அம்மா---உன்னை காணாமல்
உன்னை காணாமல் !!!! உலகில் மிக அறிய பெருமைக்குரிய ஒரு பிறப்பு என்றாலே அது தாய்தான்! ஈடு செய்ய முடியாத ஒரு உறவு. என்னுயிர் தந்த என் அம்மாவிற்கு இந்த நினைவஞ்சலி. 23 ஆண்டுகள் சென்றுவிட்டது. நீ இல்லாமல் எது நின்றது ? எல்லாரும் நிறைவான வாழ்க்கையை தான் வாழ்கிறோம். குறை ஒன்றும் இல்லை. அப்பாவின் , உன் ஆசீர்வாதம் நமஸ்கரித்து எழும் போது, 'சமத்தா இரு ஜெயம்மா' என்று சொன்ன வார்த்தைகள் இன்னும் காதில் ஒலித்து கொண்டே தான் இருக்கிறது. இன்னும் சமத்தாகிவிட்டேனா என்று சொல்ல நீ இன்று இல்லை. கணபதி காலனி கால வாழ்க்கையில், நீ பாட்டு கிளாஸ் எடுக்கும் அந்த காட்சியும், உன் கிளாசில் இருக்கும் என் ஸ்நேகிதிகள், அவர்களுடன் நமது குடும்பத்திற்கு உருவான அழகான ஸ்நேகங்களும், இன்னும் எத்தனையோ நினைவுகள் மனதில் கரை புரண்டு ஓடுகிறது. இன்று நாம் எல்லோரும் சொல்லும் 'மதர்'ஸ் டே' ! உன் போன்ற பெண்களுக்கு என்றும் 'மதர்'ஸ் டே 'தான். எங்கள் நால்வரின் இந்த பரிணாம வளர்ச்சிக்கு நீதான் காரணம் ஆயினும் அப்பா உனக்கு தந்த சுதந்திரம், உன் மேல் அவர் வைத்திருந்த trust மிக முக்கிய காரணமும் கூட தான். சம்ப...