Posts

Showing posts from August, 2023

அங்கும் இங்கும் -கல்யாணமே வைபோகமே!

அங்கும் இங்கும் -கல்யாணமே வைபோகமே!  இடம் சென்னை-தமிழ்நாடு-இந்தியா  மயிலாப்பூர் தெற்கு மாடவீதியில் வெள்ளீஸ்வரர் கோயில் வாசலில் இருக்கும் பூக்காரி செங்கமலம், சாமிநாதனை பார்த்து சிரித்தவாறே 'என்ன அய்யா கல்யாணமா ?'என்றாள்.'அமாம்.பத்திரிகை வந்தவுடன் தரேன், கண்டிப்பா வந்துடு. கல்யாணம் முடியறவரைக்கும் கூட ரெண்டு முழம் பூ குடுத்துடு' என்றவாறே பூவை வாங்கிக்கொண்டு நகர்ந்தார். கோயில் வாசலில் வெளியே வந்து கொண்டிருந்த குருக்களும் 'கல்யாணமா? கேள்விப்பட்டேன், சந்தோஷம் மாமா'! என்றார். 'ஆமாம்' வாங்கோ, கண்டிப்பா' என்றார் ஸ்னேஹமாக சிரித்துக்கொண்டே. வீட்டிற்கு வந்தவுடன், தன்னுடைய நோட்டுப்புத்தகத்தில் கல்யாண அழைப்பிதங்கள் பக்கத்தை திறந்து, பூக்காரி செங்கமலம் , கோயில் விஸ்வநாத குருக்கள் என்று எழுதிக்கொண்டார். உள்ளிருந்து தண்ணீர் கொண்டுவந்த மனைவியிடம் 'லட்சுமி, இதுவரைக்கும் 321பேர் ஆயிடுது, உனக்கு தெரிஞ்சவா யாராவது இருந்த இந்த பக்கத்தில எழுதிடு, யாரும் விட்டு போய்ட கூடாது கேட்டியா,' என்றார். லக்ஷ்மியும் 'நீங்க சொல்றது ரொம்ப வாஸ்தவம், இருந்திருந்து முதல் கல்யாணம...