Posts

பிறப்பு நாள் சான்றிதழ் !!!! -சிறு கதை 5

சிறு   கதை  5  பிறப்பு   நாள்   சான்றிதழ்  !!!!  சிம்பிளாக   இருந்த   நம்   எல்லோரின்   வாழ்வில்    விழயங்கள்   மாறிவிட்டது .  விவரம்   தெரியாத   அப்பா ,  மிக   விவரமான   அம்மா ,  அழகான   மூன்று   சகோதரர்கள்  ,  அன்பான   அத்தை  ,  சித்தப்பா ,  மாமாக்கள் ,   சித்திகள்  ,  தோழி / தோழர்கள்   என்ற   உறவுகள்   என்று    சந்தோஷமான   நாட்கள் !!!!  மாறிவிட்டதோ   என்னவோ .  அன்பு   இருக்கிறது   நேரம்   இல்லையோ   என்னவோ !   52 ஆண்டுகளுக்கு முன்  அந்த நாளைய நட்பு , நம்பிக்கையின் அடிப்படையில் தான் .  என்னை பள்ளியில் சேர்க்க கிளம்பிய என் அப்பாவிடம் , பக்கத்துக்கு வீட்டு ரேணுகாவின் அப்பா எஞசாமி மாமா , நம்ம ரேணுவையும் சேர்த்துவிடுங்கள் என்று சொல்ல, கிளம்பினார் என் அப்பா ,  ஏதோ   சென்று   ஸ்கூலில்   சேர்த்தோம்   என்று ,  மூத்த   மகனின்   பிறந்த   நாளில்   இருந்து   மாதமும்   வருடமும்   நினைவுக்கு   வந்து ,  என்னுடைய   பிறந்த   நாள்   மட்டும்   நினைவில்   கொண்ட   அப்பா   தப்பான   பிறந்த   நாளை   பதிவு   செய்து ,  மிக   பெருமையாக   என்னை   ராஜலட்சமி   மாண்டிச்செரி பள்ளளியில்   சேர்த்துவிட்டு   வீட்டிற்கு

நிழல்--சிறு கதை- 4

சிறு கதை 4 நிழல்    அந்த பிப்ரவரி மத இளம் வெயிலில் தான் இவனை நான் முதலில் பார்த்தேன்.இவனைப் பார்த்த நிமிடம் என் உள்ளத்தில் அன்பு  ஊற்றெடுத்தது. துரு துரு என்று அழகான கண்களும் அலைபாய்ந்து என்னைப் பார்த்த பார்வையில் அவனுக்கும் என் மீது அன்பு பாசம், காதல் என்ன வேண்டுமானால் வைத்துக்கொள்ளுங்கள். அன்று ஆரம்பித்த உறவு. ஹ்ம்ம்ம். என்ன சொல்வது. அவன் என் வீட்டின் ஒரு அங்கமானான். கல்லூரி ஹாஸ்டலில் இருந்து போனில் பேசிய என் மகனிடம் இவனைப் பற்றிய விவரங்களை சொன்னனேன். அவனோ, உன்னால் முடியுமா என்று பார்த்து கொள், நல்ல முடிவுதான் அம்மா, இது உன்னுடைய வாழ்க்கை, ஹாப்பி பார் யூ, நான் இந்த வீகெண்ட் சென்னை வரேன், நானும் மீட் பண்ணறேன் என்றேன்'. சின்னவன் என்னைவிடச்  சந்தோஷமானான். ஒரு ஆண்மகன் துணை என்றால் நல்லதுதானே' என்றான். என்  அலுவலக வேலை  நேரம் தவிர நானும்  அவனும் ஒரே குஷிதான். அக்கம்பக்கத்தார்  எல்லாம் முணுமுணுக்க  ஆரம்பித்துவிட்டார்கள். அடுத்தவர் சந்தோஷத்தில் மற்றவருக்கு வருத்தம்தான் பெரும்பாலும், எல்லோரும் நான் இல்லையே. எங்கள் இருவரின் பந்தம் மிக நெருங்கியதாயிற்று. விடியற்காலையில் இருந்து உ

சீ யூ டூமாரோ !!!--சிறு கதை -2

  இரண்டாம்   கதை   ஸீ   யூ   டு மாரோ   வழக்கம்   போல   தினம்   கா லை   எழுந்து ,  தவறாமல்   செய்யும்   பழக்கமான   காரியங்கள் , M.S   சுப்பலக்ஷ்மியின்   சுப்ரபாதத்தில்   ஆரம்பித்துக்   குறை   ஒன்றும்   இல்லை   வரை   அலைப்பேசியில்   ஒலித்துக்   கொண்டிருக்க ,  கூடவே ,  எண்ண    ஓட்டங்களை   நிறுத்தி ,  அப்போதைய   வேலைகளில்,   த்யான   நிலையில்   வீடு   வேலைகள்   செய்து   கொண்டிருந்தேன் .  அன்றைய   சமையல் ,  நடுவில் ,  அமெரிக்காவில்   இருந்து   கண்ணனின்   அழைப்பு ,  அலைப்பேசியைத்   தோளில்    வைத்துக்கொண்டு   அவனுடன்   பேசிக்கொண்டே   தாளித்துக்   கொட்டி   ரசத்தை   மூடி   வைத்து   விட்டு ,  பிரெஞ்சு   வகுப்பு ,  சமஸ்க்ரித   வகுப்பு ,  ஆங்கில   வகுப்பு   என்று   நாள்   கடக்கிறது   இந்த   லாக்டவுன்  . ஆயினும்   மனதின்   ஒரு   மூலையில் ,  கடமைகளை   முடித்துவிட்டேன் ,  இன்னும்   எத்தனை   நாள்   எதற்காக   இந்த   வாழ்க்கை   என்று   கேள்வி   சின்னத்திரி   போல   இம்சிக்காமல்   கேள்வி   கேட்டுக்   கொண்டுதான்   இருக்கிறது . மணி  12.30,  மதிய   உணவிற்காக   மாமி   வந்து   விட்டார் .  அவரின்   வயது  94