இயற்கை
இயற்கை சிந்தனை மனிதர்களை மரம் என்று கடிந்து கொள்வது மரத்திற்கு இழுக்கு! வானமாவது எங்கும் வியாபித்து "நான் நான்" என்று சொல்லாமல் சொல்கிறது. மரங்கள் தான் பாட்டுக்கு நின்ற இடத்தில் நின்று ஒரு தொழிற்சாலை போல தன்னுடைய வேலையைத் தன்னுள் இயங்கிக் கொண்டிருக்கிறது. சுற்றுப்புற சூழல் சுத்திகரிப்பு, பிராணவாயுவைத் தந்து, நிழல் தந்து, கனி தந்து, பட்டபின் உடலைத் தந்து - அப்பப்பா! மரங்களே, உங்களை நேசிக்கிறேன்! இந்த பொறுமையான மௌனத்தையும், நிச்சலனமற்ற மனதையும் எனக்குத் தருவாயா நட்பின் பரிசாக? பிராணிகள் - வீட்டில் வளர்பவையோ, காட்டில் திரிபவையோ - "தான் உண்டு, தன் வேலை உண்டு" என்று தான் வாழ்கின்றன. இவற்றுக்கும் காதல், கட்டுப்பாடு, குடும்பம் என்ற அமைப்புகள் உள்ளன. பார்த்துப் பழகி உணர்ந்து கற்றுக்கொள்ள வேண்டிய பல உயரிய பண்புகள் கொண்ட பிராணிகள் இயற்கையின் ஒரு உயரிய படைப்பு. ஏன் இப்படி இயற்கையை வேறுபடுத்தி, "மனிதன் வேறு, இயற்கை வேறு" என்று தனிமைப்படுத்திப் பார்க்கிறேன் என்றோ, மனிதன் ஒரு மட்டமான படைப்பு என்றோ நான் நினைக்கிறேன் என்று தவறாக எடை போட வேண்டாம். இயற்கையின் மிக உயர்ந்த ப...