Posts

Showing posts from May, 2024

ஆஹா, இது மிக மிக அருமையான யோசனை.

டெல்லியில் இருந்து அண்ணாவும் கிளம்பிவிட்டான். அமெரிக்காவில் இருந்து அக்காவும் புறப்பட்டுவிட்டாள். அப்பாவுக்கு ஒரு நாள் முன்பு மிகவும் உடம்பு நலமில்லாமல் போக, டாக்டர் வந்து பார்த்துவிட்டு சொந்தக்காரங்களுக்கு சொல்லிவிடுங்கள் என்று சொல்லிவிட்டு போனார். அப்பாவிற்கு எப்படி இருந்தாலும் 94 வயதாகி விட்டது, முடிய போகிற வாழ்க்கைதானே என்று எல்லோரும் அலட்சியமாக இருக்கும் பொழுது, அவர் சுறுசுறுப்பாக தனது வேலையை பார்த்துக் கொண்டு காலையில் எழுந்து, குளித்து, பூஜை முடித்து, தன் வேலையை பார்த்துக் கொண்டு தேமென்று இருப்பார். சாயங்கால வேலைகளை பளிச்சென்று நெற்றியில் விபூதி பட்டையாக இட்டுக் கொண்டு அந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்து தொலைக்காட்சியில் இருக்கும் சீரியல்களை ஆறு மணிக்கு ஆரம்பித்து படுக்கச் செல்லும் வரை பார்ப்பார். இதற்கு நடுவில் ஏழே கால் மணிக்கு சென்று உணவு அருந்தி விட்டு வந்து விடுவார். இந்த டிவி சீரியல் பார்க்கும் பொழுது தான் அவருடைய கான்சென்ட்ரேஷன் எவ்வளவு என்று சொல்ல முடியாது. யார் வந்தாலும் தெரியாது, யார் போனாலும் தெரியாது. அணுகுண்டு விழுந்தால் கூட தெரியாது என்று சொல்லலாம். மதிய வேளைகளில் வரும...

வெகு நாட்களுக்குப் பிறகு

வெகு நாட்களுக்குப் பிறகு வெகு நாட்களுக்குப் பிறகு எழுத உட்கார்ந்தேன் எதை எழுதுவது என்று புரியவில்லை. யோசித்துப் பார்த்தால் நிறைய விஷயங்கள் நடந்து விட்டன ஏப்ரல் 17ஆம் தேதி அன்று இந்த அமெரிக்க இமிகிரேஷன் அலுவலகத்தில் குடிமக ளா க ஒரு உறுதி எடுத்துக் கொண்டேன். இன்றிலிருந்து இந்த நாட்டிற்காக நான் சண்டை போடுவதில் இருந்து எந்தவிதமான காரியமும் , இந்த நாடு மேம்படுவதற்காக செய்வேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டேன்.  மனதில் லேசாக வலித்தது  பறவைகளை ப்   பார்க்கும் பொழுது அவர்களுக்கு என்ன விசா தேவையா இல்லை ஒரு குடியுரிமை தான் தேவையா ?  எங்கு வேண்டுமானாலும் பறந்து சென்று கொண்டு சந்தோஷமாக  இருக்கின்றன . மீன்களைப் பார்த்தால் அந்த கடலில் இருந்து இந்த கடலுக்கு ம்,  இந்த கடலிலிருந்து அந்த கடலுக்கு ம், நதியில் இருந்து  கடலுக்கு ம்  என்று சென்று கொண்டே இருக்கின்றன. இயற்கை எல்லா இடத்திலும் தன் வேலையை பார்த்துக் கொண்டு சமத்தாக சென்று கொண்டிருக்கிறது.   ஆனால் இந்த மனிதர்களிடம் மட்டும் எத்தனை கட்டுப்பாடுகள் எத்தனை விதமான கஷ்டங்கள் என்று யோசித்துப் பார்க்கையில...