

Comments

Popular posts from this blog

இந்த சந்திப்பு.........

அங்கும் இங்கும் -கல்யாணமே வைபோகமே!

வெகு நாட்களுக்குப் பிறகு