Posts

Showing posts from October, 2020

பெற்றால் தான் பிள்ளையா -சிறுகதை-10

15/10/20 காலையில் இருந்து ஒரே பரபரப்பு . 7 கப் கேக் ஸ்வீட் செய்தாகிவிட்டது. டிரைவர் தனசேகர் கொண்டுவந்த மல்லிப்பூவை சஷ்டியுடன் சேர்ந்து நல்ல நெருக்கமாக தொடுத்து எடுத்துவைத்துவிட்டேன். சுவேதா  என்னுடைய பிளவுசை டைட்டாக பிடித்துவைத்தாள் . அந்த வெங்காய கலர் ஜெய்ப்பூர் காட்டன் சாரீ நிச்சயமாக அவளுக்கு நன்றாக இருக்கும் என்று ஒரு மெல்லிய சந்தோஷம் புன்னகையாக என் முகத்தில் தவழ்ந்தது. பிள்ளை வீட்டார் 3.30 மணிக்கு வந்துவிடுவார்கள். காபி பில்டர் போட்டுவிட்டு, கொஞ்சம் ஸ்னாக்ஸ் ஸ்விக்கியில் ஆர்டர் செய்து  விட்டேன். நடு நடுவே வீடு சமையல் வேறு. எல்லாவற்றையும் முடித்து நான் புடவை மாற்றிக்கொள்ள சென்றேன். ஜூஹி இன்னும் வரவில்லையே என்று மொபைலில் வாட்சப்பை (whatapp) அடிக்கடி பார்த்துக்கொண்டிருந்தார் இவர். எங்கள் இருவருக்கும் இன்று மிக முக்கியமான நாள். ஜூஹியை பெண் பார்க்க வருகிறார்கள்.  பிள்ளைகள் எல்லாரும் வெளிநாட்டில் வாசம். நங்கள் இருவரும் இங்கே இந்தியாவில். ஆதரவாக அன்புடன் பேச துணையாக...