Posts

Showing posts from November, 2024

இதயத்தின் கிறுக்கல்-5

Image
அமைதியான இந்த ஊரின் காலை மிக அழகாக விடிந்தது தனிமையில் இருக்கும் போது தான் என்னவெல்லாம் சிந்தனை வருகிறது. அழகான ஸ்பானிஷ் பெண்கள், ஆண்கள் ,மிக அழகான இந்த ஹோட்டல், இயற்கையை உள்வாங்கி செடிகளும் மரங்களும் வளர்த்து நம்மை மீண்டும் எங்கோ கொண்டு செல்கிறது. சுற்றிலும் நெடிதுயர்ந்த மலைகள், அதில் படிந்திருக்கும் பசுமை, வருவதா? வேண்டாமா என்று எட்டி பார்த்துக் கொண்டு மேகத்தின் பின்னால் ஒளிந்துகொண்டிருக்கும் சூரியன், மெலிதான இளந்தென்றல் தழுவி செல்லும் போது மனதில் உன்னிகிருஷ்ணனின் 'காற்றே என் வாசல் வந்தாய்' .... கண்ணுக்கு தெரியாமல் தழுவும் காற்று தான் கடவுளோ? அழகான ஊர். அமைதியாக இருக்கிறது. வீட்டின் மேற் கூரைகள் நம் தமிழ் நாட்டின் கிராமத்தை நினைவுறுத்துகிறது. எங்கோ தூரத்தில் பறந்து கொண்டிருக்கும் இரண்டு மூன்று பறவைகள், கழுகுகளா பருந்துகளா என்று தெரியவில்லை. பக்கத்தில் இருக்கும் மலரை விட மென்மையான மிகச் சிறிய பறவை, அந்த பறவையின் பெயர் தெரியவில்லை, பெயர் தெரிந்தால் தான் ரசிக்க வேண்டுமா ? அழகாக வந்து, 'நீ எதற்கு தொலை தூரத்தில் இருக்கும் அந்த கழுகை பார்க்கிறாய், நான் இங்கே இதோ உன் அருகி...