நாலு பேர்
நாலு பேர் வெகு நாட்களாக ஒரு கேள்வி ! எவ்வளவு நாட்களாக என்று கேட்கிறீர்களா? சிறு வயதிலிருந்தே ! இந்த நாலு பேர் யார்? எப்ப பாத்தாலும் நாலு பேர் என்ன சொல்லுவா, நாலு பேர் பாத்தா என்ன ஆகும், நாலு பேர் எப்படியெல்லாம் பேசுவா ? இன்னிக்கு நான் பார்க்க ஆசைப்படறேன் அந்த நாலு பேர் யாரு? சின்ன வயதில் போட்ட விதை ஒரு தன்னம்பிக்கையுடன் எதையும் சாதிக்க, தன்னிச்சையாக ஒரு முடிவெடுக்க இல்லை நம் மனதில் பட்டதை சொல்லவும் தயக்கம், பயம், குழப்பம், கோழைத்தனம், திரைமறைவுக்கு பின்னால் ஒரு நடத்தை, முன்னே ஒரு நடத்தை.... இன்னும் என்ன என்னவோ சொல்லிக்கொண்டு போகலாம்.எங்கோ கண்ணுக்கு தெரியாத நாலு பேருக்கு பயப்படும் மனிதர்கள், தனிமையில் கொலை கூட செய்ய தயங்க மாட்டார்கள். ஏன் இந்த நாலு பேர் நம் வாழ்வை சிதைக்க அனுமதிக்க வேண்டும்.திரைமறைவிற்கு பின்னல்...hypocracy ! நல்ல பெரிய பொசிஷனில் வேலை பார்ப்பவர்கள், சமுதாயத்தின் மேல் மட்டத்தில் மிக மதிக்கப்பட்டவர்கள் , பக்திமான்கள், நல்ல குடும்பத்தை சேர்ந்த நல்லவர் என்று மதிக்கப்படுகிறவர்கள், பதிவிரதையாக நடை உடை பாவனைகள் கொண்ட பெண்கள், நான் குறிப்பிட்டிருக்கும் இந்த உதாரணங்களில் பெரும...