Posts

Showing posts from September, 2025

இயற்கை

Image
இயற்கை சிந்தனை மனிதர்களை மரம் என்று கடிந்து கொள்வது மரத்திற்கு இழுக்கு! வானமாவது எங்கும் வியாபித்து "நான் நான்" என்று சொல்லாமல் சொல்கிறது. மரங்கள் தான் பாட்டுக்கு நின்ற இடத்தில் நின்று ஒரு தொழிற்சாலை போல தன்னுடைய வேலையைத் தன்னுள் இயங்கிக் கொண்டிருக்கிறது. சுற்றுப்புற சூழல் சுத்திகரிப்பு, பிராணவாயுவைத் தந்து, நிழல் தந்து, கனி தந்து, பட்டபின் உடலைத் தந்து - அப்பப்பா! மரங்களே, உங்களை நேசிக்கிறேன்! இந்த பொறுமையான மௌனத்தையும், நிச்சலனமற்ற மனதையும் எனக்குத் தருவாயா நட்பின் பரிசாக? பிராணிகள் - வீட்டில் வளர்பவையோ, காட்டில் திரிபவையோ - "தான் உண்டு, தன் வேலை உண்டு" என்று தான் வாழ்கின்றன. இவற்றுக்கும் காதல், கட்டுப்பாடு, குடும்பம் என்ற அமைப்புகள் உள்ளன. பார்த்துப் பழகி உணர்ந்து கற்றுக்கொள்ள வேண்டிய பல உயரிய பண்புகள் கொண்ட பிராணிகள் இயற்கையின் ஒரு உயரிய படைப்பு. ஏன் இப்படி இயற்கையை வேறுபடுத்தி, "மனிதன் வேறு, இயற்கை வேறு" என்று தனிமைப்படுத்திப் பார்க்கிறேன் என்றோ, மனிதன் ஒரு மட்டமான படைப்பு என்றோ நான் நினைக்கிறேன் என்று தவறாக எடை போட வேண்டாம். இயற்கையின் மிக உயர்ந்த ப...

கண்கள் இரண்டால்......

கண்கள் இரண்டால்...... இன்றைய வித்தியாசங்கள் எண்ணத்தில் இல்லை, மனிதர்களில்! நான் சொல்வது வித்தியாசமான குணாதிசயங்களை அல்ல... முகங்களை. இங்கு "தில் வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே" பட வசனம் நினைவுக்கு வருகிறது: சிம்ரன் : நீ இதுவரையில் யாரையும் காதலித்தது கிடையாதா? ராஜ் : ஊஹூம். சிம்ரன் : அப்போ கல்யாணம்? ராஜ் : சேச்சே! கல்யாணம் எல்லாம் பண்ணிண்டு எப்படி லைப் முழுவதும் ஒரே பெண்ணைப் பார்த்துண்டு இருக்கிறது? சில பேருக்கு கண் அழகு, சில பேருக்கு உதடு அழகு... இப்போ உனக்கு... சிம்ரன் : (முறைத்துப் பார்த்துவிட்டு) நான் ட்ரெயினுக்கு போறேன். என்றவாறு திரும்பி ரயிலை நோக்கி சிம்ரன் செல்வார். (ஷாருக் கான், கஜோல் நடிப்பில் இது ஒரு ஹாப்பியான படம்) இவர் சொல்வதில் ஒரு உண்மை உள்ளதுதான். எவ்வளவு அழகான படைப்புகள்! சிலருக்கு கண், இன்னும் சிலருக்கு மூக்கு, உதடு என்று அடுக்கிக்கொண்டே போகலாம். கண்கள்தான் எனக்கு மிகவும் பிடித்த அங்கம். நடிகர் ஜெய்ஷங்கருக்கு மிக சிறிய கண்கள், ஆனால் அதில் ஒரு உற்சாகமும் குறுகுறுப்பும் இருக்கும். சிவாஜி கணேசனின் கண்களில் ஒரு கம்பீரம் தெரியும். இப்படி தேடி தேடி கண்களைப் பார்க்கும்...

எண்ணச்சங்கிலியா? எண்ணவிலங்கா

Image
எண்ணச்சங்கிலியா? எண்ணவிலங்கா  எண்ணங்கள் - ஒன்றிலிருந்து பலவாய்! தொடர்பற்ற ஓட்டங்கள், தொடர்ந்து செய்யும் மாற்றங்கள், ஊற்றாக வருகின்ற, வந்தவை அப்படியே சென்று வரப்போவதையும் இணைக்கும் பாலங்கள். அதில் நம் முனைப்பு, அதற்குள் வரும் விளைவுகள் - அப்பப்பா! நட்சத்திரங்களை கூட எண்ணிவிடலாம், ஆனால் எண்ணங்களை? இன்று நான் த்யானம் செய்வதற்குமுன் தீர்மானமாக சொல்லிக்கொண்டேன் - "கண்டிப்பாக நோ thoughts என்று." எகத்தாளமாக சிரித்தது! இன்று மீண்டும், தீர்மானமாக சொல்லிக்கொண்டேன் - "கண்டிப்பாக எண்ணங்கள் வேண்டாம்!" அப்போது என் மனம் எகத்தாளமாக சிரித்தது. அல்லது எண்ணமே சிரித்ததா? எண்ணங்களை நிறுத்த நினைப்பதே ஒரு எண்ணம்தான். "எண்ணம் வேண்டாம்" என்று எண்ணுவதே எவ்வளவு முரண்! இது த்யானம் செய்யும் ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும் அழகான சிக்கல். மனதா? எண்ணமா? ஒரு சிறிய, மிக சிறிய விதை போதும். வ்ருக்ஷம் போல வளர்ந்து கிளைகளுடன் தழைத்து, மீண்டும் வேரூன்றி அடுத்த மரமும் தோன்றி... ஹம்ம்ம்ம்ம்ம்! உங்களில் எவ்வளவு பேர் பார்த்திருப்பீர்களோ தெரியவில்லை. IISC (இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் பெங்களூரு) வள...