சில்வியா-
சில்வியா சில்வியா! இந்த பெயரை கேட்கும்போது என்ன தோன்றுகிறது? இளமை துள்ளலுடன்,சிரிக்கும் கண்களை கொண்ட ஒரு அழகிய இளம் பெண் என்ற எண்ணம் தோன்றுகிறதல்லவா? இங்குநான் எழுதும் இந்த சிறு குறிப்பு சில்வியாவை பற்றித்தான் தினம் நீச்சல் குளத்திற்கு நீந்த போகும் நான், அங்கு தண்ணிரில் உடற்பயிச்சி வகுப்பும் சேர்ந்தேன். இங்குதான்இவளை சந்தித்தேன். தண்ணீரில் இறங்கி மெதுவாக warm up செய்து விட்டு, ஸ்னேஹமாக ஒரு புன்சிரிப்பு ! மெல்ல ஒரு புன்னகை பரிமாற்றம். பிறகு நல்ல கணீரென்ற குரலில்,'so நீஎந்த நாட்டிலிருந்து வருகிறாய்.? இந்தியாவாகத்தான் இருக்கும், ஏனென்றால் உன்முகத்தின் மினுமினுப்பே சொல்கிறது. உங்கள் தோல் எப்படி இந்த தரம் மிகுந்த அமைப்பைகொண்டிருக்கிறது' என்றாள் கண்களால் சிரித்துக்கொண்டே. நானும், 'வெயில்,சீதோஷண நிலை, எங்கள் உணவு பழக்கம், இறை நம்பிக்கை எல்லாம் காரணமாக இருக்கலாம்'என்று எனக்கு தெரிந்ததை சொல்லி வைத்தேன். ஆனால் உள்ளுக்குள் மிக்க சந்தோஷம் ஒருவெள்ளைக்காரி நமது தோல் பற்றி இவ்வளவு சிலாகிக்கிறார் என்று பெருமை! ( பிரிட்டிஷ்ஆதிக்க அடிமைத்தனம் இன்னும் விலகவில்லையோ?) உடற்பயிற்சியும் செய...