பழைய நினைவுகள் புதிய பதிவில்!

இன்று காலையின் இனிய எண்ணங்கள்.​ 

தினமும் உற்சாகத்துடன் இருக்க என்ன செய்ய வேண்டும். உண்மையாக வாழ்வை நேசிக்க வேண்டும். இதை  சொல்லாமல் சொல்லி வலியுறுத்துவது தான் இயற்கையின் நோக்கம் போல!!!!!
 வாயிற்படியில் இறங்கி வாசலில் கால் வைக்கும்போது சில் என்ற பனித்துளி நிரம்பிய தென்றல் முகத்தை வருடும் போது, குளிர் குளிர் என்று எண்ணாமல் அனுபவிக்கும்போது தன்னால் மனதில் நேசம் பொங்குகிறது. விரைவாக நடந்து ரயில் நிலையத்திற்கு செல்லும் பொது அந்த கணமே வாழ்வின் மிக முக்கிய கணம் போல தோன்றுகிறது. இந்த ரயிலில் பயணிக்கும்போது படைத்தவனையும் அவனது உயரிய படைப்பான நம்மையும் எண்ணி எண்ணி வியப்பேன் தினமும். எத்தனை வித்தியாசமான முகங்கள், உடல் அமைப்புகள், விந்தையான நடைமுறைகள், தனித்துவமான முக பாவங்கள் !!!!! கோபமாக சிலர், நம்மை அளவிடுவது போல சிலர், பெரும்பான்மையான பலர் சின்ன சிரிப்புடன் ஒரு ஸ்னேஹமாக!!!!. உற்சாகத்துடன் ஒரு சந்தோஷ குரலில் ஹாய் என்போர் சிலர். ஒரு ஒரு நாளும் ஒரு அனுபவம். இந்த ரயில் பயணம் 8 நிமிடங்கள்தான். ஆனால் ஒரு உன்னதமான அனுபவம்.


ரயிலில் வந்து இறங்கி பல்கலைக்கழக  வளாகத்தில் ​நடந்து வரும்போது சந்தோஷமும் துக்கமும் மாறி மாறி வந்து தாக்கியது. இந்த இரண்டு வருடங்கள் மிக அழகாக சந்தோஷமாக ஆனால் நிமிடமாக பறந்து விட்டது. நல்ல நண்பர்கள், சிறந்த ஆசிரியர்கள், பரந்த நூலகங்கள், சுத்தமான காற்று, சுறுசுறுப்பான நடை பயிலும் மாணவர்கள், ஆசிய, அமெரிக்கா,  ஆப்பிரிக்க மாணவ சமுதாயம்உயர வளர்ந்த மரங்கள், அண்ணாந்து பார்க்க வைக்கும் கட்டிடங்கள். அமைதியான மதிய நேர வகுப்புகள், எதை சொல்வது எதை விடுவது? 57 வருட வாழ்க்கையில் மிக சிறந்த பருவம் இந்த இரண்டு ஆண்டுகள்தான்.  முடியும் நேரம் நெருங்குவதால் நிறைந்த உணர்ச்சிகள் ஒரு மென்கலவையாய் !!! தூரிகையால் வர்ணங்களை நிறைத்த ஒரு ஓவியம் போல உள்ளது நினைவுகள்.
 நினைவுகள் மட்டும் இல்லாதிருந்தால் வாழ்க்கை என்பது மிக வெற்றாக இருக்கும்.
​​ எதற்காக இங்கு வந்தேன், ஏன் படிக்கிறேன் எதுவும் புரியாமலே படிப்பை முடிக்கும் தருவாய்க்கு வந்து விட்டேன். மேற்கொண்டு, ஒரு வேளை சரஸ்வதி மஹால் நூலகம் மின்வடிவாக்க ஒரு கருவி வேண்டும் என்பதால் தான் ரமணர் என்னை தேர்ந்தெடுத்தாரோ!

பொறுத்திருந்து பார்ப்போம் !!!! போகிற போக்கில் காலம் அழகாக பாதை அமைக்கும். ஒரு சுமையும் எனக்கில்லை. கடப்பேன் ஒவ்வொரு அடியாக!!!!

வாழ்நாள் முழுவதும் நேசமுடன் அழகையும், அன்பையும் ரசித்துக்கொண்டு வாழும் 


ஜெ ......
(14/04/17)

நீரிலே தோன்றி நீரிலே முடியும் நிமிட நேர ​நீர்க்குமிழி ​வாழ்வில் நிலையானது நிமிடத்தில் உயிர் பெற்ற நட்பு' --ஜெ....
இன்றய எண்ணம் !
என்றாயினும் என்னை புரிந்தவர் யாராயினும் வந்து என்னிடம் சொன்னால் உணர்வேனோ  என்னை!

தன்னை புரியாதவர் தானே இங்கு வந்து என்னை புரியவைப்பின்

புரியுமோ என்நிலை.

ஜெ....

08/09/18






Comments

Popular posts from this blog

இந்த சந்திப்பு.........

அங்கும் இங்கும் -கல்யாணமே வைபோகமே!

வெகு நாட்களுக்குப் பிறகு