சிறுகதை-9 உண்மையில்?
சிறுகதை -9. உண்மையில் ? உண்மையில் ? இந்த மனிதனின் ரெஸ்ட்லெஸ் நடையை பார்த்துக்கொண்டிருந்த எனக்கு சிந்தனைகள் வெகுவாக சுழன்றுகொண்டிருந்தது . நல்ல உயரம் , செக்க செவேல் என்ற நிறம் , முகத்தின் பாதிக்குமேல் மழிக்கப்படாத தாடி , கூர்ந்த நாசி , நிச்சயம் நல்ல குடும்பத்தில் இருந்து வெளியில் வந்தவனோ அல்லது விரட்டப்படவோன தெரியவில்லை . முடியில் சடை போட்டிருந்தது . குளித்தே பல நாட்களாயிருக்கும் என்பதாய் அவனுடைய உடைகள் உணர்த்தியது . அவன் அருகில் ரெண்டு மூன்று புத்தகம் , ஒரு பாக் பேக் . காற்றை நோக்கி வலது கையையும் இடது கையையும் கோபத்துடன் kungfu பாணியில் குத்திக்கொண்டு கத்திக்கொண்டும் முன்னும் பின்னுமாக நடந்து கொண்டிருந்தான் . அவன் ஒரு காலில் ஹவாய் செருப்பும் , மற்றொரு காலில் நல்ல லெதர் பாக் ஸ்ட்ராப் செருப்பும் அணிந்துஇருந்தான் . இவனின் இந்த நிலைமைக்கு யார் காரணம் . அவன் யார் பெற்ற பிள்ளையோ ? எனது தாயுள்ளம் நெகிழ்ந்தது . வாட்ச்மேன் மித்ராவை இன்டெர்காமில் அழைத்தேன் , ' மேல வாப்பா கொஞ்சம் எ