இதயத்தின் கிறுக்கல்-5

அமைதியான இந்த ஊரின் காலை மிக அழகாக விடிந்தது தனிமையில் இருக்கும் போது தான் என்னவெல்லாம் சிந்தனை வருகிறது. அழகான ஸ்பானிஷ் பெண்கள், ஆண்கள் ,மிக அழகான இந்த ஹோட்டல், இயற்கையை உள்வாங்கி செடிகளும் மரங்களும் வளர்த்து நம்மை மீண்டும் எங்கோ கொண்டு செல்கிறது. சுற்றிலும் நெடிதுயர்ந்த மலைகள், அதில் படிந்திருக்கும் பசுமை, வருவதா? வேண்டாமா என்று எட்டி பார்த்துக் கொண்டு மேகத்தின் பின்னால் ஒளிந்துகொண்டிருக்கும் சூரியன், மெலிதான இளந்தென்றல் தழுவி செல்லும் போது மனதில் உன்னிகிருஷ்ணனின் 'காற்றே என் வாசல் வந்தாய்' .... கண்ணுக்கு தெரியாமல் தழுவும் காற்று தான் கடவுளோ? அழகான ஊர். அமைதியாக இருக்கிறது. வீட்டின் மேற் கூரைகள் நம் தமிழ் நாட்டின் கிராமத்தை நினைவுறுத்துகிறது. எங்கோ தூரத்தில் பறந்து கொண்டிருக்கும் இரண்டு மூன்று பறவைகள், கழுகுகளா பருந்துகளா என்று தெரியவில்லை. பக்கத்தில் இருக்கும் மலரை விட மென்மையான மிகச் சிறிய பறவை, அந்த பறவையின் பெயர் தெரியவில்லை, பெயர் தெரிந்தால் தான் ரசிக்க வேண்டுமா ? அழகாக வந்து, 'நீ எதற்கு தொலை தூரத்தில் இருக்கும் அந்த கழுகை பார்க்கிறாய், நான் இங்கே இதோ உன் அருகில் இருக்கிறேன்' என்று சொல்வது போல் தலையை சாய்த்து பார்த்துவிட்டு மிக மென்மையாக அந்த மலரில் அமர்ந்து பறந்து சென்று விட்டது. 'இருப்பதை விட்டு இல்லாததை தேடுகிறாயே' என்று சொல்லாமல் சொல்லியதோ? இந்த இறையாண்மையை பார்க்கும் பொழுது மனது ஜிவ்வென்று சிறகடித்து பறக்கிறது, நான் நான் நான் என்றும் எங்கும் வியாபித்து வரவேற்கும் வானமும்,உன்னையும் நான் தொடுவேன் என்று வளர்ந்து கொண்டு போகும் இந்த மலைகளும் ஏதோ ஒரு போட்டியில் போகிறதோ, ஈகோ clashil போய்க் கொண்டிருப்பது போல தோன்றுகிறது .மேகங்கள் நடுவில் தெரியும் நீல வான சிரிப்பு, 'நீங்கள் எவ்வளவுதான் உயர்ந்தாலும் என்னிடம் வர முடியாது தெரியுமா' என்று கேட்பது போல் இருக்கிறது. காபி எஸ்டேட் போய் பார்த்துவிட்டு வரும்போது மனதில் தோன்றியது, 'அவங்க வீட்டில் காபி நல்லாவே இல்ல' என்று கமெண்ட் அடிக்கிறோம், அந்த காப்பியின் பின்னால் எவ்வளவு வேலை செல்கிறது என்பதை பார்த்து அசந்து விட்டேன். விதையில் இருந்து வீடு வரை எவ்வளவு மாற்றம் அடைகிறது நமது கோப்பையில் வரும் காபி. இயற்கையை பார்க்கும் பொழுது 'பட்டாம்பூச்சியின் காலில் காவு '(நன்றி பாலாஜி)போல அப்பொழுது அவ்வப்போது நினைவுக்கு வரும் மகரந்த சேர்க்கைக்கு தேவைதானே, இதோ இந்த மெலிதான பறவையும் அந்த பட்டாம்பூச்சியும் எல்லாமே தேவை தானே என்றென்னும் போது இந்த காபி மட்டும்தான் எனக்கு யாரும் தேவையில்லை என்று சுயமாக (self polination ) இன வளர்ச்சி செய்கிறது என்ற அறிய உண்மை நான் தெரிந்து கொண்டேன். மிக சந்தோஷப்பட்டேன். நடைமுறைக்கு வருவோம்...... ஒரு விஷயம் நன்றாக புரிகிறது நம்மை மீறி இருக்கும் இந்த சக்திகளை பார்க்கும்போது பிரபஞ்சத்தில் மிக மிகத் துளிமணி கூறுகளே இருக்கப் போகின்ற நாம் வாழும் வரையில் நாம் தான் என்று வாழ்கிறோமே, அது எதனால் புரியவில்லை .... தெரியவில்லை முடிக்கத் தெரியாமல் விழிக்கிறேன் நாமே, நமக்கு, நான் தனது என்றே போய்க்கொண்டிருக்கிறோம்!!! வாழ்க்கையில் நடைமுறைக்காக தேவைப்படும் எல்லாம் செய்து விட்டார்கள்! சிட்டிஸின்ஷிப்..... எங்கோ பிறந்து வளர்ந்து நதியைப் போல பல இடங்களில் பாய்ந்து இன்னும் கடலில் சேர்வதற்கு வழி தெரியாமல் வந்து சியாட்டிலில் சேர்ந்து விட்டேன்.இங்கு இன்னும் எத்தனை காலமோ?? இங்கு வந்து நிறைய மனிதர்களை பார்க்கிறேன், இயற்கையை பார்க்கிறேன், ஆனாலும் எல்லாவற்றையும் மீறி எங்கோ மனதில் இருக்கிறது, இது நம்ம ஊர் இல்லை என்று. பிறந்த நாடே எனதில்லை என்று ஆகிவிட்ட பிறகு, நம்மக்கள், நம் நாடு, நம் கோயில்...... ஒன்றும் புரியவில்லை. இந்த நொடிப் பொழுதில் புரிகிறது, வாழ்க்கை வாழ்வதற்கு எதுவும் தேவையில்லை, யாரும் தேவையில்லை ,தனிமையில் இனிமை மிக மிக அருமை அருமை ! இந்த ஞானோதயம் சிறிது நேரத்திற்கு தான் .இந்த கணங்களை ரசிப்போம்! கையில் செல் போன் இருக்கும்வரை நமக்கு தனிமையும் இல்லை இனிமையும் இல்லை.:( டிப்ரெஷன் என்றெல்லாம் கற்பனை செய்ய வேண்டாம்! ஒரு எண்ணவோட்டம் அவ்வளவுதான் ! அன்புடன் ஜெ ....

Comments

  1. Loved this! Etharthamana varthaigal something that runs in all our so call NRIs mind! You have captured it very well! Enjoyed a small stroll through Spanish streets via your words ☺️🙏

    ReplyDelete

Post a Comment

leave your feedback please

Popular posts from this blog

வெகு நாட்களுக்குப் பிறகு

ஆஹா, இது மிக மிக அருமையான யோசனை.

அங்கும் இங்கும் -கல்யாணமே வைபோகமே!